தொடர்கள்
கதை
பம்பரம்.-ஆனந்த ஶ்ரீனிவாசன்.

20240123180117344.jpeg

20240124080624730.jpeg

"அப்பாவும் அம்மாவும் மீண்டும் மீண்டும் சந்துருவை வற்புறுத்திய போது, அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

தயங்கியபடியே நின்றவனை, அம்மா தான் உரத்த குரலில் அதட்டினாள்.

“டேய் சந்துரு ! உனக்கு என்ன ஆச்சு?.வேலை கிடைச்ச விபரத்தை, அக்காவுக்கும், மாமாவுக்கும், நேரில்,சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வாடா. "

"போம்மா; ஏம்மா அவர் கிட்ட போய்ச் சொல்லணும்? ஏன்ஆசீர்வாதம்

வாங்கணும் " ?

அவன் பேச்சில் மீண்டும் கோபம்.“நான் யாரையும் பார்க்க விரும்பல”.

அப்படி அவன் பதில் சொன்னதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அம்மா தான் மீண்டும் பேச ஆரம்பித்தாள்..

.

"ஏண்டா !பத்து வருஷத்துக்கு முன்பு, நடந்த விஷயத்தை, இன்னும் ஞாபகம் வெச்சுண்டு, பகைமை எண்ணத்தை, மனசில வெச்சுக்காதே"அதைப் புறம் தள்ளு."

.

அப்பாவும் அம்மாவுக்கு, சப்போர்டாகப் பேசவும், அவனால் அவர்களின் பேச்சுக்கு எதிர்த்து பேச முடியவில்லை.

"இந்த 10 வருஷம்,அப்பா என் படிப்புக்கு எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார். ?"

"இன்னிக்கு ,நான் டிகிரி முடிச்சு, உடனே வேலை கிடைச்சதுக்குக் காரணம் ,அப்பா தானே!"

.

அவர் பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும்;.

.

யோசித்தான்.

"ஒகேம்மா !ஆனா, நான் தங்க மாட்டேன். அடுத்தப் பஸ்க்கு திரும்பிடுவேன்". எனக்குத் துளி கூட இஷ்டமில்லை. இருந்தாலும் ஒங்க பேச்சுக்கு மரியாதை கொடுக்கணும் என்கிற ஒரே நிர்பந்த்தில் கிளம்பறேன்.”

"இந்தா தேங்காய் பர்பி, தேன்குழல் . வசுக்கும், ஶ்ரீதருக்கும், ரொம்பப் பிடிக்கும்.எடுத்துண்டு போ".

வாய் தான் அப்பா அம்மாவிடம் அப்படிச் சொல்லியதே தவிர, அவன் மனது கூடப் பழகிய ராம்ஜி, நந்தினி,குமார், ரவி இவர்களைப் பார்க்க வேண்டும்.அவர்களிடம் பேசவேண்டும்.;நம் அதிர்ஷ்டம் இப்போ அவர்கள் அங்கு இருப்பார்களா?; இல்லை வேறு எங்கும் இருப்பார்களோ? என்ற எண்ண அலைகள் ஆர்பரிக்கப் பஸ்சுக்காகக் காத்து இருந்தான்.

அவர்களுக்ககுத் தனக்கு வேலை கிடைத்த செய்தி சொல்லி, ஸ்வீட் கொடுக்கவேண்டும் என்று நிறையச் சாக்லேட் வாங்கிக் கொண்டான்.

"ஒரு வருடம் இருந்த கிராமம் தான் சந்துருவுக்கு.ஆனாலும் அவனுக்கு அந்தக் கிராமம் இப்போது புதுசா தெரிந்தது.பஸ்சை விட்டுச் சாலையோரம் நடந்து வந்தான்.

பச்சைப்பசேல்வயல்கள்.கண்ணுக்குக்குளிர்ச்சியாகஇருந்தது

.குயில்கள் சத்தம் காதுக்கு இனிமையாகவும் ,இதமாகவும் இருந்தது.. நாரைகள் வயல்களில்அங்குமிங்கும் ஓடி இரை தேடிக் கொண்டிருந்தது.

