தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240515075208280.jpg

Heading : வாழ்க்கை இது தான்

Comment : நல்ல அறிவுரை

Rangarajan. S.V, Boston USA

Heading : முரண் - சத்யபாமா ஒப்பிலி

Comment : முரண் captures the state of wretched mothers and makes us wonder why and how do they stay invested with their rotten children. In many cases, the wives do it with their husbands too. It's not necessarily because of lack of choice. It's quite innate to the nature of mothers and the societal set up & culture that the womenfolk have been subjected to. Quite unfortunate. Well written. You make us feel helpless and sorry for this Mother character.

ஆரா , Chennai

Heading : கப் நிறைய கண்ணீர்- ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் ஆரம்பிச்சதில் இருந்து ஒவ்வொரு ஊரா போய், சிங்கம் போல் கர்ஜித்து, தனது டீமான சன்ரைசர் ஐதராபாத்தை ஊக்குவித்தார் காவ்யா மாறன். ஃபைனல் மேட்ச்ல தனது அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும்னு சென்னை கிரிக்கெட் ஸ்டேடியத்துல தனது அணியினர் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற பேராசையின் இருந்த காவ்யா, கையில் இருந்த லாலிபாப்பை பறிச்சதும் குழந்தை எப்படி தேம்பி அழுமோ... அந்நிலையில் காவ்யா இருந்திருப்பார். அவர் திரும்பி நின்று அழுவதை படம்பிடித்து கவர் ஸ்டோரி ஆக்கிட்டீரே

ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , சிங்கப்பூர்

Heading : இந்தியாவின் கௌரவ தொகுதி நீலகிரி . - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : ஆ.ராசாவின் மனசுல நீர் இடம் பிடிச்சுட்டீர்! அப்படியே நீலகிரி தொகுதியில் காடுகள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், வனவிலங்குகளுக்கு உயிர் பாதுகாப்பு உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண சொல்லுங்கள்!

ஏக்நாத், திரிபுரசுந்தரி, லாரன்ஸ் , மேட்டுப்பாளையம்

Heading : மூன்றாவது முறையாக மோடி - காயத்ரி ஸ்ரீநிவாஸ்

Comment : மேடம்... பிரதமர் மோடி குறித்து உங்க கான்பிடன்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு! ஒருவேளை, நீங்களும் முன்னாள் கவர்னரைப் போல் நீங்களும் மத்திய கேபினட் அமைச்சராக ஆசைப்படறீங்களா?!

சவுந்தர்யா, நல்லம்மை, தேவநாதன் , சிவகங்கை