எனக்கு ஆரம்பத்துல இருந்தே இந்த ஆபீஸ்ல வேலை பாக்க பிடிக்கலை.
ஆனாலும் 34வருஷத்தை ஓட்டியாச்சு.இந்த கடைசி ஒரு வருஷம்
ஓட்டறதுதான் கஷ்டமா இருக்கும் போல இருக்கு
கிளார்க்காதான் சேந்தேன், இப்ப சீனியர் கிளார்க் அதுவும் என் 52வது
வயசுலதான்கிடைச்சது.மத்தவங்க முணுமுணுத்தது தெரியாம இல்லை, புதுசா வந்த டைரக்டர் இந்தஆளுக்குப் போய் புரொமோஷன் கொடுத்திருக்கார் பாருனு கிசுகிசுக்கறானுக,பொறாமை பிடிச்சதுக.
1990ல இந்த மங்கள்தாஸ் எக்ஸ்போர்ட்ஸ்ல என் ஆடிட்டர் மாமா
சேத்து விட்டார்.அன்னிக்கு உக்காந்த அதே மர நாற்காலிதான் இன்னிக்கு
காலைல வரைக்கும். ஒரு வேளை இந்த நாற்காலி கூட ஒரு 6 இன்ச் உயரம்
குறைஞ்சிருக்கும்னு என் காது படவே லன்ச்ரூம்ல பேசறா.எனக்கு
அதெல்லாம் பெரிய மேட்டர் இல்லை.
சீதாராமன் ஆபீஸ் பாயா சேந்து இப்ப கிளார்க்ஆயிட்டான். அவன் ஏதேதோ
ஃபைல் கொண்டு வந்து மேஜைல வைப்பான், செக் பண்ணி சைன்பண்ணிடுங்க சார்னு.ஃபைல் சேந்தவுடனே 4 ஃபைல்ல கையெழுத்துப் போட்டு அவுட் ட்ரேல போடுவேன். நிறையஃபைல் சிவப்பு பட்டைல அர்ஜன்ட்னு இருக்கும்.அதை
மறந்தும் என் டேபிள்ல வைக்க மாட்டாங்க யாரும்.
பின்ன 9 மணி நேரம் ஆபீஸ்ல என்னதான் செய்வேன்றீங்களா?
கதை படிப்பேன்,கதை எழுதுவேன்என் பாட்டி பெரிய எழுத்தாளர் தெரியுமா.
அவங்க ரத்தமோ என்னவோ, எனக்கு எழுத்தில் ஆர்வம் வந்தது.
வீட்ல பொண்டாட்டி குழந்தைகள்னு ஒரே நைநை.அதான் ஆபீஸ்ல எழுதறேன்.எங்கேயாவதுபோட்டி கீட்டினு அறிவிப்பு வந்தா போதும்.
உடனே ஒரு கதை எழுதி அனுப்பிடுவேன். கிட்டத் தட்ட 12 வருஷமா
போட்டிக்கு கதை எழுதறேன்சார். ஒரு ஆறுதல் பரிசாவது கொடுத்தா என்ன?
ஏதேதோ மொக்கையா கதைக்கறவனுக்கெல்லாம்முதல் பரிசு வருது.உயிரை விட்டு உன்னதமா எழுதற நம்மளை மதிக்கறதில்லை.
ஜி.எம். கூப்பிடறாரு சார்னு,சீதாராமன் வந்து நின்னான். “மப்பு மன்னார்” கதையை பாதிலநிப்பாட்டிட்டு அலுப்போட போனேன்.
அந்த பெரிய ரூம்ல ஒரே கூட்டம் கிட்டத்தட்ட எல்லா ஸ்டாஃபும்.
நான் போனவுடனே எல்லாரும் கை தட்டினாங்க. அடுத்த வருஷம்தானே
ரிடயர்மென்ட், முன்னக்கூட்டியே அனுப்பிடறானோ இந்த காதகன்,திருடன்
சீதாராமன் ஏதாவது போட்டுக்கொடுத்திருப்பானோ,இப்படி பல
யோசனையுடன் கேணத்தனமா நெளிஞ்சேன்.
ஜி.எம். எழுந்து வந்து தோளைத் தட்டினார், ‘மண மலர்’ மாதப் பத்திரிகை போட்டில முதல் பரிசு ஐம்பதாயிரம் தட்டிட்டீரே,
நீங்களா சொல்லாட்டயும் இன்னிக்கு பேப்பர்ல முதப் பக்கத்துலவந்துடுச்சே.
எல்லாரும் கை தட்டினார்கள்.
நான் பேந்தப் பேந்த முளிச்சேன்.மன்னிக்கவும் உங்கள் கதை
தேர்வாகவில்லைனு ஒரு வாரம்முன்னயே ‘மண மலர்’ ஆபீஸ்ல இருந்து
லெட்டர் வந்ததே அப்பறம் எப்படி?யோசிச்சிண்டே என் இடத்துக்கு திரும்ப வந்தேன்
ஆபீஸ் அட்ரசுக்கு வந்த வெற்றி செய்தி லெட்டரை சீதாராமன் கைல
திணிச்சு,”வாழ்த்துக்கள் சார்னான்”.எப்படி இது??
Leave a comment
Upload