தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230328183654404.jpeg

ஸ்டாலினை தோளில் சுமப்பதில் வெட்கமில்லை அமைச்சர் துரைமுருகன்.

ஆமாம் தலைவரே வெட்கப்பட்டா அமைச்சராக முடியுமா ?

எம்ஜிஆர் உடன் இருந்தது போல் ஓபிஎஸ் உடன் இறுதி வரை இருப்பேன் பண்ருட்டி ராமச்சந்திரன்.

ஜெயலலிதா, விஜயகாந்த், டாக்டர். ராமதாஸ் கூட நீங்க ஏன் இறுதி வரை இல்லை என்று நான் கேட்க மாட்டேன் தலைவரே

விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு தேவையில்லை என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் இரா. முத்தரசன்.

தனிப்பட்ட முறையில் காம்ரேட் சொல்லியிருக்கிறார் கட்சிக் கருத்து எல்லாம் கிடையாது.

வெளி மாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதி செய்து தராத 47 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது இதுதான்.

காங்கிரசை விட்டு சென்ற பலரும் இப்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். முன்னாள் புதுவை முதல்வர் நாராயணசாமி.

தலைவரே இப்ப இதை இங்க எதுக்கு சொல்றீங்க

கர்நாடகாவில் ஒன்றரை லட்சம் கோடி ஊழல் செய்தது பாஜக அரசு பிரியங்கா காந்தி

மொத்த பட்ஜெட்டுமே ஊழல்னு சொல்றாங்க அக்கா

வீட்டை புதுப்பிக்க 45 கோடி செலவிட்ட கேஜ்ரிவால் பாஜக குற்றச்சாட்டு

அடுத்த சம்மனுக்கு இப்பவே ரெடியா இருங்க முதல்வரே

எங்களின் மனதின் குரலை கேளுங்கள் பிரதமர் மோடிக்கு மல்யுத்தம் வீராங்கனைகள் வலியுறுத்தல்.

அதுக்கு முன்ன பிஜேபி எம்பிமனதின் குரலை பிரதமர் கேட்டுவிட்டார்

மணல் கொள்ளை குறித்து புகார் சொன்ன விஏஓ அலுவலகத்தில் புகுந்து வெட்டிக்கொலை

மூணு நாள் முன்ன தான் தமிழ்நாடு அமைதி பூங்காவா இருப்பதால்தான் முதலீட்டாளர்கள் குவிக்கிறார்கள் என்று பெருமையாக சொன்னார் முதல்வர்

முதல்வராக மட்டுமல்ல தந்தையாகவும் இருந்து திட்டங்களை தீட்டுகிறேன் முதல்வர் ஸ்டாலின்

தந்தையா முதல்ல மகனை துணை முதல்வர் ஆக்குங்க என்று ஒரு குரல் கேட்கிறது பாருங்கள் முதல்வர்

இளைஞர்கள் தேசத்தின் வளர்ச்சி விரும்புகிறார்கள் பிரதமர் மோடி

பிரதமரே நீங்கள் ராகுல் காந்தியை மறந்து போய் புகழ்ந்து பேசுறீங்க

80 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை இருந்தால் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 230 ஆக உயரும்

கட்சிக்காரர்களின்' மாமுல் ' வாழ்க்கையை உயர்த்த திட்டம் சரிதானே தலைவரே

மூன்று முறை முதல்வர் பதவியை கொடுத்ததும் திருப்பித் தந்தவர் ஓபிஎஸ் பண்ருட்டி ராமச்சந்திரன் புகழாரம்

அப்ப அந்த தர்மயுத்தம் ஜெயலலிதா சமாதியில் தியானம் அதெல்லாம் எதுக்கு அண்ணா

41 கோடி நன்கொடை பெற்று மாநிலக் கட்சிகளின் பி ஆர் எஸ் கட்சி முதலிடம்.

இது எங்க அரசின் சாதனை என்று தெலுங்கானா முதல்வர் பெருமையாக சொல்லாமல் இருந்தால் சரி.

சபரீசன் என் வழிகாட்டி உதயநிதி நம்பிக்கை நட்சத்திரம் நிதியமைச்சர் தியாகராஜன் தன்னிலை விளக்கம்.

அமைச்சர் பேசாமல் இதை ஆடியோவா வெளியிட்ட நல்லா இருக்கும்.