தொடர்கள்
கொடுரம்
மனிதர்களைக் கொல்லும் ரோபாட்டுக்கள் - கொரிய பயங்கரம் - மாலா ஶ்ரீ

20231018094843768.jpg

தென்கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் அறுவடை செய்யப்படும் மிளகுகள், அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் தரம் பிரிக்கப்பட்டு, பின்னர் பெட்டியில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இங்கு முன்பு தரம் பிரிக்கும் பணிகளைத் துவக்கத்தில் ஊழியர்கள்தான் செய்தனர். தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான ரோபோட்கள் மிளகுகளைத் தரம் பிரித்து பெட்டியில் போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ரோபோட்களின் பணிகளை ஒருசில ஊழியர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன் தானியங்கி கன்வேயர் பெல்ட்டில் ஒரு ரோபோட் மிளகு பெட்டிகளைப் போடும் பணிகளை ஒரு ஊழியர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த ரோபோட், மிளகு பெட்டியை எடுப்பதற்கு பதில், ஆய்வு பணியில் ஈடுபட்ட ஊழியரை தூக்கி, கன்வேயர் பெல்டில் வைத்து அவரது மார்பையும், முகத்தையும் நசுக்கியுள்ளது. இதில் ஆய்வு ஊழியர் படுகாயமடைந்து, கன்வேயர் பெல்ட்டில் இருந்து வெளிவர முடியாமல் கதறியுள்ளார்.

அவரை சக ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் ஆய்வு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை தென்கொரிய செய்தி ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. இதுகுறித்து தனியார் தொழிற்சாலை கூறுகையில், "இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்ப விபத்துகளை தடுக்க, துல்லிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று உறுதி தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவில் ரோபோட்கள் மூலம் இதுபோன்ற மனித உயிரிழப்புகளை ஏற்படுத்துவது முதல்முறை அல்ல. இதற்குமுன், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் வாகன உதிரிபாக தொழிற்சாலையில் வேலைபார்த்த ரோபோ, அங்கு பணியில் இருந்த ஊழியரை கடுமையாக தாக்கியது. தானியங்கி தொழிற்சாலைகளில் இதுபோன்ற மனித உயிரிழப்புகள் நடப்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் நம்பக தன்மையை கேள்விக்குறியாகவே மாற்றியிருக்கிறது.

எந்திரன் படம் தான் நினைவுக்கு வருகிறது.

அதிக இயந்திரத்தனம் கவைக்காவாது.

20231018095149685.jpeg