ஆயுத பூஜையன்று தமிழகமெங்கும் வருடந்தோறும் மழை பொழிவு இருக்கும். தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக செப்டம்பர் ,அக்டோபர் மாதங்களில் மழை இல்லாமல் வெயில் சதம் அடித்து கொண்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை எதிர்ப்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. கடவுளின் பூமி கேரளாவில் கூட கடந்த 2 மாதங்களில் போதிய மழையின்றி வெயில் தகித்தது. கேரளாவில் இதுபோல் தென்மேற்கு பருவமழை காலங்களில் மழை பொய்த்தது இல்லை என்று அங்கிருக்கும் கேரளவாசிகள் குரலாக உள்ளது.
எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடல் வெப்பமயமானால் இந்திய துணைக்கண்டத்தில் மழை பொழிவின்றி வறண்ட நிலை ஏற்படும். எல்-நினோ ஆண்டில் அதிக வெப்பம்,அதீத மழை, திடீர் புயல், மிதமிஞ்சிய வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்த வருடம் எல் –நினோ வருடம் என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2018 ஆண்டு எல் -நினோ வால் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை . அதற்கடுத்து இந்த வருடம் எல்-நினோ ஆண்டால் பருவமழை பெய்யவில்லை .கடந்த நூறு வருடங்களில் இந்த ஆண்டு தான் பருவமழை சரிவர பெய்யாததால் இந்தியாவில் விவசாயம் பெருமளவு பாதித்துள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பருவ மழை சரிவர இல்லாததால் இந்த ஆண்டு விவசாயம் 3 டிரிலிய்யன் உலக வர்த்தகம் பாதிக்கும்.இந்தியாவில் 70 சதவீத நீர்பாசன விவசாயம் முலம் இந்திய பொருளாதாரம் வர்த்தகத்தில் சிறந்து விளங்கி வந்தது.இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் பல ஆறுகளும் , டேம்களும் நீர் குறைந்து விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறிக்கொண்டிருக்கின்றனர்.
அண்டை மாநிலமான கர்நாடகா காவிரியில் நமக்கு தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் , நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் உத்திரவிட்டும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் கர்நாடக அரசு முழி பிதுங்கி நிற்கிறது.
டெல்டா மாவட்ட விவசாயம் தங்கள் நிலங்களில் ஆழ்துளை கிணறுகள் முலம் 150 அடிக்கு கீழ் போர் போட்டு பூமியின் உள்ளே இருந்து தங்கள் பயிர்களுக்கு நீர் பாய்ச்சியதால் டெல்டா மாவட்ட பல்வேறு விவசாய நிலங்களில் உள்ள மண்ணில் தற்போது உப்பு தன்மை அதிகரித்து காணப்படுகிறது.
ஒருபுறம் காவிரி தண்ணீர் போதிய அளவு வரவில்லை மறுபுறம் டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணற்று பாசனத்தால் பூமிக்கு அடியில் இருக்கும் உப்பு விவசாய நிலங்களை பாழ்படுத்துகிறது.இதனால் டெல்டா மாவட்ட நிலங்களில் அடுத்த சில ஆண்டுகளில் பயிர் செய்யும் தகுதியிழக்கும் என்று விவசாயிகளின் குமுறலாக உள்ளது.
இதுவரை தென்மேற்கு பருவமழை 4 சதவீத இயல்பான மழை பொழிவு குறைந்துள்ளது.ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 36 சதவீத இயல்பான மழை பொழிவு குறைந்துள்ளது இதனால் கரும்பு ,அரிசி விவசாய பொருட்கள் ஏற்றுமதி பெருமளவு பாதித்துள்ளது.அத்துடன் வெங்காயம் மழை பொழிவு தப்பியதால் வெங்காய ஏற்றுமத்திக்கு 40 சதவீத வரியும் மத்திய அரசு விதித்துள்ளது. இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற தரவுகள் காட்டுகிறது.
தென்மேற்கு பருவமழை விடைபெற்று அக்டோபரில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை துவங்கினாலும் இதுவரை 41 சதவீத மழை குறைவாக பெய்துள்ளது.அக்டோபர் மாதம் 136.5 மிமீ மழை பதிவாக வேண்டிய சூழ்நிலையில் வெயில் கொளூத்தியதால் 80.5 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது என வானிலை ஆராய்ச்சியாளர்கள்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இது வரை இயல்பை விட 41% குறைவாக பெய்துள்ளது .அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 136.5 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 80.5 மிமீ மட்டுமே மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் மழை ஓய்ந்த 1 மணி நேரத்தில் வடியும். மழை நீர் உடனே வடிவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என்று சென்னை மேயர் பிரியா சொன்னார்.
நவம்பர் 1 முதல் 18 தேதி வரை சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டம் இணைந்த தென் ஆந்திரா வரைக்கும் நல்ல மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் . இதில் மழை பொழிந்து அனைத்து நீர்நிலைகளும் நிரம்பினால் தான் விவசாயம் செழித்து விலைவாசி குறையும் என்பது தமிழக விவசாயிகள் குரலாக உள்ளது.
வருண பகவான் கருணை புரிவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Leave a comment
Upload