தொடர்கள்
பொது
சங்கர ஜெயந்தி கொண்டாட்டம் - கோபாலவல்லி தாசர்.

20230328184111168.jpg

சங்கரனை, ஆதி சங்கரனை, பரமாத்மாவின் பிம்பமே ஜீவாத்மா என்றவனை, உன்னுள் இருக்கும் பரமாத்மாவை உணர்ந்துவிடு, அவனை ஐக்கியமாகிடு என்ற அத்வைதப் பொருளை உணர்த்தியவனை கொண்டாடுகிறார் ஆன்மீக ஆர்வலர் குருஜீ கோபாலவல்லீ தாஸர்.

ஆனந்தவேதம் !

வா...வாழ்வை யோசிப்போம்...

வா...சரியாக யோசிப்போம்...

வா...தீர்வு காண்போம்...

வா...தைரியம் பெறுவோம்...

வா...உலகையே வசம் செய்வோம்...

வா...அன்பை பறிமாறுவோம்...

வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்...

வா...நம்மை சுத்திகரிப்போம்...

வா...புத்துயிர் பெறுவோம்...

வா...வாழ்ந்து காட்டுவோம்...

வா...எல்லாவற்றையும் ரசிப்போம்...

எல்லாவற்றையும் மறுபார்வை செய்வோம் . . .

என்று ஆனந்த வேதத்தில் தனது உள்ள வேட்கைகளை வெளிப்படுத்தி வருமிவர் சங்கர ஜெயந்தி பற்றி கூறி ஆனந்திப்பது இதுதான்.

சங்கரா !

உள்ளபடி நீ யார் ?!?

ஜீவனான ப்ரும்மமா !?!

ப்ரும்மமான ஜீவனா !?!

சங்கரா !

மத மாற்றத்தை அன்றே எதிர்த்து நன்றாய் ஜெயித்தவன் நீ !

சங்கரா !

உலகிற்காக உன்னைப் பெற்ற அன்னையை துறந்தவன் நீ !

சங்கரா !

சூனியத்தில் காணாமல் போன,

இந்து தர்மத்தை மீட்டவன் நீ !

சங்கரா !

ப்ரும்மம் சத்தியம் என்று

அன்றே சத்தியம் செய்தவன் நீ !

சங்கரா !

அன்பு நெல்லிக்கனிக்கு

தங்க நெல்லிக்கனி தந்தவன் நீ !

சங்கரா !

இளவயதில் இமயம் ஏறி

தளராத தவமிருந்தவன் நீ !

சங்கரா !

பதரிநாதனை பக்குவமாய்

பிரதிஷ்டை செய்தவன் நீ !

சங்கரா !

காபாலிகனுக்கு உன்னைத் தந்து,

சிஷ்யனுக்கு நரசிம்மனைத் தந்தவன் நீ !

சங்கரா !

காமத்தை உணர கூடு விட்டு கூடு பாய்ந்தும் சிக்காதவன் நீ !

சங்கரா !

அசடனையும், ஆச்சரியமாய்

தோடகம் பாடவைத்தவன் நீ !

சங்கரா !

பாரதத்தின் நான்கு எல்லையிலும்,

அரணாய் மடம் நிறுவியவன் நீ !

சங்கரா !

மாயையைப் புரியவைத்தவன் நீ !

ஜீவனை உணர்த்தியவன் நீ !

சங்கரா !

காலடியில் வந்தவன் நீ !

காலடியால் உலகை வென்றவன் நீ !

சங்கரா !

கோவிந்த பாதம் பிடித்தவன் நீ !

கோவிந்த பஜனை சொன்னவன் நீ !

சங்கரா !

உன் ஞானம் உள்ளபடி

உணர்ந்தவர் யாரிங்கே ?!?

உன்னைத்தான் உள்ளபடி

அறிந்தவர் யாரிங்கே ?!?

உன் வார்த்தை உள்ளபடி

புரிந்தவர் யாரிங்கே ?!?

சங்கரா !

உள்ளபடி நீ

என்றும் புரியாத புதிர் !!!

சங்கரா !

இன்று உன் பிறந்தநாள் !!!

வருவாயா ?!?

சொல்வாயா ?!?

அருள்வாயா ?!?

தருவாயா ?!?

ஆம், 2532 வது சங்கர ஜெயந்தி, அதாவது, அவரது பிறந்த நாள் இந்த வாரம் எங்கும் கொண்டாடப்பட்டது.

பாரத பிரதமரும் ஸ்ரீஆதி சங்கரரின் ஜன்மஸ்தான க்ஷேத்ரமான காலடியில் அவரது பிறந்த இடத்திலுள்ள கோயிலில் தரிசனம் செய்தார்.

20230329080636171.jpg