வாகன வரியை திரும்ப பெற சிஐடியு வலியுறுத்தல்.
அவ்வளவுதான் வலியுறுத்தி ஆச்சு இத்தோட விட்டுடனும் இதுதான் கூட்டணி தர்மம்.
கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு.
குண்டு தயார் பண்ற அளவுக்கு பெட்ரோல் விலை அந்த அளவுக்கு குறைஞ்சு போச்சா.
விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு வழக்கை மாற்றியதற்கு அரசியல் எதிரிகள் எழுதிய கடிதமே காரணம் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி தரப்பு வாதம்.
இப்ப அரசியல் எதிரிகள் அறிக்கை விடுவதற்கு பதில் கடிதம் எழுத ஆரம்பிச்சுட்டாங்களா.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்
கண்டிப்பா தரணும் அவங்க தானே நம்ம கஜானா.
தமிழக சட்டசபை தேர்தலில் கொக்கு போல் காத்திருந்து ஆட்சியைப் பிடிப்போம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
காத்திருந்து காத்திருந்து பாவம் கொக்குக்கு கால் வலிக்க போகிறது.
சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் அமைச்சர் உதயநிதி.
இப்ப எதுக்கு தேர்தல் வரும் போது பாத்துக்கலாம் அவசரப்பட வேண்டாம்.
எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைத்து அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது மூத்த காங்கிரஸ் ஆனந்த் ஷர்மா
நீங்கள் ஏற்றுக்கொள்ள சொல்லி நாங்க கேட்கவே இல்லையே என்கிறார் அண்ணன் அமித்ஷா.
ஒரே நாளில் தங்கம் வெள்ளி மற்றும் தீபாவளிக்கு 30,000 கோடி விற்பனை
எங்க டாஸ்மாக் விற்பனையும் அந்த அளவுக்கு அடுத்த தீபாவளிக்கு வரும் என்கிறார் அமைச்சர்.
அரசியல் சாசனம் படி செயல்படுகிறேன் கேரளா ஆளுநர் பதில்.
அதாவது அரசியல் சாசனப்படி அரசியல் அப்படித்தானே ஆளுநரே.
புழல் சிறையில் கஞ்சா விற்பனை பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தகவல்.
சிறை கைதிகளுக்கு சிக்கனுக்கு சைடிஸ் இதான என்னவோ யார் கண்டா.
திமுகவை எதிர்க்கும் வலிமையான கட்சியாக அதிமுக உள்ளது என்பதை மறுக்க முடியாது தொல். திருமாவளவன்.
அரசியல் தலைவர்கள் சில சமயம் உண்மையும் பேசுவார்கள் போல இருக்கு.
நாளை சென்றடைய வேண்டிய இடத்துக்கு சரியாக சென்றடைவோம் கமலஹாசன்.
கவலையே படாதீங்க ஆண்டவரே சின்னவர் உங்கள கைப்பிடித்து கொண்டு போய் விட்டுடுவார்.
தங்க கொலுசு திருடியதாக அறநிலை துறை உதவி ஆணையர் மீது வழக்கு.
இந்த செய்தி அண்ணாமலை கண்ணில் படாமல் பார்த்துக்கோங்க.
தீபாவளிக்கு உள்ளூர் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து பதிவிடுங்கள் பிரதமர்.
சீனா போன் தான் இருக்கு பரவா இல்லையா பிரதமரே
ஆவின் குடிநீர் விநியோகம் இப்போது இல்லை அமைச்சர் அறிவிப்பு.
ஆமாமா ஏற்கனவே பால் தண்ணீர் னு சொல்லிட்டு இருக்காங்க.
Leave a comment
Upload