தொடர்கள்
கதை
தோற்றப்பிழை - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20240626225857661.jpeg

தூரத்தில் வந்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் கந்தசாமியை பார்த்ததும், அவசர அவசரமாக ஹாட் பாக்ஸில் உள்ள இட்லிகளை எண்ண தொடங்கினாள் ரஞ்சிதம்..

அவன் சாப்பிடவும் , அவன் வீட்டுக்கு பார்சல் எடுத்து போக இருபது இட்லிகளும் ,அதற்குத் தேவையான சாம்பார் சட்னி பாக்கெட்கள் தயாராக இருந்தது. .நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அந்த ஊரின் மெயின் ரோட்டில், அந்த அரச மரத்தடியில் ,அவள் இட்லி வியாபாரம் ஆரம்பித்த நேரம்,

கந்தசாமி வயது நாற்பது இருக்கும்;. ஆனால் அப்படித் தெரியாது. ;.அவன் கிராப்பும், மீசையும் ,ஆஜானுபாவ உடம்பும், விறைப்பாக இருந்த கம்பீரம் , உடை எல்லாம் சேர்ந்து அவன் போலீஸ் என நினைக்க வைத்தது.”

“யாரைக் கேட்டு இங்குக் கடை நடத்தற? இங்கேயெல்லாம் கடை போட கூடாது ?”

“இத பாரு புள்ள; நான் இந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள்.;அடிக்கடி ரோந்து வருவேன் என்று சொன்னதும் அவசர அவசரமாக அவன் கையில், நூறு ரூபாய் கொடுத்து அவனை அன்று அனுப்பினாள்.

அப்படி நாம் கொடுக்க முடியாதுன்னு சொன்னா, அடுத்த நொடியே சாமான்கள் எல்லாத்தையும், தெருவில தூக்கி போடுவாங்க.?

கூடவே கந்தசாமி சொன்ன தகவல், அவளுக்கு இன்னும் பீதியை கிளப்பியது.

“இத பாரு ரஞ்சிதம் ! இன்னி வரைக்கும், இது இன்ஸ்பெக்டர் கவனத்துக்குப் போகல!.”

,“நீயோ சிவப்பு தோல் உடம்புகாரி. கல்யாணமாகி இரண்டே வருடத்தில், கணவன் ஒரு கார் விபத்தில், அல்ப ஆயுசில் காலமானது; அனாதையான நீ வாக்கப்பட்ட ஊரில் ,இருக்கப் பிடிக்காமல், இந்த ஊரில் வந்து கடை போட்டு இருக்கிற விஷயமெல்லாம் அவருக்குத் தெரியாது.” ஆளு மோசம் !”

மாலை 6மணியிலிருந்து இரவு 10 மணி வரை கடை நடக்க வேண்டிய சூழ்நிலை .

ஆனால் தினமும் மாலை 7மணிக்கு வந்து ,அங்கு உக்கார்ந்து இரவு பத்து மணிக்கு, தினமும் ரூபாய் நூறு வாங்கிக்கொண்டு செல்லும் கந்தசாமி மீது ரஞ்சிதத்துக்கு எரிச்சல் வந்தது..

வியாபாரத்தில் இன்னும் லாபம் வரலே; ஆனாலும் இந்தப் போலீஸுக்கு தினமும் மாமுல் அழ வேண்டி உள்ளதே.நம் நிலைமை இப்படி ஆச்சே?.

இவங்க மாதிரி ஆளுங்க கிட்ட மோத ஒன்னு, பணப் பலம் வேண்டும்.; இல்லை அரசியல் பின்புலம்இருக்கணும்.;ஒன்னும் இல்லாதவங்க பாடு இப்படித்தான்.?

அந்த வழியே போகும் வெளியூர் மக்கள் , உள்ளூர் மக்கள் இவள் கடைக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள். அவ்வளவு ருசி அத்துடன் கனிவான பேச்சு. வாடிக்கையாளர்களின் வருகை அதிகமாக வர ஆரம்பித்தது.

கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் டவுனுக்குப் போய் நல்ல கடையா பார்த்து வியாபாரத்தைப் பெருக்கணும்.!

நினைப்பு பொழைப்பே கெடுக்குமாம்;. வியாபாரத்தில் வருகிற பணம் வரவுக்கும் செலவுக்கும், சரியா இருக்கும் போது, இதிலே நான் எங்கே டவுனுக்குப் போய்க் கடை போடுவது.?

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் கந்தசாமி, “. நான் இங்கேயே சாப்பிட்ட பிறகு , என் வீட்டுக்கு இட்லி பார்சல் கொடுத்துடு!” கண்டிப்புடன் சொல்லவே,

ஒரு இட்லி குறைந்த பட்சம் பத்து ரூபாய்; இருபது இட்லி 200 ரூபாய் ஆகுது. கையில வேறே பணம். மொத்தம் முன்னூறு ரூபாய்; எதிர்த்து கேட்க நினைத்தாலும் வேறு வழி தெரியவில்லை அவளுக்கு..

எல்லா இடத்திலும் விட இந்த மாமூல் கொடுமையா இருக்கே?

சில நாள் யூனிஃபார்மில் இருப்பான். சில நாள் மப்டியில வருவான்..

சில பேர் “நீ அவனை வைச் சுருக்கியா” என்று இலை மறை காயாக இவளிடம் கேட்டும் விட்டனர். “உலகம் ஆயிரம் சொல்லட்டமே! உனக்கு நீ தான் நீதிபதி “என்ற பாடல்படி தான் அவள் இருந்தாள்.

அதே நேரம், கந்தசாமி கடை நேரத்தில் இருப்பது அவளுக்குப் பாதுகாப்பான உணர்வைதான் கொடுத்தது. என்பதையும் மறுக்க முடியாது. .

மூன்று மாதம் ஆகியிருக்கும். ரஞ்சிதாவுக்கு இப்போது வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது;.

ஆனால் வழக்கமாக ஆஜராகும் கந்தசாமி மட்டும் கடந்த பத்து நாளாக ஆளை காணும்? எங்குப் போயிருப்பான் ?

அவன் பத்து நாள் லீவு போட்டு வெளியூர் போய் விட்டான்; என்று ஒரு தகவல்;

இல்லை! இல்லை! அவன் இந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டான் என்ற தகவல்.

நல்ல வேளை கந்தசாமிக்கு, தினமும் 200 ரூபாய்க்கு இட்லி லஞ்ச பணம் நூறு கொடுக்க வேண்டிய நிலை இனி இருக்காது; என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். .

அன்று இரவு எட்டு மணி அளவில் “தங்கச்சி தங்கச்சி” என்கிற குரல் கேட்டது.

முதல் முறையாகத் தன்னைத் தங்கச்சி என்று இந்த ஊரில் யார் கூப்பிடுகிறார்கள்? என்று பார்த்த போது அங்கே கந்தசாமி நின்று கொண்டிருந்தான் மப்டியில்.

“என்னை மன்னிச்சிடு தங்கச்சி! நீ இப்படி இந்த நிலைமைக்கு வர காரணம் எங்க அண்ணன் தான் .” ..

அன்னிக்கு எங்க அண்ணன் வேகமாகப் போதையில் காரை ஒட்டி, உன் புருஷன் பாலுவை சாகடிசிட்டு போயிட்டாரு..

நீ தான் பாலு பொண்டாட்டின்னு தெரிஞ்ச பிறகு .மூணு மாசமா எங்க அண்ணன் கிட்ட வாதம் செய்து உன் நிலைமையைச் சொல்லி இன்னிக்கு இரண்டு லட்சம் வாங்கிட்டு வந்தேன்..

“அதே சமயம் நீ சின்னப் பொண்ணு! உன்னைபலாத்காரம் பண்ண பக்கத்து ஊர்ல, சிலபேர் திட்டம் போட்டு இருந்தாங்கன்னு என் காதில் செய்தி வந்தது.

அதை முறியடிக்கவும , அதே சமயம், உனக்குப் பாதுகாப்பாக இருப்பது நல்லது என நினைச்சுக் கடை முடியும் நேரம் வரைக்கும் இருந்தேன்.” கடைசி வரைக்கும் அவங்க எண்ணம் பலிக்கல.”

“உன்னையும் என்னையும் சம்பந்தப்படுத்தி, ஊர் வம்பு பேச்சு என் காதுக்கும் கேட்டது. அதை ஒரு பொருட்டாக நினைக்கல

“மூணு மாசமா வேண்டுமென்றே நான் இட்லி சாப்பிட்டதற்குப் பணம் கொடுக்கமா இருந்தது; லஞ்சமாகப் பணம் ஒன்கிட்ட வாங்கினது ,எல்லாத்தையும் சேர்த்து என் பங்காக, என் தங்கச்சிக்கு என் அன்பளிப்பு ஒரு லட்சம் கொடுக்கத்தான்

இந்த நாடகம்.

அண்ணன் கொடுத்த இரண்டு லட்சமும் ,உன் அக்கவுண்ட்டில் சேர்த்து இருக்கேன். உன் ஃபோனில் மெசேஜ் இருக்கும் பாரு.”

“ இனி நீ இங்கு இருக்க வேண்டாம்! இந்தப் பணத்தில் உன் ஆசைப்படி டவுன்ல எனக்குத் தெரிஞ்ச இடத்தில கடை ஏற்பாடு பண்ணி தரேன்.”

“கூடிய சீக்கிரம் உன்னைப் புரிஞ்சவன் ஒருத்தன் கிட்ட ஒன்னை ஒப்படைக்கப் போறேன். எங்க குடும்பம் செஞ்ச பாவ செயலுக்கு, என் மூலம் பிராயச்சித்தம்”.

ரஞ்சிதம் கண்களில் கண்ணீர் “அண்ணே என்னை மன்னிச்சுடு அண்ணே!

ஒங்கள தவறா புரிஞ்சுகிட்டேன்!.”

“ஒங்க நல்ல எண்ணத்துக்கு முன் நான் தூசி! ஒருவர் தோற்றம் பற்றித் தப்பா கணக்குப் போட்டேன். இது என் தோற்றப் பிழை அண்ணே .”

இனி ரஞ்சிதம் எதற்கும் கவலைப்படாமல் தைரியமாக இருப்பாள்;.

அவளுக்குத் தான் அண்ணன் என்கிற உறவு கிடைத்து விட்டதே!