தொடர்கள்
பொது
சில எண்ணங்கள் - சில கிறுக்கல்கள் - சாய் விஜேந்திரன்

20240122214609778.jpg

சாலையின் இருபுறத்தையும் பார்த்து கடக்க முயன்றது பூனை. அபசகுனமாக மனிதர்கள் குறுக்கே வந்துவிடக்கூடாது என்று!

தன்னை தானே சுற்றி சுற்றி வந்தாலும் பிறருடைய ஆசையை நிறைவேற்றிவிடுகிறது இந்த பரோட்டா.

என்னுடைய மனைவியின் கை பக்குவம் எப்பொழுதும் ஒரே மாதிரிதான். அதே வலி, அதே வீக்கம்.

நான் அலாரம் வைக்க மறந்தாலும், சரியான நேரத்தில் எழுந்துவிடுகிறது சூரியன்.

நான் எவ்வளவு முறை சூடு வைத்தாலும் சத்தம் போடாமல் சமையலை முடித்துவிடுகிறது இந்த அடுப்பு.

ஒன்றை கூட்டினால் மற்றொன்று தானாக கழியுமோ? நேரமும், ஆயுளும்.

சட்டிக்குள் நான் பொங்குவதை பார்த்து ' பூரி ' த்துப்போனாள் அந்த சிறுமி.

ஆணுக்கு பெண் நிகர் என்று என் உரிமைக்கு போராடினாலும் ஜல்லிக்கட்டில் நீ பசு என்று அனுமதிக்க மறுக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சீவி சிங்காரித்து, அழகாக நின்றேன்.

சேட்டு மாப்பிள்ளை என்மேல் ஏறி ஊர்வலம் போக

நான் ராமனும் இல்லை,
அவன் பரதனும் இல்லை.
கோவில் வாசலில் இருந்த என் செருப்பை காணவில்லை.

உழைக்காமல் தூங்கிக்கொண்டே இருக்கும் சோம்பேறி, என்று என்னை கிண்டல் அடித்தவர்களுக்கு பட்டாம் பூச்சியாக மாறி பதிலடி கொடுத்தேன்...

....