கடல் பகுதியில் 'நீலத் துளை' என்பது, ஒரு பெரிய கடல் குகை அல்லது புதைகுழி. பொதுவாக, இதுபோன்ற நீலத் துளை ஆற்று மணல்களிலும் தீவுகளிலும் காணப்படும். நீலத் துளைகள் என்பது, பனி காலங்களில் (Ice Age) பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, அதாவது, தற்போது இருக்கும் கடல் மட்டத்தின் அளவைவிட 100 முதல் 120 மீட்டர் வரை குறைவாக இருந்தது. இந்த நீலத் துளை, தண்ணீரின் மட்டம் உயர உயர மறைந்துவிட்டது. இதுபோன்ற நீலத் துளைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவை.
உலகிலேயே ஆழமான பள்ளம், தென்சீனாவில் கடந்த 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 980 அடி ஆழம். இப்பள்ளத்துக்கு 'டிராகன் துளை' என பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தாற்போல், மெக்சிகோ நாட்டின் சேத்துமால் கடற்கரையில் சமீபத்தில் இரண்டாவது ராட்சத துளை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, 1,47,000 சதுர அடி ஆழம் கொண்டது. இதற்கு 'தாம் ஜா' (Taam Ja) என பெயரிடப்பட்டு உள்ளது. மாயன் மொழியில் 'தாம் ஜா' என்றால், ஆழமான தண்ணீர்.
இப்பள்ளத்தின் வாய் மட்டும் 15 அடியை கொண்டுள்ளது. இது கடந்த 2021-ல் கண்டுபிடிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு தான் கட்டுரையாக வெளியானது. இந்த ராட்சத பள்ளம் நீலநிறத்தில் இருப்பதால், இதை 'நீலத் துளை' என பொதுவான பெயர் கொண்டு அழைக்கின்றனர். தாவரங்கள், அவற்றின் இலைகள் காலப்போக்கில் அழுகி உருவாகும் பாக்டீரியாவால் அடர் நீலநிறம் உருவாகிறது. அதற்குள் சூரிய வெளிச்சம்கூட புகாது. இந்த ராட்சத பள்ளங்களில் ஆக்ஸிஜன் குறைவு.
எனவே சுற்றுலா பயணிகள் வழிதவறி நீந்திச் சென்றால், அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அதுபோல் கப்பல்களும் நீலத் துளை வழியே சென்றுவிட்டாலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த பள்ளத்தை சுற்றிலும் கெட்ட நீர்தான் இருக்குமாம் என்கின்றனர் ஆய்வு விஞ்ஞானிகள்.
நம்ம பார்க்காததா ???
மிகுந்த பணக்காரர்களை ஆங்கிலத்தில் அவர்களுக்கு டீப் பாக்கெட் என்று சொல்வார்கள்.
யோசித்துப் பார்த்தால், நம்ம அரசியல்வாதிகளின் பாக்கெட் ஆழத்தை விட இந்த நீலப் பள்ளம் கொஞ்சம் தான் அதிகம்.
மாலாஸ்ரீ
Leave a comment
Upload