தொடர்கள்
கவர் ஸ்டோரி
சின்ன சின்னதாய் .......

20231018073607655.png

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விராட் கோலி 711, ரோகித் சர்மா 550, ஸ்ரேயாஸ் ஐயர் 526. உலகக் கோப்பை தொடரில் ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் குவித்தது இதுவே முதல் தடவை.

உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்தார். இது அவரது ஐந்தாவது சதமாகும். இதன் மூலம் குமார் சங்ககாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார் விராட் கோலி. ஏழு சதங்களுடன் ரோகித் சர்மா முதலிடத்தில் ஆறு சதங்களுடன் சச்சின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். இது அவரின் 50-வது சதம். இதன் மூலம் சச்சின் சாதனையை அவர் முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் இது வரை 49 சதங்கள் அடித்திருக்கிறார். இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. நியூசிலாந்து இந்தியா போட்டியை நேரில் பார்த்த சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியின் இந்த சாதனையை எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தார்.

உலகக்கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றிருக்கிறார். அரை இறுதிப் போட்டியில் எட்டு சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார் இவர்.

விராட் கோலியின் சாதனை சதத்தை தொடர்ந்து கேலரியில் இருந்த படியே அவரது மனைவி அனுஷ்கா சர்மா வாழ்த்தினார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 55 ரன்களில் சுருண்டது. உலக கோப்பையில் தனது மோசமான ஸ்கோரை இந்த முறை பதிவு செய்தது இலங்கை .ஏற்கனவே 1975-இல் மேற்கிந்திய தீவுக்கு எதிரான போட்டியில் 86 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை.

இலங்கையை இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, அதாவது உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது இதுவும் ஒரு சாதனைதான்.