கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாவுக்கு பிறகு சமீபத்தில் சட்டசபையில் இறப்புக்கு காரணமாகும் கள்ள சாராய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை ரூபாய் பத்து லட்சம் அபராதம் என்ற சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
காவல்துறை மானிய கோரிக்கை மசோதா விவாதத்தின் போது பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலிக்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறேன் என்றார்.
கள்ளச்சாராயத்தைப் போலவே போதை மருந்து ஒழிப்பிலும் காவல்துறை அதிகாரிகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன் என்று சட்டசபையில் குறிப்பிட்டார் முதலமைச்சர்.
ஆனால், இப்படி எல்லாம் அவர் உறுதி தந்து பேசிய சில தினங்களிலே விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார் இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தாம்பரம் அருகே போதை பொருள் விற்பனை தொழில் போட்டியால் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஆக, முதலமைச்சரின் வாக்குறுதி உறுதி எல்லாமே வெறும் வாய் ஜாலம் என்று ஆகிவிட்டது என்பதற்கு இந்த இரண்டு சம்பவங்களும் உதாரணம். இதற்கு மேல் என்ன சொல்ல !!
Leave a comment
Upload