இது ஏதோ புது சினிமா என்று நினைத்துக் கொள்ளப் போகிறீர்கள். இந்த செய்தியின் தாக்கம் தான் மேலே உள்ள போட்டோ ஷாப் படம் !
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் அருகே தயாள்பூர் கிராமம் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையத்தில், ஒவ்வொரு நாளும் ரயிலில் செல்வதற்கு அக்கிராம மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். ஆனால், ரயிலில் செல்வதில்லை. ஏனெனில், அங்கு எந்தவொரு ரயிலும் நிற்பதில்லை.
ஏன் ???
இதன் பின்னால் ஒரு சிறிய சுவாரஸ்ய கதை இருக்கிறது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருப்பப்படி, அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரியால் தயாள்பூர் கிராமத்தில் கடந்த 1954-ம் ஆண்டு ரயில் நிலையம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
அதன்பிறகு பல்லாண்டுகளாக சுற்றுவட்டார மக்களின் பயண வழியாக இருந்த தயாள்பூர் ரயில் நிலையம், கடந்த 2016-ம் ஆண்டில் மூடப்பட்டது. இதற்கு காரணம், இந்திய ரயில்வே நிர்வாகம் நிர்ணயித்த சில தரங்களை தயாள்பூர் ரயில் நிலையம் பூர்த்தி மூடப்பட்டதாம்! குறிப்பாக, ரயில்வேயை பொறுத்தவரை, மெயின் லைனில் ஒரு ஸ்டேஷன் இருந்தால், நாள்தோறும் குறைந்தது 50 டிக்கெட்டுகளாவது வாங்கப்பட வேண்டும் என்பது விதி.
அதுவே, ஒரு ரயில் நிலையம் கிளை லைனில் இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 டிக்கெட்டுகளாவது விற்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே நிர்ணயித்த வருவாய் தொடர்பான தரநிலைகளை பூர்த்தி செய்யாததால், தயாள்பூர் ரயில் நிலையம் மூடப்பட்டதாக வடமாநில ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தயாள்பூர் ரயில் நிலையம் மூடப்பட்ட பிறகு, அந்நிலையத்தை மீண்டும் திறக்க தயாள்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ரயில்வே அதிகாரிகள், மத்திய-மாநில அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்களிடம் பலமுறை விண்ணப்பித்து , இறுதியில், கடந்த 2022-ம் ஆண்டில் ஒரு கண்டிஷனுடன் தயாள்பூர் ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் மீண்டும் திறந்தது.
அதன்படி, நாள்தோறும் தயாள்பூர் நிலையத்தில் எந்தவொரு ரயிலும் நிற்கவில்லை என்றாலும், அதிகபட்சமாக 50 டிக்கெட்டுகளை எப்பாடு பட்டாவது மக்கள் டிக்கெட் வாங்கி விடுகின்றனர். இந்த ரயில் நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்பதில் கிராம் மக்கள் உறுதியாக உள்ளனர்.
ஆனாலும் இங்கு ரயில்கள் நின்று செல்ல அனுமதி வழங்குவதில் ரயில்வே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் கிராம மக்கள். 'இங்கு ரயில் பயணங்கள் தொடருமா?'
நம்மூர் அரசியல்வாதிகளில் ஒருவர் இரயில் டிக்கெட் எடுக்காமல் வந்த கதை தெரிந்த நமக்கு இரயிலில் போகாமலே டிக்கெட் வாங்கும் மக்கள் அதிசயம் தான். !!!
மாலாஸ்ரீ
Leave a comment
Upload