ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஏமன் என்றால் பாலைவன பிரதேசம் மற்றும் மழை மறைவு பகுதி என்பது தெரியும் . இரு நாட்களுக்கு முன்பு கடும் சுறாவளி காற்றுடன் இடைவிடாத பெய்த மழை இந்த நாட்டை வெள்ளக்காடாக மாற்றிவிட்டது .எங்கும் வெள்ளநீர் உலக வெப்பமயமாதல் காரணமாக இந்த மழை பெய்ததாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் .
இந்த மழை பொழிவிற்கு சில நாட்கள் முன்பு தான் வானில் வானுர்த்தி மூலம் மேகதூவல் என்ற கெமிக்கல் இந்த நாட்டு அரசு துவியதாகவும் இதனால் தான் பேய் மழை பெய்தது என்று மற்றொரு சாராரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர் .
மழை பெய்வதற்கான மேகத்தூவல் முறையால் மழை கொட்டி தீர்க்கவில்லை ஏற்கனவே அயல்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஏமன் நாட்டில் தீடீர் மழை பொழிவு இருக்கிறது என்று எச்சரித்து இருந்தனர்.
இங்கிருக்கும் ஏர்போர்ட்டில் தீடீர் மழையால் விமானங்கள் எல்லாம் படகு போல் மிதக்க ஆரம்பித்து விட்டது. படகு முலம் தனது நாட்டு மக்களை அரசு மீட்டு பாதுகாப்பு பகுதிக்கு அழைத்து சென்றது.
ஓராண்டில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் பேய் மழையாக கொட்டித் தீர்த்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Leave a comment
Upload