பழவேற்காடு சிந்தாமணீசுவரர் கோயிலில் பழமையான நான்கு கல்வெட்டுகள் உள்ளன:
பழைய + வேல் + காடு என்பது பழவேற்காடு ஆனது. வேல மரங்கள் நிறைந்த காடு என்பது இதன் பொருள். ஐரோப்பியர்கள் பழவேற்காடு என்ற பெயரை உச்சரிக்க முடியாததால் பழவேற்காடு என்பதை புலிகாட் என்று அழைத்தனர். ஆங்கிலப் பெயராக நிலைத்துவிட்டது. இக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பழவேற்காட்டில் பக்கிங்காம் கால்வாயும் வங்கக் கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியில் நாற்புறமும் நீர் சூழ கருங்காலி கிராமத்தில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணல் திட்டில் 3 சென்ட் இடத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.
கி.பி.1933-34 ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின் மூலம் இவ்வாலயத்தில் நான்கு கல்வெட்டுகள் இருப்பதை அறிகிறோம். இராஷ்டிர கூட கன்னரதேவன் (சி.பி. 965), இரண்டாம் சுந்தர சோழன் (கி.பி. 973) மற்றும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வேறு இரண்டு கல்வெட்டுகளும் இத்தலத்தின் சிறப்புகளைக் தெரிவிக்கின்றன.
பாண்டிய நாட்டு கோட்டாறு பகுதியைச் (நாகர் கோயில்) சேர்ந்த பட்டாலகன் என்பவன் திருப்பகவன்துறை இறைவனை மீண்டும் பிரதிஷ்டை செய்துள்ளான். இப்பகவன் துறையானது மேற்கடல் கோகர்ண சமாநமாகிய கீழ்க்கடல் தீர்த்மான திருப்பகவன்துறை எனக் கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தப் பட்டாலகன் ஆரணி ஆற்றங்கரையில் வழிபாட்டிற்கென நிலங்கள் வாங்கித் தந்துள்ளான். இதே போல, இளநிரவி (வணிகர் குழு) சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமும் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. விஜயநகர மன்னர் காலத்தில் அனந்தராயன் பட்டணமான பழவேற்காடு என்று இவ்வூர் அழைக்கப்படு அழைக்கப்படு போல கிறது.
இப்பழவேற்காட்டில் சீனக் கப்பல்கள் மூலம் துணி மற்றும் சரக்குகள் ஏற்றமதியாயின. இதேபோல டச்சுக்காரர்களும் இங்கு வணிகம் செய்துள்ளனர். பழவேற்காடு ஆதி நாராயணசாமி கோயிலில் காணப்படும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு தெலுங்குக் கல்வெட்டில் இவ்வூர் பிரளயக் காவேரி என்றும், மல்லப்பட்டணம் என்றும் அழைக்கப்படடு வந்துள்ளது.
பாண்டிய நாட்டு கோட்டாறு பகுதியைச் (நாகர் கோயில்) சேர்ந்த பட்டாலகன் என்பவன் திருப்பகவன்துறை இறைவனை மீண்டும் பிரதிஷ்டை செய்துள்ளான். இப்பகவன் துறையானது மேற்கடல் கோகர்ண சமாநமாகிய கீழ்க்கடல் தீர்த்மான திருப்பகவன்துறை எனக் சுல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.
"இந்தப் பட்டாலகன் ஆரணி ஆற்றங்கரையில் வழிபாட்டிற்கென நிலங்கள் வாங்கித் தந்துள்ளான். இதே போல இளநிரவி (வணிகர் குழு) சதுர்வேதி மங்கலத்துச் சபையாரிடமும் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. விஜயநகர மன்னர் காலத்தில் அனந்தராயன் பட்டணமான பழவேற்காடு என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. இப்பழவேற்காட்டில் சீனக் கப்பல்கள் மூலம் துணி மற்றும் சரக்குகள் ஏற்றமதியாயின. இதேபோல டச்சுக்காரர்களும் இங்கு வணிகம் செய்துள்ளனர். இதே போல, பழவேற்காடு ஆதி நாராயணசாமி கோயிலில் காணப்படும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு தெலுங்குக் கல்வெட்டில் இவ்வூர் பிரளயக் காவேரி என்றும் மல்லப்பட்டணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது", என்கிறார் பனையபுரம் அதியமான், எழுத்தாளர்.
