தொடர்கள்
தொடர்கள்
கோப அறை-எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20230231160115699.jpg

ராகவன் அந்த குகைக்குள் தவழ்ந்து செல்கிறான். பொந்தை கடந்ததும்
எழுந்து நின்றான்.
நின்ற இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள்.
ராகவன் யோசனையுடன் ஒரு சவப்பெட்டியின் மூடியை திறந்தான்.
சவப்பெட்டியிலிருந்து ஒரு நெடிய உருவம் எழுந்தது. அது சிவப்புநிற அங்கி
அணிந்திருந்தது. விரல்களில் நகங்கள் நீண்டிருந்தன.
உருவத்தின் முகத்தை பார்த்து விக்கித்தான்.
மேனேஜர் சந்திரமெளலி!
அலுவலகத்தின் எல்லா மூலைகளுக்கும் என்னை கைப்பந்தாய் அடித்து
விளையாடும் மேனேஜர் நீ ட்ராகுலாவா?
சந்திரமௌலியின் இரு வாயோரம் பற்கள் நீண்டு இரத்தம் வழிந்தது.
“ராகவா! பக்கத்ல வா…”
“எதுக்கு?”
“நான் உன் கழுத்தை கடிக்க வாகாக வந்து நின்னேன்னா உன் கழுத்தில்
பற்களை பதித்து இரத்தம் குடிப்பேன்!”
“நான் என்ன பொள்ளாச்சி எளனியா, இல்ல டெட்ராபேக் ஜுஸா நீ என்
இரத்தம் குடிக்க?”
“நான் உன் மேலதிகாரி. நான் சொல்வதை கேட்காவிட்டால் உனக்கு மெமோ
குடுப்பேன்… தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை பாயும்!”
“நூறுமில்லி ரத்தம் மட்டும் குடிச்சிக்க!”
கழுத்தை நீட்டினான். சந்திரமௌலி ராகவனின் முழுஉடல் இரத்தத்தையும்
குடித்து உடலை நெட்டித் தள்ளினான்.
“அடப்பாவி! என் உடம்பில் இருந்த ஆறுலிட்டர் இரத்தத்தையும் குடிச்சிட்டியே…
சண்டாளா..” கதறியபடி தூக்கத்திலிருந்து எழுந்தான் ராகவன்.
கண்டது கனவு என்கிற பிரக்ஞைக்கு வரவே சிலபல நிமிடங்களாயிற்று.
சந்திரமௌலி ரத்தம் கடித்த கழுத்தை தடவி பார்த்துக் கொண்டான்.

பக்கத்தில் படுத்திருந்த மனைவி நக்கலாய் கேட்டாள். “என்ன இன்னைக்கும்
கனவா?”
“ஆமாம்!”
“நேற்றைய கனவில் உங்க மேனேஜர் கார் ஏத்தி உங்களை கொன்னார்,,,
சரியா?”
“ஆமா…”
“முந்தாநேத்தி கனவில கில்லட்டின் கருவி வைத்து உங்க தலையை
துண்டித்தார் உங்க மேனேஜர் சரியா?”
“ஆமா..”
“அதுக்கும் முந்தினநாள் மலைஉச்சிலயிருந்து உங்களை உங்க மேனேஜர்
தலைகுப்புற தள்ளி கொன்னார் சரியா?”
“ஆமா…”
“உங்களுக்கு இதே வேலையா போச்சு. இப்படியா ஒரு தொடைநடுங்கியா
இருப்பீங்க, சகமனுஷனுக்கு இப்படி பயந்து சாகலாமா நீங்க?”
“உனக்கு அவனை பத்தி தெரியாது. சதா தேள் மாதிரி கொட்டுவான். தேனீ
மாதிரி துரத்திதுரத்தி கொட்டுவான். வெறும் வார்த்தைகளால் ஒருத்தனை கொல்ல
முடியும்னா அதை அவன் சிறப்பா செய்வான்… முறைப்பான்… பற்களை நறநறவென
கடிப்பான் வலிப்பம் காட்டுவான். புட்டத்தை ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடுவான் வலது
நடுவிரலை உயர்த்துவான் ‘எப்’ வார்த்தையை அடிக்கடி யூஸ் பண்ணுவான்!”
“வேற பிராஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் வாங்க வேண்டியதுதானே?”
“ரெண்டு வருஷமா கால்ல விழாத குறையா கேட்டுக்கிட்டு இருக்கேன் தர
மாட்டேங்கிறான்!”
“உனக்கு காக்கா பிடிக்கவும் தெரியாது ஜால்ராவும் அடிக்கவும் தெரியாது. நீ
வேஸ்ட் பீஸ்… மேனேஜனை அசமடக்கி போடத் தெரியல உனக்கு”
“அவன்கிட்ட எந்த பசப்பும் வேகாது!”
“நான் வேணும்மின்னா அவன்கிட்ட வந்து பேசி பார்க்கவா?”
“பொண்டாட்டியை வச்சு மேலதிகாரியை மயக்க பாக்றேன்னு எனக்கு
அவப்பெயர் வந்திடும்!”
“உன் மேனேஜன் மனிசக்கறி திங்றவனாகவே இருக்கட்டும். இனி உன் ஆபிஸ்
விஷயத்தை வீட்டுக்கு கொண்டு வராதே! ராத்திரிகள்ல என்னை நிம்மதியா தூங்க
விடு…”
“முயற்சி பண்றேன்!’‘
“அடுத்த தடவை என் மேனேஜன் என்னை விஷம் வச்சு கொல்ற மாதிரி கனவு
கண்டேன்னு வந்த- பத்ரகாளியா மாறிடுவேன்!”

