ஒரே நாடு ஒரே தேர்தல் 81% ஆதரவு
நெசமா ? உங்க அம்மா சத்தியமா !
***
மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க முடியும் காங்கிரஸ் எம்பி சசிதரூர்.
அப்ப கூட காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியும் அவரால் சொல்ல முடியல பத்தியா !!
மக்கள் நீதி மையம் கட்சியின் இரண்டு நிபந்தனைகள் ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி செயற்குழு கூட்டத்தில் முடிவு.
நிபந்தனை விதிக்கிற அளவுக்கு நம்ம கட்சி வளந்துருச்சா தலைவரே ?
பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத் ரத்னா விருது.
ஆமா தேர்தல் வருது இல்ல !
ஒரே நாடு ஒரே தேர்தல் 81% ஆதரவு
நெசமா ? உங்க அம்மா சத்தியமா !
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதில் என்ன சிக்கல் உயர்நீதிமன்றம் கேள்வி ?
இதிலே நிறைய சிக்கல் இருக்க தலைவரே ? இதெல்லாம் நம்ம எப்படி கோர்ட்டில் போய் சொல்ல முடியும் !
கிளம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் அமைச்சர் அறிவிப்பு.
கிளம்பாக்கம் வருவதற்கு இன்னொரு ஆம்னி பஸ் விடுவாரா அமைச்சர் !
தமிழகத்தில் என்ன நடக்குது என்பது ஒரு எக்ஸ்ரே மாதிரி படம் பிடித்து காட்டுகிறோம் –அண்ணாமலை.
நீங்க ஒரு அரசியல் டாக்டர் அண்ணே !
பாரதிய ஜனதாவின் ராமரை வழிபட மாட்டோம் கர்நாடக முதல்வர்.
அப்ப இவங்க தனியா கோயில் கட்டுவாங்க போல தெரியுது.
நாம் பெருமாளையும் போற்றுவோம் பெரியாரையும் போற்றுவோம் முதல்வர் ஸ்டாலின்.
ஆனா பாராளுமன்றத் தேர்தல் வரை பெரியாருக்கு லீவு அப்படித்தான் முதல்வரே !!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தர வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை.
இதுக்கு நேரடியா வாரிசுகளுக்கு வாய்ப்பு தாங்கன்னு கேட்டு இருக்கலாமே !
மக்களவைத் தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம் நிர்வாகிகள் வற்புறுத்தல்.
பழைய முகங்களுக்கு எத்தனை பேருக்கு வாய்ப்புன்னு தெரியல ?
பட்டியல் இன மாணவியை வன்கொடுமை செய்தது மனிதாபிமானம் அற்ற செயல் தொல்.திருமாவளவன்.
அண்ணன் திமுக பத்தி சொல்லல உஷார் ஆயிட்டாரு பொதுவாக சொல்லி !!
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்தார் மதிமுக தலைவர் வைகோ.
ஒரே ஒரு மிளகா வறுக்க இவ்வளவு பெரிய கடாய் தேவையா தலைவரே !
மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க முடியாது மம்தா பானர்ஜி திட்டவட்டம்.
இதற்கு பெயர் தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை.
அண்ணாமலை முதல்வர் ஆவது, இலவு காத்த கிளி போல முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து.
அண்ணனுக்கு ஜோசியம் எல்லாம் தெரியும் !
மாநாடு, கும்பாபிஷேகம் எதுவாக இருந்தாலும் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் அன்புமணி ராமதாஸ் கருத்து.
நீங்க போராட்டம் அப்படித்தான் நடத்துறீங்களா சின்னய்யா !!
500 ஆண்டுகளாக இருந்த அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டார் மோடி- ரஜினிகாந்த்.
அரசியல் இல்ல, ஆனா அரசியல் பேசுவேன் அதுதான் சூப்பர் ஸ்டார்.
Leave a comment
Upload