1.ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கை வரும் காலத்தில் எப்படி இருக்கும்?
அவர் ஒரு நல்ல எதிர்கட்சித் தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
2.சமீபத்தில் நீங்கள் ஹோட்டலில் ரசித்து சாப்பிட்ட உணவு எது?
சனிக்கிழமை தோறும் எதாவது ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது குடும்ப வழக்கம். மிக அதிகம் சாப்பிட்டது..சங்கீதா தான்.
3.கார்டூனில் நீங்கள் வரைய விரும்பும் கேரக்டர் எதுவும் பாக்கி இருக்கிறதா?
நன்றி: தினமணி
இப்போதைக்கு தினமணியில் கார்ட்டூன் போடுவதோடு சரி.
4.ராஜராஜ சோழன் நேரில் வந்தால் என்ன கேட்பீர்கள்?
நான் ஒரு பத்திரிகையாளன். நீண்ட நெடும் பேட்டி ஒன்று எடுப்பேன்.
5.வரலாற்று காலக் காதல் , இப்போதைய காதல் என்ன வித்தியாசம் காண்கீறீர்கள்?
ஒரே துரத்துதல் தான்.
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload