தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20240620184410791.jpeg

சிக்கிய ரூபாய் 4 கோடி யாருடையது, நைனார் நாகேந்திரனிடம் விசாரணை.

அதான் நான் அவன் இல்லைன்னு சொல்லிட்டாரே !!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் தப்பிவிட கூடாது என்று தற்போதைய சென்னை கமிஷனர் அருணை சந்தித்து வலியுறுத்தினேன் தொல் திருமாவளவன்.

ஓ அதனால்தான் சுட்டு பிடிக்கிறாங்களா !!

கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் முதல்வர் ஸ்டாலின்.

தீர்மானம் எல்லாம் எதுக்கு ராகுல் காந்திக்கு ஒரு போன் போட்டா முடிஞ்சு போச்சு விஷயம் , அதுதானே கூட்டணி தர்மம் !!

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டண உயர்வு.

காமராஜர் ஆட்சி காமராஜர் பிறந்த தினத்தில் இப்படி ஒரு அறிவிப்பு பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு !!

இந்து மதத்தைச் சேர்ந்த மனைவியே தன் வளர்ச்சிக்கு காரணம் என்கிறார் டிரம்ப் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்.

அமெரிக்காவில் இந்துத்துவா ஆர் எஸ் எஸ் சதின்னு அறிக்கை வரப்போகுது !!

சிறுபான்மையினர் எங்களை இன்னும் நம்பவில்லை முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.

இன்னும் மோசமா பாஜகவை திட்டனும் போல இருக்கு அப்பவாச்சும் நம்புவாங்களா ?

தப்பிச்செல்லும் ரவுடிகளை சுட்டு தான் பிடிக்க வேண்டும் சட்ட அமைச்சர் ரகுபதி.

எதிர்க்கட்சியா இருக்கும்போது இப்படி பேசி இருக்கீங்களா ?

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை.

தமிழ்நாடு அமைதி பூங்கா ஒரு தரம் தமிழ்நாடு அமைதி பூங்கா இரண்டு தரம் தமிழ்நாடு அமைதி பூங்கா மூன்று தரம் அவ்ளோதான் எல்லாரும் கிளம்புங்க கிளம்புங்க !!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களை பெறும். ஈ வி கே.எஸ் இளங்கோவன்.

அப்ப கூட காங்கிரஸ் அதிக இடங்கள் பெறும் சொல்ல மனசு வரல !!

கர்நாடக அணையில் நிரம்பினால் தண்ணீரை திறந்து விட்டு தான் ஆக வேண்டும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்.

எப்படி தத்துவமா பேசறார் அமைச்சர் திறந்து விடவே வேண்டாம் அதுவா வழிந்து ஓடி வரப்போகுது இது கூட அமைச்சருக்கு தெரியல !!

என்கவுண்டர் கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தை கட்சி நிலைப்பாடு தொல்.திருமாவளவன்.

தலைவரே தீவிர நடவடிக்கை எடுக்க சொல்லி சொன்னதே நீங்கதான் !!

சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு.

31 நாள் 133 கொலை இந்த சட்ட ஒழுங்கா தானே தலைவரே சொல்றீங்க !!

எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி அன்புமணி ராமதாஸ்.

ஆமா டெபாசிட் கிடைத்தது இல்ல !!

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு 1003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன அமைச்சர் சேகர்பாபு தகவல்.

அது என்ன ஆயிரத்து மூணு கணக்கு !!

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது சீமான்.

அப்ப காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி உண்டா !!

கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் சிறை அபராதம் திருத்தப்பட்ட சட்டப் பிரிவுகளை வெளியிட்டது அரசு.

ஆனா குடிச்சா பத்து லட்சம் உண்டு தானே !!

நீட் தேர்வு நடைமுறையில் தோல்வி இல்லை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்

அப்படியா சொல்றீங்க !!