தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

போலீஸ் நடிகை

20230328180835959.jpg

தங்கர் பச்சன் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் கருமேகங்கள் ஏன் கலைகின்றன. இதில் பாரதிராஜா நீதிபதி ஆகவும் கௌதம் வாசுதேவ மேனன் வழக்கறிஞராகவும் அதிதி பாலன் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முக்கிய படம் இது என்கிறார் அதிதி பாலன்.

வேல் டாட்டூ

2023032818170549.jpg

நடிகை ஸ்ருதிஹாசன் தனது உடம்பில் வேல் படத்தை டாட்டூவாக வரைந்து இருக்கிறார்.முருக பக்தரான நடிகை வேல் படம் என் உடலில் உள்ளதால் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன் என்கிறார்.

தெலுங்கிலும் இவானா

20230328181851877.jpg

பாலா இயக்கிய நாச்சியார் படம் மூலம் அறிமுகமான மலையாள நடிகை இவானா இவர் பிரதிப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இது தவிர மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் டோனி தயாரிப்பு படம் சேர்த்து.தற்சமயம் அவருக்கு தெலுங்கிலும் நடிக்க வாய்ப்பு வரத் தொடங்கிவிட்டது.

ஆகஸ்ட் 11 ரிலீஸ்

20230328182346761.jpg

சிவகார்த்திகேயன் அதிதி சங்கர் நடிக்கும் படம் மாவீரன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தற்சமயம் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ அதிவேகமாக பரவுகிறது.

ஜெயம் ரவி ஜோடி

20230328182624332.jpg

தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமா மீது எப்போதும் ஒரு கண் தமிழில் சூர்யாவுடன் வணங்கான் படத்தில் ஜோடி கீர்த்தி ஷெட்டி என்று உறுதியானது. படத்தில் இருந்து சூர்யா விலகியதால் அப்செட் ஆன நடிகை இப்போது வெங்கட் பிரபு சிபாரிசில் ஜெயம் ரவியின் 32-ஆவது படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகி என்பது உறுதியாக இருக்கிறது.

இதாங்க மேட்டர்

20230328182922980.jpg

அழகுக்கு என்று எந்த இலக்கணமும் இல்லை அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது. எனவே நான் அழகா இல்லை என்று யாரும் வருத்தப்படாதீர்கள் உதாரணம் நான் தான் என்னை அழகாக காட்ட 10 பேர் வேலை பார்க்கிறார்கள் இல்லையென்றால் நானும் சாதாரணமாகத்தான் இருப்பேன் என்கிறார் பிரியா பவானி சங்கர் ரொம்ப தைரியமா உண்மைய சொல்றீங்க மேடம்.

சூப்பர் குட் தயாரிப்பில் விஜய்

20230328183051371.jpg

ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் செல்வராகவன் ஜித்தன் ரமேஷ் கிட்டி ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கும் பான் இந்தியா படம் ஃபர்ஹானா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முஸ்லிம் பெண்ணாக நடிப்பதால் தன் வீட்டுக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணை அழைத்து வந்து தொழுகை உள்பட முஸ்லிம் நடைமுறைகளை நன்கு கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

20230328183502205.jpg

நடிகர் விஜயின் 68-வது படத்தை சூப்பர் குட் பிலிம் தயாரிக்க இருக்கிறது. ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி ,லவ் டுடே ஜில்லா ஆகிய படங்களை சூப்பர் குட் மூவிஸ் தயாரித்திருக்கிறது.

முக்கிய வேடத்தில் ரஜினி

2023032818324817.jpg

ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் முதலில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்று தான் சொல்லப்பட்டது இப்போது அந்த கெஸ்ட் ரோல் முக்கிய வேடமாக மாறி பெரிது பண்ணி விட்டார்கள் மும்பையில் 20 நாள் ஷூட்டிங் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

இந்தியில் பரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கிய அறிமுகப்படம் பரியேறும் பெருமாள் 2018-ஆம் ஆண்டு வெளியான போது அமோக வரவேற்பு பெற்றது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது கரன் ஜோகர் தயாரிக்கிறார். சித்தாந்த சதிர்வேதி நாயகன் திரிப்தி டிம்ரி நாயகி.