மேண்டலின் சம்ஹிதா ஷிவ்ராம் மற்றும் ஷ்ரேயஸ் ஷிவ்ராம், மிகச்சிறு வயதிலிருந்தே மேண்டலின் கற்றுக்கொண்டு வாசித்து வருகிறார்கள். MANDOLIN SIBILINGS என்று பெருமையோடு அழைக்கப்படும் இவர்கள், இந்தியாவிலேயே முதல் மேண்டலின் சகோதர சகோதரி என்ற பெருமையை பெற்றுள்ளனர். நான்கு தலைமுறையாக சங்கீதத்தில் ஊறி திளைத்த குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசாக இவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தொடர்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இசை ஆழமாக வேரூன்றியுள்ளது. கர்நாடக இசை அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. காவிரி கரையில் உள்ளகலாச்சார வளமான பகுதியைச் சேர்ந்த கும்பகோணத்தின் மண்ணில் தழைத்த குடும்பத்தின் நான்காவது தலைமுறையான MANDOLIN SIBILINGS, தங்கள் இசையை அவர்கள் மரபணுக்களிலேயே பெற்றிருந்தனர். அவர்களது குடும்பத்தின் முதல் இரண்டு தலைமுறையினர் திறமையான வீணை வித்துவான்கள். இது ஒரு வலுவான அடித்தளம் அமைய வழிவகுத்தது. இவர்களுடைய தந்தை மேன்டலின் மாஸ்ட்ரோ யூ. ஸ்ரீனிவாஸ் ஜியின் வழிகாட்டுதலின் கீழ் பல ஆண்டுகள் மேண்டலினை அர்பணிப்புடன் கற்றுக் கொண்டார். இதன் விளைவாக உடன் பிறப்புகளுக்கு அவர்களை சுற்றி எப்போதும் மேண்டலின் இசையின் அரவணைப்பு இருந்தது மேலும் அவர்கள் நான்கு வயதிலேயே பத்மஸ்ரீ மேண்டலின் யூ ஸ்ரீனிவாஸ் ஜியின் நேரடிப் பயிற்சியின் கீழ் தங்கள் இசைப் பயணத்தை தொடங்கினார்கள். அதன் பிறகு மேண்டலின் ராஜேஷ் அவர்களின் வழிகாட்டுதலும் பின்னர் மேன்டலின் சீனிவாஸ் அவர்களுடைய தந்தையும் உடன்பிறப்புகளை தொடர்ந்து பயிற்சி செய்ய வைத்து, சிறிது சிறிதாக சிரத்தையுடன் செதுக்கி அவர்களை மிளிரச் செய்தார்.
உடன்பிறப்புகளை தனிப்படுத்தி காட்டுவது அவர்களின் அபாரமான அர்ப்பணிப்பு, மற்றும் மேன்டலினில் அடுத்தது வாசிக்க தாங்களாகவே கற்றுக் கொள்ளும் தனித்துவமான திறன் ஆகும். தங்கள் தந்தையின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் காரணமாக கர்நாடக இசை, திரைப்பட இசை, ப்யூஷன் இசை உள்ளிட்ட பல்வேறு இசை வகைகளை வாசிக்க இந்த அழகான கருவியை இசைவானதாக மாற்றியுள்ளனர். இந்த இசைப் பயணம் முழுவதிலும் சம்ஹிதா ஷிவ்ராம் மற்றும் ஷ்ரேயஸ் ஷிவ்ராம் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் பக்தியுடனும் பயிற்சி செய்தனர். இதன் விளைவாக இந்தியா முழுவதும் 750 க்கும் மேற்பட்ட கச்சேரிகள் நடத்தி இருக்கிறார்கள். மியூசிக் அகாடமி போன்ற மதிப்பு மிக்க மேடைகளை அலங்கரித்துள்ளனர். மியூசிக் அகடெமியில் நடைபெற்ற பத்மஸ்ரீ யூ சீனிவாஸ் அவர்களுக்கு நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கலைஞர்களுடன் அஞ்சலி செலுத்தினர்.
இவர்களுடைய நிகழ்ச்சிகள் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு இருக்கின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருடாந்திர நிகழ்வுகளில் MANDOLIN SIBILINGS தங்கள் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கின்றனர். மேலும் அவர்கள் பல திருமண வரவேற்புகள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றிற்கு 250 க்கும் மேலான கச்சேரிகளை இதுவரை நடத்தி இருக்கின்றனர்.
