தொடர்கள்
விளையாட்டு
அட்டக்கத்தி ஆஸ்திரேலியா - ஜி.ஏ. கௌதம்

20240619234304269.jpg

குருநாதா! குருநாதா! என்று பில்டப் கொடுத்து பிரெட் லீயை கூட்டி வந்து சாணியடி வாங்க வைத்துவிட்டார்கள் ஆஸ்திரேலியா. அதுவும் அரைஇறுதிப் போட்டியில்.

90களில் மிரட்டிய மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ் போன்ற நடிகர்களை இப்போது காமெடி நடிகர்களாக மாற்றியது போல, ஒரு காலத்தில் அசுர பந்து வீச்சில் முக்கிய ரவுடியாக இருந்த பிரெட் லீயை பார்த்து மிரளாத பேட்ஸ்மேனே கிடையாது.

”வா தல. உன்னால தான் கப்பு ஜெயிச்சு கொடுக்க முடியும்” என நம்பிக்கையோடு ஆஸ்திரேலியா கூட்டி வந்த பிரெட் லீயை, 'அவெஞ்சர்ஸ்’ படத்தில் 'ஹல்க்’ எனும் அசுரன் ’தோர்’ மன்னனை துணி துவைப்பது போல துவைத்து தூக்கி வீசுவதற்கு இணையாக இறக்கமே இல்லாமல் நம்மாட்கள் தரமான சம்பவம் செய்து விட்டார்கள். அதும் ஒரே ஓவரில் 22 ரன். (பவுண்டரியில் மட்டும் 4,6,4,4,4).

ஸ்கோர் 224 ஆக இருக்க, 19வது ஓவர் ப்ரெட் லீ விசுவதற்க்கு முன்னால் யூசஃப் பதான் 29 (17) ரன்கள் தான் எடுத்திருந்தார். இர்பான் பதான் ஏற்கனவே 44 (16) ரன்னுடன் தனது அரை சதத்துக்கு காத்துக்கொண்டு இருந்தார்.

”யூசப் ஒரு சிங்கிள் தட்டி விடுவார். நாம் ஒரு சிக்ஸர விளாசிவிட்டு, அரை சதம் அடிச்சிரலாம்” என்று நினைத்த இஃபானுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

பிரெட் லீ வீசிய முதல் பந்து வைட் (Wide). அதற்கடுத்த பந்தில் துவங்கிய யூசப் பதானின் உக்கிர ஆட்டம், கடைசி பந்தில் அரை சதம் அடையும் வரை நிற்கவில்லை. ஆம். 29 ரன்னில் ஓவரை துவக்கிய யூசஃப் பதான், பிரெட் லீ வீசிய ஐந்து பந்துகளில் அரை சதத்தையே (51) அடைந்து விட்டார்.

கடைசி ஓவரில் தான், இஃபான் பதான் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இருந்தாலும், ஒரு வழியாக இரண்டு பதான்களும் சேர்ந்து. ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்து விட்டார்கள். இந்தியா அடித்த மொத்த ரன்கள் 254-6

2024061923433580.jpg

உத்தப்பா (65). யுவராஜ் சிங் (59), யூசஃப் பதான்* (51), இர்ஃபான் பதான் (50) என நான்கு பேர் அரை சதம் அடித்திருக்கிறார்கள். இதில் சோகம் என்னவென்றால், அந்தப் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த பந்து வீச்சாளர்களில் முதலில் இருப்பது பிரெட் லீ. இந்தியா அடித்த மொத்த ரன்களில் நான்கில் ஒரு பகுதி பிரெட் லீ மட்டும் கொடுத்த ரன்கள்.

அதை விட சோகம் என்னவென்றால், அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவில் ஒருவர் கூட அரை சதம் எடுக்கவில்லை.... ஆம் மொத்த அணியும் 20 ஓவரில் 168-7 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால், ஆட்டம் இந்தியாவின் கைவசம் திரும்பியிருக்கிறது.