ஆலய தரிசன நேரம்
இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. அதனால், காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே இந்த ஆலயம் திறந்திருக்கும். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும். பிரதோஷ காலங்களில் மாலை 3 மணி முதல் 5 % மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
இக்கோயில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் பழவேற்காட்டில் பக்கிங்காம் கால்வாயும் வங்கக் கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியில் நாற்புறமும் நீர் சூழ கருங்காலி கிராமத்தில், சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணல் திட்டில் 3 சென்ட் இடத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. பழவேற்காடு வர விரும்புவோருக்கு நெற்குன்றத்திலிருந்தும் பொன்னேரியிலிருந்தும் ஏராளமான பேருந்து வசதி உண்டு. கோயம்பேட்டிலிருந்தும் நேரடியாக செல்லப் பேருந்து வசதி உண்டு. சென்னையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
படகு மூலம் பயணம் சென்று ஆலயத்தை அடையலாம்
சாலை வழியே வர விரும்புவோர் சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டு புறநகர் - இரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் எண்ணூர் துறைமுகம் காட்டுப்பள்ளி வழியாகக் கருங்காலி கிராமத்தில் உள்ள கோவிலடி சிந்தாமணிசுவர் ஆலயம் வரலாம். இதே போல, மீஞ்சூரிலிருந்து காட்டூர் வழியாக வரும்போது, பக்கிங்காம் கால்வாய் வரை வர வேண்டும். அக்கரையிலிருந்து படகு மூலம் மறுமுனையில் உள்ள சிந்தாமணீசுவரர் ஆலயத்தை அடையலாம்.
மற்றொரு வழியாக, படகுமூலம் வரவிரும்புவோர் சாட்டான் குப்பம் அல்லது பழவேற்காடு படகுத் துறையிலிருந்து 5 கிலோ மீட்டர் தெற்கே படகு மூலம் பயணம் சென்று வரலாம்.
இவ்வூரில் பிரம்மாண்ட அமைப்பில் ஆனந்தவல்லி உடனுறை சோம் ஈசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.
"அந்நிய தேசத்தவரின் நேசமிகு இடமாகத் திகழ்ந்த பழவேற்காடு, ஆலயங்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும், பறவைகளின் சொர்க்க பூமியாகவும், பயணிகளின் சுற்றுலாத் தலமாகவும், மீனவர்களின் தாய் மன்னனாகவும் இருக்கின்றது", என்கிறார் பனையபுரம் அதியமான், எழுத்தாளர்.
கி.பி. 1896-ல் உருவாக்கப்பட்ட சுப்பிரமணியர் கோயில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் முருகப் பெருமாளின் அங்கங்களில் அமைந்துள்ள சக்திகள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது வேறெங்கும் காண முடியாத அரிய படைப்பாகும்.
இதே போல கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி நாராயணர் கோயிலும் மிகப் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. தாயார் பெயர் பங்கஜவல்லி ஆகும். கல்வெட்டு, சிற்பம், கட்டடக்கலை மூன்றிலும் சிறப்புப் பெற்ற இக்கோயில் பாலவந்ததறு கன்பவ கட்டப்பட்டதாகும்.
எடமணி கிராமத்தில் பனை மரத்தின் அடிப்பகுதியே மூலவராகக் கொண்ட அருள்மிகு கரிமணல் அங்காள பரமேசுவரி உடனுறை சடையராய ஈசுவரர் திருக்கோயில் எளிய வடிவில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் அமைந்திருத்த இத்தலம் அங்கே ஆய்வு மையம் அமைந்ததை யொட்டி, தற்போது இரங்கே எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயம் குழந்தைப் பேறு அளிக்கும் கண்கண்ட தெய்வத் தலமெனக் கூறப்படுகிறது.
"அந்நிய தேசத்தவரின் நேசமிகு இடமாகத் திகழ்ந்த பழவேற்காடு, ஆலயங்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகவும், பறவைகளின் சொர்க்க பூமியாகவும், பயணிகளின் சுற்றுலாத் தலமாகவும் மீனவர்களின் தாய் மண்ணாகவும் இருக்கின்றது", என்கிறார் பனையபுரம் அதியமான், எழுத்தாளர்.
சிறுசிறு தீவுகளைக் கொண்டு இயற்கை எழிலுடன் காட்சி தருவதால் அனைத்துத் தரப்பினரும் நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க ஏற்ற இடம் பழவேற்காடு.
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload