நம் லண்டன் பயணத்தில் முக்கியமான விசிட் நவீன ஊட்டியை உருவாக்கின ஜான் சலிவனின் நினைவிடத்தி ற்கு சென்றது மறக்க முடியாத ஒன்று .
ஜான் சலிவனின் நினைவிடத்தை தேடி கண்டு பிடித்தது நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் தர்மலிங்கம் தான் .
லண்டனில் இருந்து வேணுகோபாலை தொடர்பு கொண்டு நாம் ஜான் சலிவனின் நினைவிடத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று கேட்க .
விகடகவி அவரின் நினைவிடத்தை போய் பார்ப்பது கிரேட் என்று கூறி அதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தார் .
ஸ்லொவ் நகரில் உள்ள செயின்ட் லாரன்ஸ் ஆலயத்தின் காப்பாளர் ஆலனிடம் நம் வருகையை பற்றி மெயில் மூலம் தெரிவிக்க .
ஆலன் நம்மை நேரில் வந்து அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.
லண்டனில் இருந்து ரயிலில் ஸ்லொவ் என்ற நகருக்கு பயணித்தோம் ரயில் மிக சுத்தம் அழகான ரயில் ஸ்லொவ் ரயில் நிலையம் சிறியது தான் அதே வேளை தொலைவு தூர ரயில் இந்த ரயில்நிலையத்தை படு ஸ்பீடாக கடந்து செல்கிறது .
நாம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வர நமக்காக காத்துக்கொண்டிருந்தார் ஆலன் தன் காரில் .
எண்பது வயது மதிக்கத்தக்க ஆலன் நம்மை வரவேற்று செயின்ட் .லாரென்ஸ் ஆலயத்திற்கு அழைத்து சென்றார் .
போகும் வழியில் ஸ்லொவ் நகரின் முக்கியத்துவத்தை பற்றி கூறி கொண்டே ஜான் சலிவனை பற்றியும் அவரின் இந்திய வாழ்க்கை மற்றும் முக்கியமாக ஊட்டி வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று பேசிக்கொண்டே வந்தார் .
1819 ஆம் ஆண்டு கோயம்பத்தூர் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் ஊட்டி என்ற மலைவாசஸ்தலத்தை கண்டு பிடித்து இன்று இந்தியாவின் மற்றும் உலகத்தின் மிக முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட் என்பது கிரேட் என்கிறார் .
செயின்ட் லாரன்ஸ் ஆலயத்தை சென்றடைந்தோம் .
எட்டுநூறு வருடங்கள் பழமையான ஒரு சிறிய ஆலயம் அதே வேளையில் உலகத்தின் மிக முக்கிய பிரபலங்கள் துயில்கொள்ளும் ஒரு அமைதியான இடம் அது என்று சொன்னால் மிகையாகாது .
ஆலயத்தை சுற்றி பழமையான கல்லறைகள் தான் இருக்கின்றன .
நம்மை ஜான் சல்லிவன் கல்லறைக்கு முன் கூட்டி சென்று நிறுத்தினார் ஆலன் .
மிக பழமைவாய்ந்த கல்லறை அது . அவரின் கல்லறைக்கு முன் போய் நின்ற போது பிரமித்து போனோம் .
இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் கேர் என்ற சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து கல்வியில் சிறந்து அந்த காலத்தில் ஐ சி எஸ் படித்து தேர்ச்சி பெற்று இந்தியாவிற்கு வந்து பணிபுரிந்துள்ளார் .
மெட்ராஸ் பட்டணத்தில் பணியாற்றியதின் விளைவு தான் மயிலையில் சாந்தோமில் உள்ள சல்லிவன் தெரு இன்றும் இவரின் பெயரை தாங்கி இருக்கிறது .
பிரிட்டிஷ் ஆட்சியில் கோயம்பத்தூர் நகரின் கலெக்டராக பணியாற்றியபோது தான் நீலகிரி மலைக்கு வந்து நவின ஊட்டி நகரை உருவாக்கியுள்ள மகானின் கல்லறையில் நின்றிருக்கிறோமா ? என்ற பிரம்மை நம்மை ஆட்கொண்டது .
ஒரு பெரிய அதிகாரி அதைவிட கண்டுபிடிப்பாளர் சிறந்த நிர்வாகி ஜான் சல்லிவனின் நினைவு இடம் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது வருத்தமாக இருந்தாலும் வேணுகோபால் தேடி கண்டுபிடித்து அவரை கௌரவித்தது சிறப்பான விஷயம் என்று நம் உள்ளம் கூறியது .
நீலகிரி எம் பி ராசா ஜான் சல்லிவனின் மூன்றாவது தலைமுறை வழி பேத்தி ஒரியல் சல்லிவனுடன் இவரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதை நம் நினைவில் ஓடிக்கொண்டிருந்தது .
ஆலன் ஆலயத்தினுள் அழைத்து சென்று பல பிரமிப்பூட்டும் விஷயங்களை நம்மிடம் கூறினார்.
ஆலனும் அவரின் மனைவி ஜூலியும் ஊட்டி வந்தபோது எடுத்த படங்கள் மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா கோத்தகிரி திம்படி கிராமத்தில் உள்ள ஜான் சல்லிவன் நினைவு இல்லத்தில் அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் படம் என்று நீலகிரி வரலாறு இடம்பெற்றுள்ளது .
இந்த ஆலயத்தினுள் தான் மிக பிரபல வானிலை ஆரய்ச்சியாளர் சர் .வில்லியம் ஹெர்ஸ்செல் நினைவிடம் உள்ளது .
இவர் தான் சனி கிரகத்தை கண்டுபிடித்தவர் .
இவர் இந்த ஆலயத்தில் ஆர்கன் வாசித்த இசை ஞானி என்பது குறிப்பிடத்தக்கது .
ஆலன் ஆலயத்தை சுற்றி காண்பித்து நமக்கு அவரே தயாரித்த ப்ளாக் காபி கொடுத்து உபசரித்தார் .
பின்னர் மீண்டும் நம்மை காரில் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்றார் அன்புடன் .
வரும் வழியில் ஜான் சல்லிவன் வாழ்ந்த இல்லத்தை பார்த்தோம் அந்த இல்லம் தற்போது மாடர்ன் பிளாட் வீடுகளாக மாறியுள்ளது .
ஊட்டி என்ற மலைகளின் அரசியை உறைவாக்கின ஜான் சல்லிவனை நேரில் பார்த்தது இல்லை அதே சமயம் அவர் வாழ்ந்த ஊருக்கு சென்று அவர் சாயலில் உள்ள ஆலனை பார்த்து வந்தோம் .
நவீன ஊட்டியை உருவாக்கின ஜான் சல்லிவனுக்கு சிலை அமைத்து ஊட்டி 200 விழாவிற்கு அவரின் பேத்திகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து கௌரவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் எம் .பி .ராசா மற்றும் முன்னாள் நீலகிரி காலெக்டர்கள் இன்னசன்ட் திவ்வியா மற்றும் அம்ரித்தை நினைத்து பார்த்தோம் .
ஜான் சல்லிவனின் நினைவிடத்தை கண்டுபிடித்த நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் வேணுகோபால் தர்மலிங்கத்திடம் பேசினோம் ,
" நீங்கள் லண்டன் சென்று ஜான் சல்லிவன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது சிறப்பான ஒன்று .நான் பல வருடங்களாக அவரின் நினைவிடத்தை கண்டுபிடிக்க பல முயற்ச்சிகள் எடுத்து ஆலன் மற்றும் ஜூலி துணையுடன் அவரின் நினைவிடத்தை 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி கண்டுபிடித்தேன் .பின் அவரின் மூன்றாவது தலைமுறை பேத்திகளான ஒரியல் சல்லிவன் மற்றும் ஜோசிலியன் சல்லிவன் சந்தித்து அவர்களை ஊட்டி 200 விழாவுக்கும் கடந்த மலர்க்கட்சிக்கு அழைத்துவந்தது சிறப்பான புதிய வரலாறு என்று கூறினார் .
நம் மலைகளின் அரசியான ஊட்டியை உருவாக்கி உலக அரங்கில் உயர்த்திய ஜான் சல்லிவனை நேரில் சந்தித்த உணர்வுடன் ஸ்லொவ் நகரில் இருந்து ரயிலில் திரும்பி வந்தோம் .
Leave a comment
Upload