வாய்க்காலில், ஒடும் சல சல தண்ணீரை பார்த்தவுடன், அவனுக்கு இறங்கி தன் கால்களை நனைக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது..

சாலையை விட்டு இறங்கி, கொஞ்சநேரம் நடு வாய்க்காலில், பேண்டை முழங்கால் வரை தூக்கி விட்டு, 5 நிமிடம் தன் ஆசையைச் செயல்படுத்தினான்.கைகளால் தண்ணிரை பிடித்து வீசி கொண்டிருந்தான்

கடந்த பத்து வருடத்தில் ஊர் மாறியிருந்தது மண் சாலை.தார் சாலையாக மாற்றம்.ஒவ்வொரு வீட்டிலும் டிஷ் ஆண்டெனா.காணப்பட்டது.

இன்னும் .இரண்டு வயல் தாண்டி போனால்,பால்கார வேதாம்பாள் வீடு வரும்.; அதைத் தாண்டி முள்ளியாறு, இறக்கத்தில்,சிவன்கோயில்; அப்புறம் தெரு வந்துவிடும். நடுவில் அக்கா வீடு.

தெருவை அடைந்து அக்கா வீட்டை பார்த்த போது ,வீடு பூட்டி இருந்தது.அக்கா வீட்டுக்கும், ரகு மாமா வீட்டுக்கும் இடையில் உள்ள வாசலில், அஞ்சாறு பசங்க, பம்பரம் விளையாட்டு விளையாடிக் கொண்டுருந்தார்கள்.

.அதில் ஒருவன், கையில் பம்பரம் கயறுடன் ஓடி வந்து, "வசு அக்கா , ராகவன் மாமா, ஶ்ரீதர் மூணு பேரும் டவுணுக்கு ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்காங்க. ,"2மணிக்கு வந்துடுவேன்னு, ஶ்ரீதர் சொல்லிட்டு போயிருக்கான்.;இன்னிக்கு மத்தியாணம் அவனுக்குக் கிரிக்கெட் மேட்ச் இருக்கு அங்கிள்.".

சொன்னவன் ஶ்ரீதரின் நண்பனாக இருக்க வேண்டும்.

சரி , ரகு மாமா வீட்டுக்கு போவோம் என்ற சந்துருவுக்கு அவர் வீடும் பூட்டி இருந்தது., சற்றுக் குழப்பமாக இருந்த அவனை நோக்கி, அதே பையன்," ரகு மாமா, மாமி, இரண்டு பேரும், இப்ப தான் வயலுக்கு உரம் போட, போயிருக்காங்க..வர 1 மணி நேரம் ஆகும்."

இவன் என்ன 24X7 நியூஸ் ரிப்போர்டர் மாதிரி, உடனக்குடன் தகவல் சொல்லிட்டுச் சிட்டாகப் பறந்து போகிறான்!!.

டைம் பாஸ்க்கு அவர்கள் விளையாட்டை, ரகு மாமா வீட்டு வாசலில் நின்று கவனித்தான் சந்துரு. மறந்து போன விளையாட்டு என்று நினைத்த போது கிராமங்களில் இன்னும் இந்த விளையாட்டுப் பழக்கத்தில் இருந்து வருவதைப் பார்த்த சந்துரு மனதில் மகிழ்ச்சி கொண்டான் .

"டேய் என் பம்பரம் 63 குத்து வாங்கிடுச்சுடா!. இன்னும் ஒரு குத்து தான் பாக்கி.! 64 குத்து வாங்கிட்டேன்னு வைச் சுக்கோ .;அப்புறம் நான் தான் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், இதோ காத்துக்கிட்டு இருக்கிற குட்டி நந்தினியை, கல்யாணம் செஞ்சுப்பேன்"

சொன்ன பையன் வயசு ஏழு அல்லது எட்டு இருக்கும்.அவன் நிஜமாகவே, பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளானா? . இல்லை கேள்விப்பட்டுருப்பானா ?;. இல்லை சரத்குமார் பழுவேட்டரையாராக நடித்த பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்து இருப்பானா?

