தொடர்கள்
பேரிடர்
" கொட்டும் மழை ... நீலகிரி ஆபத்தில் " - ஸ்வேதா அப்புதாஸ் .

தென் மேற்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட குறைவாக இருக்கும் என்று தான் வானிலை மையம் கணித்தது .

20240619175138379.jpg

அது போல ஜூன் மாதம் சற்று குறைவாகவே பருவ மழை பெய்தது .

ஜூன் கடைசி வாரம் துவங்கி ஜூலை முதல் வாரத்தில் மழை கேரளாவில் வயநாடு துவங்கி மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் சற்று அதிகமாக பெய்ய நீலகிரி கூடலூரை புரட்டி போட்டது .

தற்போது கடந்த வாரம் துவங்கிய மழை மீண்டும் நீலகிரியை புரட்டி போட்டது .

நீலகிரி அணைகள் நிரம்பவில்லை என்ற நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை துவங்கிய மழை பள்ளிகள் விடுமுறை விடுமளவுக்கு கொட்டி கொண்டிருக்கிறது .

20240619175203836.jpg

நீலகிரி அணைகள் நிரம்பி வழிந்தன .

அவலாஞ்சி அணை காய்ந்து வருகிறது என்ற செய்தியை புரட்டி போட்டு 339 மில்லி மீட்டர் மழை இந்த பகுதியில் கொட்டி தீர்த்தது .

இதே போல அப்பர்பவானி , அவலாஞ்சி ,எமரால்டு ,இத்தலார் பகுதியில் அதிகமான மழை கொட்டியது .20240619175225938.jpg

ஊட்டி குந்தா இத்தலார் சுற்றிய கிராமங்களில் நில சரிவு ஏற்பட்டுள்ளது .

மே , ஜூன் மாதத்தில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருந்தனர் ஆனால் பெரும் மழை பெய்தது பாதிப்பு இல்லை .

தற்போது பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு படையினர் முழுமூச்சில் கூடலூர் ஊட்டி பகுதியில் ஆபத்தில் இருந்து மக்களை மீட்டு வருகின்றனர் .

மேல் கூடலூரில் நகராட்சியின் 20 வது வார்டு பகுதியில் உள்ள கோக்கல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .

கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கும் மழையால் இந்த பகுதியில் உள்ள 15 வீடுகள் விரிசல் ஏற்பட்டு சில வீடுகள் இடிந்து விழுந்து விட்டன .

இங்கு வாழ்ந்த குடியிருப்புவாசிகளை துரிதமாக நகராட்சி அப்புறப்படுத்தி காப்பாற்றியுள்ளனர் .

20240619175256989.jpg

இந்த பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஆஷா பவன் மற்றும் அவே மரியா கன்னியர் இல்லம் திடீர் என்று விரிசல் ஏற்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளாகியது .

இங்கு இருந்த கன்னியர்களும் முதியோர்களும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் .

நாம் ஆஷா பவன் மதர் சுப்பீரியர் பிலோமினா அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம் ,

" எங்க இல்லம் மற்றும் முதியோர் இல்லமான ஆஷா பாவனை கடந்த நாற்பது வருடமாக நடத்தி வருகிறோம் .மிக பெரிய மழையை சந்தித்துள்ளோம் .ஆனால் இப்பொழுது தான் இப்படி பட்ட மிக மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது .பலத்த மழையால் நில சரிவு போல ஏற்பட்டுள்ளது அதனால் தான் இப்படி விரிசல் ஏற்பட்டுள்ளது .

2024061917550472.jpg

எங்க இடத்திற்கு கீழ் அரசு மருத்துவமனை கட்டும் பணியால் மண் இளகி விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் .எங்க 43 முதியவர்களை சிலரை அவர்களின் இல்லத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம் . எங்க மைசூர் இல்லத்திற்கு சிலரை அனுப்பியுள்ளோம் .

சிலர் இங்குள்ள வேறு இல்லங்களில் சேர்த்துள்ளோம் .அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்" என்று கூறினார் .

2024061917540667.jpg

ஆவே மரியா கன்னியர் இல்லத்தின் தலைவி அருட்சகோதரி மேரி குரியகோஸ் கூறும்போது , " எங்க இல்லம் திடமான ஒன்று தான் இரண்டு வாரங்களுக்கு முன் எங்க நிலத்தில் விரிசல் ஏற்பட்டது .கீழ் பகுதியில் மருத்துவமனை கட்டுமான பணியால் ஜே .சி .பி கொண்டு பாறைகள் அகற்றி மண் எடுக்கப்பட்டன .இதை பற்றி அரசுக்கு தெரிய படுத்தி அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு சென்றனர் .அதற்குள் பெரும் மழையால் இப்படி விரிசல் ஏற்பட்டுவிட்டது . எங்களையும் முதியோர்களையும் இறைவன் காப்பாற்றிவிட்டார் .அரசு உதவி செய்யவேண்டும் " என்று கூறினார் .

கூடலூர் நகர மன்ற தலைவி பரிமளாவை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20240619175554102.jpg

" கடந்த மாதம் முதல் கூடலூர் மிகவும் பாதித்து விட்டது .

நகராட்சியின் சிறந்த பணியால் கால்வாய் தூர்வாரப்பட்டதால் நகரில் எந்த பாதிப்பும் இல்லை . முன்னாள் ஆணையாளர் பிரான்சிஸ் நிறைய சிறந்த பணிகள் செய்துள்ளார் .

இந்த பலத்த மழையால் கோகால் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .

ஆஷா பவன் முதியோர் இல்லம் மிக பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு பாதித்துள்ளது .நல்ல வேளை அங்கு இருந்த முதியவர்களை மைசூர் இல்லத்திற்கும் புஷ்பகிரி மருத்துவமனையில் பாத்துக்கப்பாக சேர்த்துள்ளோம் .

20240619175635805.jpg

அதே போல தொரப்பள்ளி பகுதியில் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டான எல்லா உதவிகளும் நாங்கள் செய்கிறோம் .

அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உதவி புரிவார்கள் " என்று கூறினார்.

கோகால் வாசியான ரோட்டரி சங்க செயலர் கிஷோர் கூறும் போது ,

" பலத்த மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது .எங்க பகுதியில் உள்ள ஆஷா பவன் இல்லம் மிகவும் பாதித்துள்ளது . அதே பகுதியில் பதினைந்து வீடுகள் விரிசல் ஏற்பட்டு சில வீடுகள் இடிந்து விட்டன .அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

எங்க ரோட்டரி சங்கம் மூலம் உதவிகள் செய்கிறோம் " என்று கூறினார் .

மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது யானைகள் தண்ணீரில் நீந்தி கடக்கிறது .

கூடலூர் பகுதியில் ஸ்ரீமதுரை ,பாடந்துறை ,,ஆவயல் ,குற்றி முச்சி ,கம்மாத்தி ,புத்தூர் வயல் ,குனில் வயல் , இரு வயல் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது .

நாம் கூடலூர் எம் .எல் .ஏ .பொன் ஜெயசீலனிடம் பேசினோம் ,

2024061917584880.jpg

" நான் சென்னைக்கு சென்றுள்ளேன் கோகால் பகுதியில் உள்ள ஆஷா பவன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீர் இடி அல்லது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கக்கூடும் அதனால் தான் மிக பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது , ஆர் .டி .ஓ விடம் பேசியுள்ளேன் அரசு எல்லா உதவிகளையும் செய்யும் .நான் அரசிடம் முறையிட்டு விரைவில் பாதித்துள்ள இடங்களுக்கும் நபர்களுக்கும் உதவிகள் செய்வேன் " என்று உறுதியாக கூறினார் .