மற்றொரு புறம் MANDOLIN SIBILINGS ஸ்ரீ சைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனர் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், உடுப்பி கிருஷ்ணர் கோயில் மற்றும் திருவந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ தேவநாதசுவாமி கோயில் போன்ற இடங்களில் பக்தியோடு தங்கள் இசை சமர்ப்பணத்தை செய்திருக்கிறார்கள். கோயில் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகங்கள் போன்ற புனித நிகழ்வுகளுக்கு தங்கள் இசையை அர்ப்பணித்துள்ளனர். மேலும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், சிருங்கேரி சாரதாம்பாள் பீடம் மற்றும் ஸ்ரீ சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம், உடுப்பி மடம் உள்ளிட்ட போற்றுதலுக்குரிய ஆன்மீக தலங்களில் வாசித்து, அந்த மடத்தின் புனிதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களையும் பெற்று வந்துள்ளனர். சமீபத்தில் ஸ்ரீ சகடபுரம் ஸ்ரீவித்யா பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளால் பீடத்தின் 'ஆஸ்தான வித்வான்கள்' என்ற பட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களது குருவைப்போலவே 13 வயதிலேயே ஆஸ்தான விதவானாக நியமிக்கப்பட்டது உடன்பிறப்புகளின் அர்பணிப்பான இசைக்கு கிடைத்த புனிதமான அங்கீகாரம்.
கர்நாடக இசையை ஊக்குவிப்பதிலும் குழந்தைகள் மத்தியில் அதில் ஆர்வத்தை வளர்ப்பதிலும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேண்டலின் உடன்பிறப்புகளுக்கு பல்வேறு பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வழங்க அறிவுறுத்தினார். இம்முயற்சி கலை மற்றும் கலைஞர்களை பள்ளி மாணவர்களின் இதயங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அவர்களின் இசையின் நாதத்துடன் இணையும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
எந்த ஒரு கலைஞருக்கும் மிகவும் நேசத்திற்குரிய அங்கீகாரங்களில் ஒன்று அவர்களுடைய குருவின் பாராட்டு, மேலும் MANDOLIN SIBILINGS இந்த கௌரவத்தை சிறுவயதிலேயே பெற்றுள்ளனர். தற்போது சென்னையில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர்கள், மாணவர்கள் படித்துக் கொண்டே இசையின் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அவர்களின் சக வயது மாணவர்களுக்கு ஒரு எழுச்சியூட்டும் முன் மாதிரியாய் விளங்குகின்றனர். இசை உலகில் அவர்களை ஈர்க்கக்கூடிய சாதனைகளுக்கு அப்பால் MANDOLIN SIBILINGS திருமணங்கள், வரவேற்புகள், நிச்சயதார்த்தம், மெஹந்தி, சங்கீத் போன்ற 250க்கும் மேற்பட்ட கலை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களின் இசை எண்ணற்ற முக்கிய தருணங்களுக்கு ஒரு இசை மாயாஜாலத்தை சேர்த்து அளித்தது. கொண்டாட்டங்களுக்கு இவர்களை தேடும் விருப்பமாக அமைந்தது.
மேண்டலின் சம்ஹிதா ஷிவ்ராம் மற்றும் ஷ்ரேயஸ் ஷிவ்ராம் இளம் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, அவர்கள் விதிவிலக்கான இசை திறமை கொண்டவர்கள் அர்ப்பணிப்பும் பக்தியும் கொண்ட இசை அவர்களுடையது. நான்கு தலைமுறை இசை குடும்பத்தில் தொடங்கிய அவர்களின் பயணம் ஆர்வம், விடாமுயற்சி மற்றும் தங்களுடைய இசை கருவியின் மீது தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மிக அழகான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு இசை பயணமாக இதனை மாற்றி அமைத்தார்கள்.
இசை உலகில் அவர்களின் எதிர்காலம் நிச்சயமாக பிரகாசமாக இருக்கிறது. மேலும் தொடர்ந்து இசை ரசிகர்களை பிரமிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தும் இசையை தொடர்ந்து அவர்கள் தந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய இனிமையானதும், அர்ப்பணிப்பு மிகுந்ததுமான இசை பொங்கி பிரவாகமாக நம்மையெல்லாம் இசை மழையில் நனைய செய்யும். சாதாரண மக்களையும், இசை ரசிகர்களையும் ஒருசேர தங்கள் இசையால் கட்டி போடும் திறமை MANDOLIN SIBILINGS க்கு இருக்கிறது. அவர்கள் தங்கள் இசை மூலம் நம்மை இசை கடலில் ஆழ்த்தி வேறொரு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர்கள் இசைப்பயணம் தொடர வாழ்த்துக்கள்…
Leave a comment
Upload