சந்துருவின் மனது ஆச்சரியப் பட்டது..

எப்படி இருந்தால் என்ன அந்தச் சின்னப் பையன் பேசிய பேச்சு, ரசிக்கும்படி இருந்தது சந்துருவின் மனதில் !.

கல்கியின் பொன்னியின் செல்வன், இந்தக் காலச் சிறுவர்களையும், இளஞர்களையும் கவர்ந்து உள்ளது.என்பது நூற்றுக்கு நூறு உண்மை. என்பதை மட்டும்நன்கு புரிந்து கொண்டான்.

பத்து வருடத்துக்கு முன்பு தானும், ராம்ஜியும், இதே பம்பரம் விளையாடும் போது பேசிய அதே டயலாக்.

அப்போது நந்தினிக்கு அவன் வயது தான் ஆனால் 4 மாசம் குறைவு.அவள் மேல் அவனுக்கும் , ராம்ஜிக்கும், பாசம் அதிகம்.

அப்பாவுக்குத் தனியார் மில்லில் கணக்கு பிள்ளை வேலை, பறி போனதால், அப்பாவும் அம்மாவும் அப்போது தான் ,கல்யாணம் ஆகி வந்த வசுவுடன், சந்துரு வை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளியில் அஞ்சாம் வகுப்பு சேர்த்து விட்டு ஊர் போய் விட்டார்கள்.

டவுனில் படித்த சந்துரு வை, வகுப்பில் எல்லோரும் ஓரம் கட்டினார்கள். ஆனால் ராம்ஜியும், நந்தினியும் பழக ஆரம்பிக்க , மத்த பசங்களும், ஒட்ட ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் மாலை, இவர்கள் பம்பரம் விளையாட்டு விளையாடியதை ஆச்சர்யத்துடன் பார்த்தான் சந்துரு!!.

அவனின் தயக்கத்தைக் கண்ட ராம்ஜியும், நந்தினியும், இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள்

"இத பாரு சந்துரு"!

"பம்பரம் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி, அது அறிவியலோடு தொடா்புடைய தமிழா்களின் பொழுதுபோக்கு விளையாட்டு".

"பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு்".

"பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டைக் கொண்டு சுழற்றி விடும்போது வளைவுந்த விசையினால், நிலைத்திருந்து சுழல முடிகிறது."

"இப்ப நான் காமிக்கிறேன் பாரு"!. அனாசயமாக விளையாடி காண்பித்தாள் நந்தினி.!!

"சூப்பர் நந்தினி"!

"அப்படிச் சுழலும்போது, காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால், இந்த விசையின் தாக்கம் குறையும்போது, முதலில் அச்சு திசைமாறி, கடைசியாக நிலை தடுமாறி விழுகிறது. பாரு"

சூப்பர் நந்தினி எனக்குக் கொஞ்சம் சொல்லிக் கொடு!

"இப்ப பாரு !நான் இந்தக் கயிறு மூலம் பம்பரத்தை சுற்றிவிட்டு, கைவிரல்கள் மூலம் ரிலீஸ் பண்றேன் அது சுத்தி வருது பாரு."

"ஆமாம் !" என்றான் சந்துரு.

என்ன அசால்டா, நந்தினி விளையாடுகிறாள்! .

பார்க்கவே ஆச்சரியமான விசயமா தோன்றியது அவனுக்கு.

"சந்துரு இந்தப் பம்பரவிளையாட்டு,உலகின் பல பகுதிகளிலும் விளையாடப்படுகிறது."

"பம்பரக்கட்டை மற்றும் கயிறைப் பயன்படுத்தி விளையாட்டைத் துவங்க வேண்டும்.

இதனை ஒருவராகவோ அல்லது பலருடன் சேர்ந்தோ விளையாடலாம்."

"டேய் ராம்ஜி! , நீயும். பிராக்டிகலா செஞ்சு காமிடா."

நந்தினியின் உத்தரவுக்ககுக் கட்டுப்பட்டு, ராம்ஜி டெமோ செய்து காண்பித்தான்.

