தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி 6 - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240121215714517.jpg

ஸ்ரீமஹாசாஸ்தா மலர்ந்த முகத்துடன் காதுகளில் குண்டலங்கள் திகழ, வலது கையில் கருநெய்தற்பூ ஏந்தி, யோகப் பட்டமுடுத்து, பத்மஸுகாசனத்தில் இடதுபுறம் புஷ்கலா தேவியுடனும், வலது புறம் பூர்ணாதேவியுடனும் வீற்றிருப்பதாக ஆகாசபைரவ கல்பம் கூறுவது:

‘நௌமி வக்த்ர மதிஷ்டித குண்டலம்

ஸ்யாம் முத்பல தக்ஷ கராம்புஜம்

யோகபட்டித பத்ம ஸுகாஸனம்

வாமதக்ஷிண புஷ்கல பூர்ணயோ”

அதே ஆகாசபைரவ கல்பத்தில் உள்ள மற்றோரு ஸ்லோகம் வர்ணிப்பது இதுதான்.

‘கல்ஹாரோஜ்வல நீலகுந்தலபரம்

காலாம்புத ஸ்யாமளம்

கற்பூராகலிதாபிடாம வபுஷம்

காந்தேந்து பிம்பானனம்

ஸ்ரீதண்டாங்குஸ பால சூல

விலசத் பாணீம் மதாந்தத்விபா

ரூடம் சத்ரு விமர்தனம் ஹ்ருதி

மஹா சாஸ்தார மாத்யம் பஜே’

ஒளிவீசும் அழகிய கருமையான அளகபாரத்தை உடையவரும், கார்மேகம் போன்று கருத்த நிறம் உடையவரும், கற்பூரம் பூசிய சுந்தரமான வடிவையும், சந்திர வதனத்தையும் உடையவரும், பாசம் அங்குசம், சக்ரம்,சூலம் ஆகியவற்றையும் தமது திருக்கரங்களில் ஏந்தியவரும், மதயானையின் மீதுவீற்றிருப்பவரும், சத்ருக்களை அழிப்பவருமானசாஸ்தாவை எனதுமந்தில் எண்ணி பூஜிக்கிறேன்.

மேலும் சில தியான ஸ்லோகங்கள் ஸ்ரீமஹாசாஸ்தாவை கீழ்கண்டவாறு வர்ணிக்கின்றது.

“சாந்தம் சாரத சந்த்ரகாந்தி

தவளம் சந்த்ராபிராமானனம்

சந்த்ரார்க் கோபகாந்த

குண்டலதரம் சந்த்ராவதாதாம் சுகம்

வீணாம் புஸ்தகம் அக்ஷசுத்ரவலயம்

வ்யாக்யான முத்ராம்கரை:

பிப்ராணாம் கலயே ஸ்தாஹ்ருதி

மஹாசாஸ்தாரம்ஹிவாக்ஸித்தயே”

சாந்தமானவரும், சரத்கால சந்திரனை நிகர்த்த வெண்ணொளி படைத்தவரும் சந்திரவதனம் உடையவரும், சந்திர சூரியர்களுக்கு சமமான பிரகாசமுடைய குண்டலங்களை அணிந்தவரும், சந்திரன் போன்ற வெண்பட்டாடை அணிந்தவரும், திருக்கைகளில் வீணை, புஸ்தகம், ஜபமாலை, சின்முத்திரை ஆகிய வற்றைத் தரித்தவருமானஸ்ரீமஹாசாஸ்தாவை வாக்குவன்மை பெறுவதற்காக மனதில் பிரார்த்திக்கிறேன்.

“ஹஸ்தே புஸ்தகம் அக்ஷ்சுத்ரவலயம்

முத்ராம்ச ஸச்சின்மயீம்

பிப்ராணாம் கமலப் பரவார ருதிரை:

ஸ்வர்ணோஜ்வலாம் லேகனீம்

முக்தாபாமணி பூஷணைர்

வில்சிதம் வ்யாக்யான பீடஸ்திதம்

வ்யாசாத்யைர் முனிபுங்கவை:

ப்ரவ்ருதம் சாஸ்தார மந்தர்பஜே”

திருக்கைகளில் புஸ்தகம், ஜபமாலை, சின்முத்திரை, செந்தாமரை, பொன்னாலான எழுதுகோல், தரித்து ஒளிரும் முத்து மற்றும் மணிகளான ஆபரணங்கள் அணிந்து, வ்யாசர் முதலான முனி சரேஷ்டர்கள் சூழ, வியாக்யான பீடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமஹசாஸ்தாவை உள்மனதில் பஜனை செய்கிறேன்.

