தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20240606091648522.jpeg

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் உயிரிழப்பு இருவருக்கு சிகிச்சை

பேசாம டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்க ஆரம்பித்து விடலாம் வியாபாரம் அமோகமாக இருக்கும்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்

அண்ணாமலை என்ன சொல்வார் இதற்கு !!

பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள் பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

இன்னும் கோரிக்கையை வைக்கிற இடத்தில் தான் இருக்கீங்களா! !!

பீகாரில் பாலங்களை ஆய்வு செய்யக்கோரி வழக்கு

ஆய்வு முடிவதற்குள்ள பாலம் எல்லாம் விழாமல் இருக்கணுமே இதுவரை ஏழு பாலம் இடிந்து விழுந்து விட்டது !!

அரசே மது விற்பது நாட்டுக்கு செய்கின்ற துரோகம் திருமாவளவன்

ரொம்ப தைரியம் தான் அண்ணனுக்கு !!

பாஜகவுக்கு எதிராக பொய்களைப் பரப்ப முயன்ற எதிர்க்கட்சியினர் தோற்றனர் பிரதமர் மோடி

ஆமா அவங்களுக்கு உங்க அளவுக்கு சர்வீஸ் கிடையாது இல்ல !!

வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த வேட்டி சேலையை கைப்பற்றி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

இப்படி எல்லாம் பண்ணா எப்படி ஓட்டு போடுவாங்க !!

180 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்

ஆனா அவரை தான் பிடிக்க முடியாதே!!

காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

அதுதான் மன்னிச்சி எதிர்க்கட்சித் தலைவரா ராகுல் ஆயிட்டாரே !!"

நீட் தேர்வு பணக்காரர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது ராகுல் காந்தி

ஆமாம் தலைவரே பேப்பர் லீக்குக்கு லட்சக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க !!

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைத்தது ஏற்க முடியாது எடப்பாடி பழனிச்சாமி

தலைவரே நமக்கு சட்டம் பிரச்சனை இல்லையா? இந்தி தான் பிரச்சனையா ?

குடும்பத்துக்கு மூணு கேஸ் சிலிண்டர் இலவசம் பெண்களுக்கு மாதம் 1500 உதவி தொகை மகாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

தேர்தல் வரப்போகுதாம் !!

கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் உறுதி

நெசமா! !!!

நான் கூறிய கருத்துக்களையே தம்பி விஜயும் பேசுகிறார்.

அப்ப அவர் ஆமை குஞ்சு மேட்டர் எல்லாம் பேசுவாரா !!

அரசு வழங்கும் இலவச சைக்கிள் தரம் இல்லை பா சிதம்பரம்

இந்த கூட்டணி கட்சிகளுக்கு எல்லாம் ரொம்ப தைரியம் வந்துருச்சு !!