"இப்படி ஒரு பெரிய வட்டம் போடணும். ."

"இப்ப சாட்டை என்கிற கயிறு மூலம் , பம்பரம் விடணும்.; பிறகு1,2,3 சொல்லி, எல்லோரும் பம்பரத்தை ,ஒரே நேரத்தில், சுழற்ற வேண்டும். பின்பு சாட்டையைப் பயன்படுத்தி, பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும்."

"அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை, வட்டத்தின் உள்ளே மீண்டும் வைக்கணும் . அதான் பெனால்டி."!

"வெளியே உள்ளவர்கள், வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தின் மூலம், உள்ளே இருக்கும் பம்பரத்தை, குத்தி குத்தி, வெளியே எடுக்கவேண்டும்."

"அப்படி வெளியே எடுத்த பம்பரத்தின் சொந்தக்காரன் , மற்றவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்.

சீக்கிரம் குறிப்பிட்ட1,2 ,3 சொல்லி முடிப்பதற்குள், அபிட் என்று சொல்லி சாட்டை மூலம் எடுக்க வேண்டும்."

"எடுக்க முடியாதவன் உள்ளே வட்டத்துக்குள் தன் பம்பரத்தை வைக்க வேண்டும்."

"இது தான்டா பம்பரம் விளையாட்டு!" வெரி சிம்பிள்." ராம்ஜி தன் பங்குக்குச் சொன்னான்.

ஆனால். சந்துருவுக்கு அது சிம்பிளா தோணல!!பம்பர கயிறு மூலம், பம்பரத்தை, ஒரு சுற்று கூட அவனால் சுத்த முடிய வில்லை. இதுவே கிரிக்கட்டா இருந்தா, ஒவ்வொரு பந்தையும் நாலு, ஆறு என்று விளாசிருப்பான்

அவன் கயிற்றைச் சுற்ற சுற்ற பம்பரம் கழண்டுகொண்டே போனது.

ஒவ்வொரு முறையும் அவனுக்குத் தோல்வியே கிடைத்தது.!

ராம்ஜி,, குமார், நந்தினி இவங்க எல்லாம் எப்படிச் சுத்தி சீக்கிரம் எடுக்கிறாங்கா!தனக்கு அந்தச் சூட்சமம் இன்னும் பிடிபட வில்லையே என்ற கவலை அவனுக்கு இருந்தது.

நந்தினி கொடுத்த இரவல் பம்பரம் மூலம், நந்தினியின் உதவியினால், அவள் வீட்டுத் திண்ணையில் தினமும் 2 மணி நேரம் பயிற்சி எடுத்து, பத்து நாளில் ஒரு வழியா பம்பரம் விடக் கற்றுக் கொண்டான் சந்துரு.

இப்போது குமார் ரவி நந்தினி ராம்ஜி எல்லோரும் பம்பரம் விளையாடடில் எத்தனை வகை உள்ளது என்பதைப் பற்றிச் சொல்லவே அதைப் பற்றிக் கேக்க இன்னும் ஆர்வமானான் சந்துரு.

"தரையில் அல்லது உள்ளங்கையில், பம்பரத்தை யார் அதிக நேரம் சுழலச் செய்கிறார்கள் என்று பார்த்துப் பழம் என்று சொல்வது ஓயாக்கட்டை" ன்னு இதுக்குப் பேரு.

"அடிபட்டவனின் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால், வட்டத்திலிருந்து அகற்றி, ஓர் எல்லைவரை சுற்றிவிடும் பம்பரத்தாலேயே, அகற்றிக்கொண்டு சென்று, அடிபட்டவன் பம்பரத்தை உடைத்துவிடுவது உடைத்த கட்டைனனு பேரு."

"பம்பரக்குத்துவட்டத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வெளியேற்றுவது பம்பரக்குத்துன்னு பேரு"

"போட்டியில் எதிரியின் பம்பரத்தில் ,ஆக்கூறு அடித்து, உடைக்கக் குத்து முறை மட்டுமே உதவும்."

