தொடர்கள்
அனுபவம்
நீலத் திரையின் ஓரத்திலே.... கென்னி ஹாங்காங்

20240620184128423.png

2024062018421084.jpeg


கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த வெள்ளி காலை தூக்கத்திலிருந்து எழுந்தபோது , உலகளாவிய ஐடி நெருக்கடியின் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் விண்டோஸ் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் தங்கள் கணினியை ஆன் செய்வது பாதுகாப்பானதா என்று கவலைப்படலாம்.

இதுதான் நடந்தது மற்றும் உங்கள் கணினியை ஆன் செய்வது பாதுகாப்பானதா என்று பாருங்கள்.

CrowdStrike என்றால் என்ன? CrowdStrike என்பது உலகம் முழுவதும் தொழில்களுக்கான பாதுகாப்பு மென்பொருளை வழங்கும் நிறுவனம். இன்று காலை, இது தவறான ஒரு பாதுகாப்பு மென்பொருள் புதுப்பிப்பை வெளியிட்டது, இது உலகெங்கிலும் கோடிக்கணக்கான விண்டோஸ் கணினிகளை பாதித்தது. பாதிக்கப்பட்ட கணினிகள் சரியாக மீண்டும் இயக்கத்தை துவங்க முடியாமல், நீல திரை (blue screen of death) என்ற பிழை திரையை மட்டும் காட்டுகின்றன.

பிழை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது, எனினும் கிடைக்கும் தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கணினியையும் தனித்தனியாக கையாண்டு சரிசெய்யவேண்டியிருக்கும், இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதுடன் , பன்னாட்டு நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான கணினிகள் பல்வேறு நாடுகளிலும்,பல்வேறு நகரங்களிலும்இருப்பதும், பல ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் பணியாற்றுகிறார்கள் என்பதும்
பிரச்சனையின் உக்கிரத்தை அதிகரித்துள்ளது.

பாதிப்பு

இந்த குறைபாட்டின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. விமான நிலையங்கள் விமானங்களை நிறுத்தியுள்ளன,மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை அணுக முடியவில்லை, இதுபோன்ற பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உங்கள் விண்டோஸ் கணினியை இயக்குவது பாதுகாப்பானதா?

விண்டோஸ் இயங்குதளவுடனே பிரச்சனை இல்லை என்பதைக் கவனிப்பது அவசியம். மாறாக, CrowdStrike இன் மென்பொருளை இயக்கும் விண்டோஸ் கணினிகளிலேயே பிரச்சனை உள்ளது, இவை பெரும்பாலும் கார்போரேட்நிறுவனங்களுக்கு மட்டுமே உரியவை.

"வீட்டில் இருக்கும் மக்கள் தங்கள் கணினிகள் குறித்து கவலைப்பட வேண்டாம், ஏனெனில் இது வீட்டு கணினிகளை பாதிக்காது," என்று பாதுகாப்பு நிறுவனமான ESETன் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மூர் கூறியுள்ளார். எனினும் கணினி பயன்பாட்டாளர்கள் அனைத்து மென்பொருள் பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் அனுமதிக்க வேண்டும் மற்றும் அவற்றை முடிந்தவரை தானாகவே அமையுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

மேக்ஸ், லினக்ஸ் கணினிகள் மற்றும் க்ரோம்புக்குகள் இந்த பிழையால் பாதிக்கப்படவில்லை.

தங்கள் நிறுவனம் வழங்கிய விண்டோஸ் கணினியைக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆலோசனை சற்று சிக்கலானது.இங்கு, உங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் சரிபார்த்து, பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம், வேலைக்கு நிறுவனம் வழங்கிய கணினியை இயக்குவதற்கு முன்பு பாதுகாப்பான நிலையை உறுதி செய்யலாம். தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், நிறுவனங்கள் அதைச் சரிபார்க்க சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் “தீர்வு கிடைத்துள்ளது” ஆனால் தற்போது அது மிகவும் Manual செயல்பாடாகத் தெரிகிறது,” என்றும் மூர் குறிப்பிடுகிறார்