ஏழைக் குடும்பங்களுக்கு 10 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மம்தா பானர்ஜி தேர்தல் வாக்குறுதி.
சிலிண்டர் வச்சிக்கிட்டு என்ன செய்யறது மத்ததெல்லாம் ?
பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் கடிதம்.
என்னை எப்படியாவது பிரதமராக்க கேட்டிருப்பார் அதானே !!
நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் துணை தேவை – சீமான்.
ஆனா மக்களுக்கு பணம் தேவையாச்சே !!
திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன அதிமுக குற்றச்சாட்டு.
நீங்க அவங்க மேல சொல்றீங்க அவங்க உங்க மேல சொல்றாங்க தேர்தல் முடிவு இந்த நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்கிடும் !!
ஊழலில் சாம்பியன் பிரதமர் மோடி :ராகுல் காந்தி.
பொறாமை !!
முதல்வர் நவீன் பட்நாயக் இரு தொகுதிகளில் போட்டி.
தாமரை ஜுரம் அவருக்கும் வந்துருச்சு போல !!
வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.
மறந்து போய் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாதீங்கன்னு கேரளாவில் சொல்ல வேண்டியது தமிழ்நாட்டில் சொல்லிடப் போறீங்க ஜாக்கிரதை !!
மத்தியில் இழுப்பறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு ? எடப்பாடி பேட்டி
இப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா.
தமிழகத்தில் ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்பனை
ஆமாம் தேர்தல் தீபாவளி ஆச்சே !!
தமிழையும் தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் ஆள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்.
அப்படி யாராச்சும் இருக்காங்களா தலைவரே !!
சென்னையில் ஐந்து இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை.
அமலாக்கத்துறை பயம் எல்லாம் போயே போச்சு.
பாராளுமன்ற தேர்தலுக்கு ஐயாயிரம் கோடி செலவு.
ரொம்ப காஸ்ட்லியான தேர்தல்.
இன்னும் பூத்ஸ்லிப்கள் வரவில்லை வாக்காளர்கள் புகார்.
அதாவது பணப்பட்டுவாடா இன்னும் ஆகலையாம் அதைத்தான் புகாரா சொல்றாங்க புரிஞ்சுக்கோங்க !!
Leave a comment
Upload