"இந்த விளையாட்டில் குறிப்பிட்ட தொலைவில் இருவேறு வட்டங்கள் போட்டுக் கடத்திச் சென்று விளையாடுவது - தலையாரி ஆட்டம்"

இப்ப நீ சொன்னது எதுவும் புரியலை நந்தினி."

இதெல்லாம் போகப் போக உனக்குத் தெரிய ஆரம்பிக்கும் சந்துரு"!

"நந்தினி இந்த விளையாட்டில் நீ நிச்சயம் எக்ஸ்பர்ட் தான்."

அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சந்துரு.

"சந்துரு இந்த விளையாட்டில் சில கோட் வார்த்தைகள் இருக்கு அதையும் தெரிஞ்சுக்கடா " என்றாள் நந்தினி

பழம் = வெற்றி;

மட்டை = பம்பரத்தைத் தலைகீழாகச் சுற்றுதல்;

மட்டையடி = கயிற்றில் உருவிய பம்பரம் சுற்றாமல் வெளியேறயவுடன் உடனே.

அபிட் சொல்வது.

"ஒரு நாள், நந்தினி அவனிடம்," டேய் என் பம்பரம் இதுவரை, குத்து வாங்காமல் இருந்துச்சு.ஒன்கிட்ட கொடுத்தேன். நிறையக் குத்துவாங்கிடுச்சு.இனி நான் கொடுக்க மாட்டேன் " என்று கோபித்துக் கொண்டாள்

"ஓசியில் இனி விளையாட வராதே!. ஓங்க மாமா ஸ்கூல் வாத்தியார் தானே.!

"பத்து ரூபாய் கொடுத்துப் பம்பரம் வாங்கிட்டு வா.;அப்புறம்விளையாட்டுக்கு வரலாம் ".

கூடவே ராம்ஜியும் சேர்ந்து சொல்லவே, சந்துருவுக்கு அவமானமா போனது. அவனுக்கு ரோசமாக இருந்தது.

எப்படியாவது மாமாவிடம் பணம் வாங்கிப் பம்பரம் வாங்க வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அந்தப் பம்பரம் விளையாட்டு தான், அவனை இந்த ஊரை விட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கபோகிறது என்பதை ,அவனே அறிந்திருக்க மாட்டான்..

வீட்டுக்கு வந்து," மாமா பம்பரம் வாங்கணும் ஒரு பத்து ரூபா கொடுங்க மாமா"

"மேல தெரு குமார் அப்பா ஆசாரி. நல்ல கொய்யா கட்டையில், வர்ணம் பூசி தரேன்னு சொல்றார் மாமா"

"ஸ்ட்ராங் ஆக இருக்கும். பிளீஸ் மாமா "

".காசு ஒன்னும் கிடையாது. பம்பரம் வாங்கித் தரமாட்டேன்;படிக்கிற வேலையைப் பாரு."

"நீ அவங்களோட சேர்ந்து விளையாட போன சமயத்திலியே, ஒன்னை தடுத்து நிறுத்தி இருக்கணும்".

"இனி பெருமாள் கோயில் பக்கமோ, இல்லை நந்தினி ராம்ஜியோட விளையாட போனால், காலை உடைச்சு டுவேன்"

மாமா ஒரு முரடன்.அவர் சொன்னால் சொன்னது தான். அக்கா கூட எதிர்த்து பேச முடியாது.

மறுநாள் பம்பரம் விளையாட்டு விளையாடிய பிறகு .நந்தினி ,”தனக்குப் பணம் பழம் சாப்பிட ஆசையா இருக்குடா” என்று ராம்ஜியிடம் சொன்ன போது, அவன் தன்னால் முடியாது என்றுசொல்லவே, குளத்துகரை மேட்டில், உள்ள பனைமரத்தின் மீது சந்துரு கிடு கிடுவென ஏறி, நந்தினிக்காக, பனம் பழம் பறித்துப் போட்டதை, வயலிருந்து திரும்பி வரும் போது, பார்த்த மாமா கோபமடைந்து, வீடு திரும்பியதும், சந்துருவைபார்த்து,

"அவ்வளவு தூரம் சொல்லியும், நீ அவங்களோட போய்ப் பம்பரம் விளையாட்டு; அப்புறம் பனை மரம் ஏறி இருக்கே. இனிமே செய்வியா ! செய்வியா!" என்று பூவரசு குச்சி மூலம் அடிக்க,

கேவலம் 10 ரூபாய் கொடுக்காத மாமா தன்னை அடித்ததும்.

