தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண நிலை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக வடிவெடுத்து நிற்கிறது.
தமிழக காவல்துறை கைகள் கட்டப்பட்டு கடந்த சில வருடங்களாக ரவுடிகளிடம் மென்மையான போக்கினை கையாண்டு வந்தது.
தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம் கிட்டதட்ட அசூர வளர்ச்சி அடைந்து தனி ராஜ்,ஜியம் அமைத்து வெட்டு, குத்து ,கொலைகள் என அதிகரித்தது.
தமிழக காவல்துறையில் உளவு துறை தனியாக இயங்கி வந்தது , அதன் கைகள் கட்டப்பட்டு சில ஆண்டுகளாக முடங்கி உள்ளது.
உளவு துறை அளிக்கும் ரிப்போர்டுக்கள் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் முதல் முதல்வர் வரை நோட் போட்டு சென்று உடனடி ஆக் ஷன் இருக்கும் , தற்போது அதுமிஸ்ஸிங். இதனால் தமிழகத்தில் தடியெடுத்தவன் தண்டல்காரன் விதமாக ரவுடியிஸம் தலைவிரித்து ஆடுகிறது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் 4000 சமூக விரோதிகள், இரட்டை கொலை செய்த 250 கொலையாளிகள் இவர்களை A plus ரவுடிகள் என்றும் , ஒரு கொலை மட்டும் செய்த 300 கொலையாளிகள் A ரவுடிகள் ,கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் , வழிப்பறி செய்பவர்கள் B மற்றும் C ரவுடிகள் என்று சென்னை மாநகர காவல்துறை இனம் கண்டு பிரித்து கண்காணித்து வருகிறது.
மதுரை , திருநெல்வேலி , தூத்துக்குடி , கோயம்புத்தூர் பகுதிகளிலும் ரவுடியிஸம் மெல்ல பரவி படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்தேறிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலைக்கு பிறகு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருள் நியமிக்கப்பட்டார். ரவுடிகள் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் மொழிகளிலேயே தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுவித்தார்.
தமிழக முதல்வர் சட்டம் ஒழங்கை பாதுகாக்கும் விதமாக தமிழக காவல்துறைக்கு ரவுடிகள் அட்டூழியத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்று க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.
மாதவரம் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ரங்க் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்கும் போது என்கவுண்டர் செய்யப்பட்டது என காவல்துறையினர் அறிக்கை ரவுடிகளை திகிலடைய செய்தது.
தமிழகத்தில் இருக்கும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சப் –இன்ஸ்பெக்டர்கள் ரோந்து செல்லும் போது கட்டாயம் கைதுப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும் என்று காவல்துறை தலைமை உத்திரவிட்டது.
சென்னை அதன் சுற்றுபுற ரவுடிகள் போலீஸ் கண்ணில் பட்டால் துப்பாக்கி குண்டு பாயும் என்று அச்சத்தில் தமிழகத்தினை விட்டு வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.
பல ரவுடிகள் தங்கள் செல்போனை கொண்டு போகாமல் வெறுமனே சென்றுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் இடையே பேச்சாக உள்ளது.
தமிழகம் எங்கும் காவல்துறையினர் தினமும் லிஸ்ட் எடுத்துகொண்டு ரவுடிகள் தங்கியிருக்கும் பகுதியில் அவர்களை கண்காணிக்க வேண்டும் என்ற உத்திரவும் காவல்நிலையத்திற்கு பறந்துள்ளது.
காவல்துறைக்கு பயந்து வெளியூர் சென்ற ரவுடிகள் வீடு திரும்பியதும் அந்தந்த சரக காவல்துறை அதிகாரிகளிடம் சென்று உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாதாயிஸம், யார் பெரிய ரவுடி என்று நிருபிக்க ரவுடி குழுக்களிடையே சமீப காலங்களில் தமிழகமெங்கும் அடுத்தடுத்த படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
டெல்லி சென்ற தமிழக கவர்னர் தமிழத்தில் சட்டம் ஒழங்கு மற்றும் போதை பொருட்கள் நடமாட்டம் பற்றி பிரதமர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு வந்ததாக டெல்லி வட்டார செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகிறது.
ரவுடிகள் பலர் அரசியல் கட்சி மற்றும் சாதி ரீதியாக தங்களை அறன் அமைத்து கொண்டு வலம் வந்தாலும் தமிழக போலீஸ் கையில் இப்போது துப்பாக்கி எடுத்து தனது முதல் வேட்டையை மாதவரத்தில் தொடங்கி விட்டது.
அடுத்து எந்த ரவுடி மீது காவல்துறை துப்பாக்கி குண்டு பாயுமோ என்ற என் கவுண்டர் அச்சத்தில் தமிழக ரவுடிகள் நித்திய கண்டம் பூரண ஆயூசு பயத்தில் பதுங்கி இருக்கின்றனர்
இனிதான் எங்கள் துப்பாக்கி பேசும் என்று கர்ஜனையுடன் காவல்துறையினர் தங்கள் வேட்டை ஆரம்பம் என்று புன்னகை செய்கின்றனர்.
எப்படியோ தமிழக காவல்துறை ரவுடிகளை ஒழித்து மீண்டும் தனது மார்பில் கவுரவ பேட்ஜ் அணிந்து கொள்ளுமா என்பதே இப்போதைக்கு பில்லியன் டாலர் கேள்வி .
Leave a comment
Upload