“ஸிம்மாரூடம் த்ரிநேத்ரம் த்ரிசஸ

பரிவ்ருடம் சுந்தர ப்ருவிலாசம்

ஸ்ரீபூர்ணாபுஷ்கலே சம்ஸ்ருதிவினுத

பதம் சத்த பஸ்மாங்கராகம்

சாந்தம் சங்காரி பங்கேருஹ

லஸிதகரம் ஸச்சிதானந்த மூர்த்திம்

சாஸ்தாரம் தர்மபாலம் ஹரிஹரதனயம்

ஸாக்ஷிபூதம்பஜேஹம்”

சிங்கத்தின் மீதேறி வருபவரும், முக்கண்களை உடையவரும், முப்பத்து மூன்று கோடி தேவர்களால் தொழப்படுபவரும், அழகிய புருவங்களை உடையவரும், ஸ்ரீபூர்ணபுஷ்கலா தேவியர்களின் ஈசரும், வேதங்களால் துதிகப்படும் திருப்பாதங்களை உடையவரும், தூய வெண்ணீறு பூசிய மேனியரும், சாந்தஸ்வரூபியும், சமங்காசுரனை வதம் செய்தவரும், தாமரை விளங்கும் கரத்தினரும், சச்சிதானந்த மூர்த்தியும், தர்மத்தை பரிபாலிப்பவரும், சர்வத்திற்கும் சாட்சியாக இருப்பவரும், ஹரிஹரர்களின் புதல்வருமாஅ சாஸ்தாவை நான் துதிக்கிறேன்.

“ஜீமுத ஸ்யாமதாமா மணிமய விலசத்

குண்டல உல்லாசிவக்த்ரோ

ஹஸ்தாப்ஜம் தக்ஷமாத்ரோ உத்பலம்

இதர புஜம் வாமஜானு ஹஸ்தம்

பிப்ரத் பத்மாஸனஸ்த பரிகலித தனுர்

யோகபட்டேன ஜுஷ்டக:

ஸ்ரீபூர்ணபுஷ்கலாப்யாம் புரஹர

முரஜித் புத்ரக பாது சாஸ்தா”

நீலமேக வர்ணம் உடயவரும், மணிமயமான குண்டலங்களால் ஒளிபெறும் திருமுகத்தை உடையவரும், வலது கர கமலத்தில் செந்தாமரைப்பூவை ஏந்தியவரும், மற்ற திருக்கரத்தை இடது முழங்காலில் வைத்திருப்பவரும், யோக பட்டம் அணிந்து பத்மாசனத்தில் வீற்றிருக்கும் திருமேனியைஉடையவரும், ஸ்ரீபூர்ணா ஸ்ரீபுஷ்கலா தேவியருடன் கூடியவரும் முபுரங்களை அழித்த சிவபிரானுக்கும் முரனை ஜெயித்த முராரி என்ற திருமாலுக்கும் புத்திரராக உதித்தவருமான ஸ்ரீமஹாசாஸ்தா நம்மைக் காத்தருளட்டும்.

“ஆஸ்யாம கோமள விசாலதனும் விசித்ரம்

வாயோவஸானம் அருணோத்பல தாமஹஸ்தம்

உத்துங்கரத்ன மகுடம் குடிலாக்ர கேசம்

சாஸ்தாரம் இஷ்டவரதம் சரணம் ப்ர்பத்யே”

சியாமள வர்ணமானவரும், கோமளமான தேகம் உடையவரும், பல வண்ணப்பட்டாடைகள் அணிந்தவரும், வலது கையில் செந்தாமரைப் புஷ்பத்தை ஏந்தியவரும், சிறந்த ரத்னமயமான மகுடத்தை சூடியவரும், சுருண்ட கேசத்தை உடையவரும், வேண்டும் வரம் தருபவருமான ஸ்ரீமஹாசாஸ்தாவின் திருப்பாதங்களை சரணடைகிறேன்.

மணிதாசரும் தனது அக்சங்கோவில் பஞ்சகத்தில் ஸம்மோஹன சாஸ்தாவைக் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.

“கோடி ஸூர்ய பிரபைனோடு கமனன்

அன்னப்பெருமை கொண்டு வருகின்றதைப்பார்

குவலயக்கண்ணன் திருபுவன வஸ்யன்

நீலகோமளாங்கப் பிரகாசன்

தேடும் நவரத்ன கிரீட கடகாங்கதன்

திவ்யகேயூரஹாரன் செங்கையில் மானிக்கப் பாத்திரம் கரும்புவில்

அபயம் சேர்ந்து இலங்கும் புஷ்பபாணன்

நாடுவார் முன் அழகுடன் ஓடி விளையாடுவார்

நமது அபீஷ்டங்கள் தருவார், நம்புவோர்க்கு

உபகாரி என்பதில் இவரன்றி இந்நாட்டில்

வேறு ஒரு தெய்வம் யார் காண்?

ஆடலம் பரியேறி கூடலம் பதி சென்று

அடிமை கொண்டு அடிமை நல்கும்

ஆதி சதுர்வேதங்கள் ஓதும் பரஞ்சோதியே

எங்கள் அச்சனார்கோவில் அரசே”

அடுத்த வாரம் பூர்ணா புஷ்கலாதேவி ஸ்ரீமஹாசாஸ்தாவுடன் சபையில் வீற்றிருக்கும் அழகு தொடரும்…..