.அடுத்த நிமிடமே கோபித்துக் கொண்டு போன சந்துரு 10 வருடம் திருவானைக் கோயிலில் உள்ள ரங்கூன் ரெட்டியார் சத்திரத்தில், 6 ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்து முடித்து வேலையும் கிடைத்த பின்பு, இப்போது தான் இந்த ஊர்வந்திருக்கிறான்.

இன்று அந்தப் பம்பரம் விளையாட்டடைப் பார்த்ததும் அவனுக்கு அன்று நடந்த நிகழ்ச்சியும் மாமா மீது மேலும் வெறுப்பபைக் கொட்டியது.

"அடடே!! வாடா சந்துரு!" என்று ரகு மாமா அவனைக் கூப்பிடவும், சகஜ நிலைக்கு வந்தான் சந்துரு.

அதே சமயம் அந்தக் குட்டி பாப்பா "அம்மா "என்று ஓடி வரவும் அங்குபார்த்த போது ரகு மாமா வீட்டில் நந்தினி.

உடலில் செழுமை, ஏற்கனவே சிவப்பு. இப்போது இன்னும் அழகாக இருந்தாள்.

"ஹாய் நந்தினி!"

"ஹாய் சந்துரு எப்படிடா இருக்கே? ".

தனக்குக் கொல்கட்டாவில் வேலை கிடைத்த செய்தியை சொல்லிவிட்டு, அவளுக்கும் அந்தக் குட்டி நந்தினிக்கும் "டைரி மில்க்" சாக்லேட் கொடுத்தான்.

தன் கணவர் பெங்களூரில், பேங்க் ஆபீசர் . என்று சொன்னதும்,அப்ப, நானும் ராம்ஜீயும் இலவு காத்த கிளிகள் ஆயிட்டோம்? என்று சொல்ல அந்த நந்தினியின் சிரிப்பு இன்னும் வெட்கத்தைத் தந்தது.

."ராம்ஜி சென்னையில் ஒரு கோயில் பூஜை,;குமார் பட்டுகோட்டை,;ரவி டெல்லி.செட்டில்ஆயிட்டாங்காடா"

“நிறையப் பேசணும் போல இருக்குடா! ஆனா டயமில்லை சந்துரு. இன்னும் ஒரு மணி நேரத்தில, டிரெயின் பிடிக்கணும் சாரிடா! ஒன் போன் நம்பர் கொடு. அடிக்கடி பேசுவோம்.

"ஓகே ஆல் த பெஸ்ட் சந்துரு” .

குட்டி நந்தினிக்கு, ஒரு முத்தம் கொடுத்து வழி அனுப்பினான் சந்துரு.

"என்னடா சந்துரு பம்பரம் விளையாட்டுப் பார்த்தது முதல் இன்னும் ராகவன் மேல் கோபம் இருக்கு போல".

"எப்படி இவ்வளவு சரியா தன் மைண்ட் வாய்ஸ் பத்தி சொல்றார் !மாமா என்று அதிசயித்தான்.

"அதற்குக் காரணம் இருக்குடா!

என்னவா இருக்கும் என்றுகேட்பதற்குள்,அவரே,உன் மேல் இருக்கும் ஒரு பொசசிவனஸ், பாசம்".

"அன்னிக்கு, உனக்குப் பம்பரம் வாங்கிக் கொடுக்கல.அதுக்குக் காரணம் அந்த வீட்டு கடைக்குட்டி ஶ்ரீ வத்சன் நாலோ அஞ்சோ வயசு தான் இருக்கும்;.இந்த குட்டி நந்தினி மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க, ஒங்க மாமா விளையாடிய ஒரு பம்பரம், வேகமாக வட்டத்தை விட்டு பறந்துவந்து, ஶ்ரீவத்சன் மூளை பகுதியில் அடிபட, அவன் ஸ்பாட் டில் அவுட்"

ஒரே சோகம்.தன்னால் தான் அந்தக் குழந்தைக்குச் சாவு ஏற்பட்டு விட்டது என்று புழுங்கி புழுங்கி தவித்தவன் ராகவன் .

