தொடர்கள்
பொது
சமந்தா கோவிலுக்கு போகலாமா ??? ! உஸ்ஸ்ஸ்ஸ் முடியல...... மாலா ஶ்ரீ

20230328151816772.jpeg

நடிகை சமந்தா.

இவருக்கு ஆந்திராவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், அலப்பாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர், தனது வீட்டுக்குள் நடிகை சமந்தாவுக்கு தனியே கோயில் கட்டி, திறந்து வைத்துள்ளார். சந்தீப் கூறுகையில், ‘‘அவரது படங்களை தொடர்ந்து பார்ப்பதாலேயே, நான் நடிகை சமந்தாவுக்கு தீவிர ரசிகராக மாறவில்லை. அவரது பிரதியூஷா அறக்கட்டளை மூலமாக பல்வேறு சமூகசேவைகள் செய்து வருகிறார். இதன்மூலம் எனக்கு அவர்மீதான மதிப்பு கூடியது.

மேலும், அவர் விளம்பரமின்றி ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்து வருகிறார். குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்து வரும் அவரது செயல்தான் என்னை கவர்ந்தது. இதனால், எனது வீட்டில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்காக எனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி, அவருக்கு கோயில் கட்டி திறந்துள்ளேன்!’’ சந்தீப் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஸ்ரீநிதி அகர்வால், மலையாள நகை ஹனிரோஸ் ஆகியோருக்கு அவரது ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர். ஆக சமந்தா கோவில் புதிது அல்ல. மார்க்கெட் போனதும் இந்த கோவில்கள் என்ன ஆகும் என்றும் விசாரிக்க வேண்டும். !!

இதெல்லாம் ஒரு பொழைப்பா.. என்று நமக்கு கேட்கத் தோன்றுகிறதா ?? நாமும் தான் சமந்தாவுக்கு கோவில் கட்டியிருக்கிறோம். மனதுக்குள். இதையெல்லாம் இப்படியா வெளிய தெரியற மாதிரி கட்டறது...