தொடர்கள்
தொடர்கள்
சென்னை மாதம்  -   124-ஆர் . ரங்கராஜ்

திருநீர்மலை பழமையானது என நிரூபிக்கும் சோழர் கல்வெட்டுகள்:


திருநீர்மலை சிங்கப்பெருமாள் இறைவனுக்கு பூவிருந்தவல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஆயிரவண்ணன் ஆள்கொண்ட வில்லி எனும் திருக்கச்சிநம்பி தாசன் என்பவன் ஒரு சந்தி விளக்கு வைத்துள்ளான். பூவிருந்தமல்லி நகரத்தைச் சார்ந்த வாணியன் ஒருவன் திருநீர்மலை நாயனார் நீர்வண்ணனுக்கு சந்தி விளக்கு ஒன்று வைத்துள்ளான்.

ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து கோவூர் என்கிற உலகமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன் அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத் திருமலையில் உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள கருவண்ணமேனி எம்பெருமானுக்கும் தேவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து கோவூர் என்கிற உலகமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஊராருக்கு மன்னன் அளித்த ஆணை. இவ்வூரிலிருந்த 75 வேலி நிலத்தினைத் திருநிலை திருமலையில் உள்ள ஸ்ரீநரசிங்கத்து எம்பெருமானுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள கருவண்ணமேனி எம்பெருமானுக்கும் தேவையான வழிபாட்டுச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

திருநீர்மலை திருநீர்மலை பழமையானது என நிரூபிக்கும் சோழர் கல்வெட்டுகள்:

நன்றி : த. நா. அ. தொல்லியல் துறை (கல்வெட்டு ஆதாரங்கள்)