தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 088 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240514102842435.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

பகவான் ஸ்ரீ ரமணரின் அமெரிக்க பக்தர்

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் தத்துவங்களை பின் தொடர்வது மிகவும் எளிது. உங்கள் சிந்தனையை பின் தொடருங்கள் அது போதும். நீங்கள் உங்களை உணரலாம். தனது 17 வயதில் ஸ்ரீ ரமணரை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். அவரால் ஈர்க்கப்பட்டு இங்கேயே தங்கி விட்டார்.

ஸ்ரீ ரமணரின் தத்துவங்களை ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து அருணாச்சலத்திடம் சரண் அடைந்துள்ள இவரின் மூலம் கேட்பதில் எவ்வளவு பாக்கியம் நமக்கெல்லாம்.

அவரின் அனுபவ பதிவு இதோ