பிரான்ஸ் நாட்டின் MONT DE MARSAN எனும் விமானப்படை தளத்தில் இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் விமானப் படை வீரர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் 'ஓரியன் பயிற்சி' இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கவிருக்கிறது. இப்பயிற்சியில், இந்திய விமானப் படையினரின் அனுபவத்தை அதிகரிக்கும் வகையில் முதன்முறையாக பெண் போர் விமானி ஷிவாங்கி சிங் பங்கேற்க சென்றுள்ளார். 'ஓரியன் பயிற்சி' என்பது, பல்வேறு நட்சத்திர கூட்டங்கள் ஒன்றிணைந்து, ஒரு பிரமாண்ட உருவத்தை உருவாக்குவதுதான் என்று கூறப்படுகிறது.
இந்த 'ஓரியன்' பயிற்சியில் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் அமெரிக்க நாடுகளின் விமானப் படைகளும் பங்கேற்கின்றன. இதில், இந்தியா சார்பில் முதன்முறையாக 4 ரஃபேல் விமானங்கள், இரண்டு C-17 குளோப் விமானங்கள், இரண்டு ll- 78 விமானங்களுடன் பெண் போர் விமானி ஷிவாங்கி சிங் தலைமையில் 165 விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்தியா சார்பில் சென்றிருக்கும் மேற்கண்ட 3 போர் விமானங்களும் இந்திய விமானப் படையின் முக்கிய அங்கமாக விளங்கி வருகிறது. இதில் ll-78 எனும் போர் விமானம், சோவியத் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்டது. இந்திய விமானப் படையில் ll-78 ரக விமானங்கள் மொத்தம் ஆறு உள்ளன. இது ஒரு கார்கோ வகை விமானம். அதாவது, சுமார் 1 லட்சம் எடையிலான பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ll-78 விமானங்கள் கொண்டு செல்லும்.
அதேபோல், நடுவானில் 2 போர் விமானங்களுக்கு ஒரே நேரத்தில் ll-78 ரக விமானம் பெட்ரோலை நிரப்பும். மற்றொரு விமானமான C-17, அமெரிக்க தயாரிப்பு கார்கோ வகை விமான, சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற்ற C-17 விமானம்தான் பயன்படுத்தப்பட்டது. பீரங்கி டேங்குகளையும் ஆயுதங்களையும் இடமாற்றம் செய்வதற்கும் C-17 விமானங்கள்தான் பயன்படுகின்றன.
இது அதிகபட்சமாக 450 கி.மீ வேகத்தில், சுமார் 6 லட்சம் கி.கி எடையுடன் அதிகபட்சமாக சுமார் 6 ஆயிரம் கி.மீ தூரம்வரை C-17 விமானம் இடைநில்லாமல் பறக்கும் எனக் குறிப்பிடத்தக்கது. இந்தியா சார்பில் 'ஓரியன்' பயிற்சியில் பங்கேற்கும் மூன்றாவது ரஃபேல் போர் விமானம். இதற்கு முன்னர் எந்தவொரு சர்வதேச நாடுகளின் பயிற்சியிலும் ரஃபேல் பங்கேற்றதில்லை.
தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 'ஓரியன்' பயிற்சியில், முதன்முறையாக இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் பங்கேற்கிறது. இந்திய விமான படையில் ரஃபேல் விமானத்தைவிட அதிவேகமாக பறக்கும் விமானங்கள் இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானங்கள் குறைவுதான். எனவே, இத்தேவையை பூர்த்தி செய்யத்தான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டன.
இந்திய விமானப்படை சார்பில் ஃப்ளைட் பெண் லெப்டினன்ட் ஷிவாங்கி சிங், முதன்முறையாக ரஃபேல் போர் விமானத்தை இயக்கினார். சர்வதேச நாடுகளிடையே நடைபெறும் விமானப்படை பயிற்சியில், இந்திய விமானப்படையின் ஃப்ளைட் லெப்டினன்ட் ஷிவாங்கி சிங், ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்கிற சாதனையைப் பெற்றுள்ளார்.
Leave a comment
Upload