பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசேவின் பெயரில் மக்கள் சேவை, நல்ல நிர்வாகம், நடைமுறைக்கு உகந்த லட்சியவாதம் ஆகியவற்றை முன்னெடுத்து செல்லும் நோக்கில், ராக்ஃபெல்லர் பிரதர்ஸ் நிதி அறக்கட்டளை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசினால் ‘ரமோன் மகசேசே’ விருது தோற்றுவிக்கப்பட்டு, கடந்த 1958-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் விருதாக கருதப்படும் ரமோன் மகசேசே விருது, கடந்த 1959-ம் ஆண்டு தலாய்லாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது தலாய்லாமாவால் மகசேசே விருதை நேரில் பெறமுடியவில்லை.
இந்நிலையில், இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலா நகரில் உள்ள தலாய்லாமாவின் வீட்டில், 64 ஆண்டுகளுக்கு பிறகு – கடந்த 26-ம் தேதி தலாய்லாமாவிடம் ரமோன் மகசேசே விருது ஒப்படைக்கப்பட்டது. இவ்விருதை ரமோன் மகசேசே விருது அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கினர். இதுகுறித்து தலாய்லாமா அலுவலகத் தரப்பில் கூறுகையில், ‘புனிதமான பௌத்த மதத்தைக் காக்கும் திபெத் சமூகத்தின் துணிச்சலான போராட்டத்தில் தலாய்லாமாவின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது. இது, அவருக்கு அறிவிக்கப்பட்ட முதல் சர்வதேச விருது!’ என்று குறிப்பிட்டுள்ளது.
Leave a comment
Upload