ஒரு கிராமம் ஒரு பயிர் வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிப்பு.
ஒரே நாடு ஒரே தேர்தல் பாதிப்பு இதுதான்.
டெல்லியில் கவர்னர் நாலு நாள் முகாம் பரபரப்பு தகவல்.
தலைப்புச் செய்தியின் தந்தை நம் ஆளுநர்.
மோடியின் கனவு பலிக்காது கார்கே.
அப்போ உங்க கனவு மட்டும் பலிக்குமா என்ன ?
மோடி என்ற ஒற்றை மனிதரை நம்பி தமிழகம் ஓட்டு போட வேண்டும் அண்ணாமலை வேண்டுகோள்.
சரிங்க ஆபிசர் !!
ஐந்து மாநிலங்களில் போட்டி விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு.
அய்யய்யோ !!
அதிமுகவுக்கு காத்திருக்கும் திமுக.
பங்காளிகள் கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் ஆகணும் !!
பாரதிய ஜனதாவின் கூட்டணி கதவுகள் மட்டுமல்ல ஜன்னல்கள் கூட திறந்து வைத்திருக்கிறோம் அண்ணாமலை.
கதவு வழியா வரசங்கடப்பட்டா ஜன்னல் வழியா எகிறி குதித்து வரலாம் என்கிறார்.
கூட்டணிக்காக அதிமுக அலையவில்லை செல்லூர் ராஜு
அப்படியா !!
வாரிசுகள் முன்னேற்றமே எதிர்க்கட்சிகளுக்கு முக்கியம் அமித்ஷா.
நீங்களும் பாவம் இதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கீங்க !!
திமுக கூட்டணி உடையும் எடப்பாடி.
அண்ணே அவங்க குலசாமி கிட்ட ஏதாவது வேண்டுதல் வச்சிருப்பாரோ .
கெட்ட செய்தி தந்தியில் வரும் நல்ல செய்தி லெட்டரில் வரும் கூட்டணி பற்றிய கேள்விக்கு கமல் பதில்.
இப்பதான் கொஞ்சம் புரியிற மாதிரி பேச ஆரம்பிச்சிருக்காரு.
வெளி மாநிலத்தவர் என்று கூறுவதை நிறுத்துங்கள் தமிழிசை சௌந்தரராஜன்.
ஆமாம் புதுச்சேரியிலேயே படுத்து தூங்கி எழுந்து பல் விலக்கி டீ குடிக்கிறாங்க அக்கா அப்படி எல்லாம் பேசக்கூடாது.
சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் தொகுதி உடன்பாடு.
அப்பாடா .......ஒரு வழியா ? !!
தேசிய கட்சியுடன் கூட்டணி இல்லை எடப்பாடி.
அண்ணன் ஏன் இதையே திரும்பத் திரும்ப சொல்றாருன்னு புரியல தெரியல.
ராகுல்காந்தியை கிருஷ்ணராக உருவகப்படுத்தி பேனர்.
ராமர் தான் அவங்க எடுத்துட்டு போயிட்டாங்களே ?
Leave a comment
Upload