"ஓங்க அம்மாவுக்கும் இந்தத் தகவல் தெரியாது.ஆனால் அவன் முகச் சாயல் கொண்ட உனக்கு, ஏதும் ஆகக்கூடாது என்பதற்காகப் பம்பரம் வாங்க காசு கொடுக்கல."

"இந்த விசயத்தை எங்கிட்டையோ ,இல்லை அக்காகிட்டையோ ,சொல்லி இருக்கலாமே ? "

"அப்படி ஒரு சம்பவம் தெரிஞ்சா அவமானம், குற்ற உணர்ச்சி அவனால் சொல்ல முடியல"

"சரி மாமா நந்தினிக்காகப் பனம் பழம் பறிச்சது தப்பா?""

பனை மரத்தில் ஏறி, கீழ விழுந்து வைத்தால், கை கால் முறிவு ஏற்படுமே என்கிற பயம் தான் காரணம்".

"இதையும் அன்பா சொல்லி இருக்கலாமே?".

சொல்லி இருக்கலாம் ஆனா அவன் முரடன் ஆச்சே. கல் மனசுகாரன்..

"நான் அன்னிக்கு ஊரில் இருந்திருந்தால், ஒன்னையும் அவனையும் சமாதானம் பண்ணி இருப்பேன்".

" நீ ஊரை விட்டு கிளம்பி போன ஒரு வாரம் அவன் சரியா சாப்பிடல".

"இன்னொரு விசயம் தெரிஞ்சுக்கோ!இன்பாக்ட் ஒனக்குச் சத்திரத்தில், மேனஜர் கிட்ட சொல்லி, சீட் வாங்கிக் கொடுத்தது;. 6வது வகுப்பிலிருந்து டிகிரி வரை, ஓங்க அப்பாவுக்கு, பணம் கொடுத்து அதை ஓங்க அப்பா ஒனக்குச் சிலவு செஞ்சது எல்லாம் ராகவன் தான் காரணம் ."

"அது ஓங்க அக்காவுக்குக் கூட இன்னி வரைக்கும் தெரியாது."

"நான் கசின் எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவான்".

"அவன் மனசு தான் கல். ஆனா அதுக்குள்ள ஈரம் இருக்குடா!"

ஒன் மேல அவனுக்கு இன்னும் பாசம் இருக்குடா!"

"போய் மன்னிப்பு கேட்டுட்டு ஆசிர்வாதம் வாங்குடா சரியா? "

"சரி மாமா".

எதிரில் தென்பட்டாள் வசுமதி."எப்படா வந்தே?தகவலைச் சொன்னான் ."மாமா என்னை மன்னிச்சிடுங்க"

அம்மா கொடுத்த பட்சனத்தைக் கொடுத்து நமஸ்கரிக்க அவனைக் கை தாங்கலாகத் தூக்கினார் ராகவன்.

"கொல்கட்டாவில் என் ப்ரெண்ட் அட்ரஸ் தரேன்."

"போனதும் அவனைப் பாரு! அவன் உனக்கு எல்லா ஹெல்பும் பண்ணுவான்." நானும் போன் பண்ணி சொல்றேன்.அட்ரஸ் போன் நம்பர் கொடுத்தார்.

"ஓகே மாமா! ரொம்பத் தேங்க்ஸ் ,அக்கா ஶ்ரீதர், போயிட்டு வரேன்."

வீட்டை விட்டு வெளியே, பத்தடி அடி தூரம் கூடப் போயிருக்கமட்டான்; மூச்சு இரைக்க ஓடி வந்த அவர், அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்து விட்டு திரும்பினார்

சந்துரு திறந்து பார்த்த போது, வண்ணம் பூசிய நாலு பம்பரங்கள் அதில்இருந்தது..