தொடர்கள்
சினிமா
கம்பன் ஏமாந்தான் - லைட் பாய்

20240620184739109.jpg

உலகநாயகன் கமல் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருந்தவர். இப்போது சினிமா அரசியல் இரண்டிலுமே தடுமாறுகிறார் என்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள்.

தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் மற்றும் விஜயகாந்துக்கு பிறகு சினிமா நடிகர்கள் அரசியலில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்பதற்கு கமல் இன்னொரு உதாரணம் என்று ஆகிவிட்டார்.

சினிமாவைப் பொறுத்தவரை சில சருக்கல்களுக்கு பிறகு உலகநாயகன் நடித்த விக்ரம் இரண்டாம் பாகம் சாதாரணமாக வெளியாகி, ஆனால் திடீரென ட்ரெண்டிங் ஆகி வசூலில் கிட்டத்தட்ட 500 கோடி குவித்தது. இந்தப் படத்தின் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயன்ட் பெற்று இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தியன் 2 வெளியிடும் உரிமையையும் பெற்றது. இந்தியன் படம் சூப்பர் டூப்பர் வெற்றி லஞ்சம் மற்றும் ஊழலை தோலுரித்து வெட்ட வெளிச்சம் ஆக்கிய படம் என்பதால் இந்தியன் 2 ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காரணம் இந்தியன் படம் முதல் பாகம் லஞ்சத்தை எதிர்த்து போராடும் சுதந்திரப் போராட்டத் தியாகியின் கதை. எனவே இரண்டாவது பாகத்திலும் லஞ்சத்துக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கமல் அரசியல் தீவிரம் திமுகவுடன் கூட்டணி இதெல்லாம் இந்தியன் 2 படத்தை சங்கடப்படுத்தி விட்டது போலும். அதனால்தான் இந்த கதை தமிழ்நாட்டில் நடப்பது போல் காட்டாமல் குஜராத் மும்பை பஞ்சாப் என்று எங்கெங்கோ கொண்டு போய் சொதப்பி விட்டார்கள்.

இயக்குனர் சங்கர் ஆளுநர் குண்டு வைப்பது போன்ற காட்சிகள் உள்ள படத்தையே எடுத்திருக்கிறார். முதலமைச்சரை எதிர்த்து கேள்வி கேட்கும் தொலைக்காட்சி விவாதம் போன்ற துணிச்சலாக காட்சிகளை எடுத்தவர். ஆனால் இவையெல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது போல் தான் எடுத்திருந்தார். ஆனால் இப்போது அவருக்கு என்ன நிர்பந்தமோ இந்தியன் தாத்தாவை தமிழக எல்லைக்கு வர விடவில்லை.

இது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. கமல் ரசிகர்களுக்கே இது அதிர்ச்சி. படத்தை சொதப்பி விட்டார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வரத் தொடங்கியது. கமல் கூட்டணிக்காக கதையில் சமரசம் செய்து கொண்டு விட்டார். இதற்கு இயக்குனர் சங்கர் எப்படி சம்மதித்தார் என்ற பேச்சும் வரத் தொடங்கி இருக்கிறது. இதனால் படம் படுதோல்வி. படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. எனவே இந்தியன் 2 படம் விரைவில் ஒடிடி தளத்தில் வரும் என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் வரத் தொடங்கி இருக்கிறது. அரசியல் சினிமா இரண்டையும் போட்டுக் கொண்டு குழப்பிவிட்டார் கமல்ஹாசன். திமுக தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு கமலை பயன்படுத்திக் கொண்டு விட்டது என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் வரத் தொடங்கி இருக்கிறது.

20240620185159750.jpeg

இந்தியன் 2 படம் வெளியான முதல் நாள் 30.75 கோடி வசூல் ஆனதாக தகவல் வெளியானது மறுநாள் சனிக்கிழமை வார விடுமுறை அன்று 20 கோடி ரூபாய், அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வசூல் 18 கோடி என்று குறைந்துவிட்டது. உலகம் முழுவதும் ஒரு வார வசூல் 72 கோடி மட்டுமே. இது சென்ற கமல் படமான விக்ரம் வசூலை ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் பாதி கூட இல்லை .படத்தைப் பொறுத்தவரை வரும் விமர்சனங்கள் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனமாக தான் இதுவரை இருக்கிறது.

கமலஹாசனை கூட்டணி என்று சொல்லி அவரின் அரசியல் அத்தியாயத்தை சுருக்கி விட்டது இதேபோல் எப்படி விஜய்யை அடக்குவது எப்படி என்றும் இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டது திமுக என்ற பேச்சும் வரத் தொடங்கி இருக்கிறது.