தெலுங்குச் சோழர் விசையகண்டகோபாலன், மாறவர்மன் குலசேகரபாண்டியன், திரிபுவன சுந்தரபாண்டியன் திருநீர்மலை கல்வெட்டுகள் :
தெலுங்குச் சோழர் விசையகண்டகோபாலன், மாறவர்மன் குலசேகரபாண்டியன், திரிபுவன சுந்தரபாண்டியன் திருநீர்மலை கல்வெட்டுகள், திருநீர்மலை, புலியூர் கோட்டம் (சென்னை) எவ்வளவு பழமையானது என்பதை தெரியப்படுத்துகின்றன. இந்த கல்வெட்டுகள் திருநீர்மலை நீர்வண்ணர் கோயிலில் உள்ளன.
அரசு: தெலுங்குச் சோழர்
அரசன்: விசையகண்டகோபாலன் (c. 1250-1291)
த.நா.ஆ தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண் : 742/2017
மாவட்டம்: காஞ்சிபுரம்
ஆட்சி ஆண்டு: 10
ஊர்: திருநீர்மலை
வரலாற்று ஆண்டு - கி.பி. 1260
மொழி: தமிழ்
எழுத்து: கிரந்தங் கலந்த தமிழ்
குறிப்புரை:
பெருங்கனல் ஊரைச் சார்ந்த வட்டப்பாக்கம் ஊர்த் தலைவனின் மகன் பட்டாலக தேவன் என்பவன் திருநீர்மலை சிங்கபெருமாளுக்கு ஒரு சந்தி விளக்கு எரிக்க ஒரு மாடைப் பொன் தானமளித்துள்ளான்.
அரசு: பாண்டியர்
அரசன்: மாறவர்மன் குலசேகரபாண்டியன்
த.நா.ஆ தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண்: 743/2017
மாவட்டம்: காஞ்சிபுரம்
வட்டம்: தாம்பரம்
ஊர்: திருநீர்மலை
வரலாற்று ஆண்டு கி.பி 1304
இ.க.ஆ. அறிக்கை: 555/1912
மொழி: தமிழ்
ஆட்சி ஆண்டு 137
இடம்: நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி மேற்குச் சுவர்.
குறிப்புரை: பஞ்சநதிவாணன் திருவேகம்பன் என்கிற நீலகங்கன் என்பவன், தான் பிறந்த பங்குனி மாதம் ஹஸ்தம் நாளன்று ஐயங்கொண்டசோழ மண்டலத்து புலியூர் கோட்டம் எனும் குலோத்துங்க சோழ வளநாட்டும் சுரத்தூர் நாட்டு பம்மல் என்னும் ஊர் கோயில் இறைவன் பம்மநக்க நாயனாருக்கு வழிபாடுகள் நடத்திடுவதற்கு புலியூர்க் கோட்டத்து கால்பாய் நாட்டு வடக்குப்பட்டு என்னும் ஊரிற்கு தனது பெயரால் குமாரகோபால நல்லூர் என்ற பெயரிட்டுத் தானமாக வழங்கியுள்ளான்.
அரசு: பாண்டியர்
அரசன்: திரிபுவன சுந்தரபாண்டியன்
த.நா.ஆ தொல்லியல் துறை (கல்வெட்டு) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள் V தொடர் எண்: 744/2017
ஆட்சி ஆண்டு 16
வரலாற்று ஆண்டு : கி.பி. 13-நாம்.
இ.க.ஆ.அறிக்கை : 554/1912
மொழி: தமிழ்
எழுத்து: தமிழ்
இடம்: நீர்வண்ணர் கோயில் ராமர் சன்னதி வடபுறச் சுவர்.
குயிப்புரை : பம்மல் ஊரில் இருக்கும் வியாபாரி குன்றமுடையான் மெய்ஞ்ஞான வித்தகன் திருவெண்காடுடையான் என்பவன் பம்மனக்கர் நாயனார் வழிபாட்டிற்காகவும், திருப்பங்குனி, திருவைகாசி ஆகிய திருநாள்களில் வழிபாட்டுச் செலவினங்களுக்காகவும் கோயில் தானத்தாரிடம் தானம் வழங்கியுள்ளான். கல்வெட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் தானத்தின் முழுவிவரம் அறிய இயலவில்லை.
நன்றி : த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு ஆதாரங்கள்)
தொடர்கள்
தொடர்கள்
Leave a comment
Upload