திரும்பி படுத்தாள்.
எதிர்திசையில் முகத்தை திருப்பி ஒருக்களித்து படுத்தான் ராகவன்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட ஐஸ்கட்டியாய் இரவு கரைய
ஆரம்பித்தது.
அலுவலகம். தன் இருக்கையில் அமர்ந்து அன்றைய பணிகளை கவனித்துக்
கொண்டிருந்தான் ராகவன். உள்தொலைபேசி சிணுங்கியது..
மேனேஜர் அழைத்தார் “என் அறைக்கு வா….”
அறைக்குள் போனதும் “குட்மார்னிங் (எருமை) சார்!” என்றான்.
“உன் குட்மார்னிங்கை எல்லாம் குப்பைல தூக்கிப் போடு. நீ உண்மையிலேயே
எம்எஸ் சாப்ட்வேர் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் படிச்சியா? இல்ல காசு குடுத்து
டிகிரியை வாங்கிட்டு வந்திட்டியா?”
“நான் கோல்டு மெடலிஸ்ட்!”
“நான் உருவாக்கச் சொன்ன எந்த சாப்ட்வேரையும் நீ உருவாக்காம ஒரு
மாசமா உன் சீட்டை தேய்ச்சுக்கிட்ருக்க…”
“இரண்டு மூணு நாள்ல முடிச்சிருவேன் சார்!”
“நீ ரெண்டு நாளான தயிர்சாத பொட்டலம்- ஊசிப் போன சாம்பார்- உருட்டிவச்ச
எழுபது கிலோ மைதாமாவு..”
“ரொம்ப திட்டாதிங்க சார்!”
“வீட்லயும் இப்டிதான் இருப்பியா? உன் பொண்டாட்டி உன்னை எப்டி
சகிச்சிக்றா? பொண்டாட்டிய டாஷ்டாஷ் பண்றதுக்கும் நாற்பது நாள் டயம்
எடுத்துப்பியா?”
“சார்!” பதறினான். “என் வீட்டை எல்லாம் இழுக்காதிங்க சார்!”
“இன்னும் மூணு நாள் டயம் தரேன். அதுக்குள்ள நீ நான் குடுத்த
அஸைன்மென்ட்டை முடிக்கனும். இல்ல அதற்கான விளைவுகளை சந்தி. கெட்
லாஸ்ட்!”
ஏறக்குறைய அழுதபடி தன் இருக்கைக்கு திரும்பினான் ராகவன். தற்கொலை
செய்து கொள்ளலாமா- ஊரைவிட்டு பொண்டாட்டியை விட்டு ஓடிவிடலாமா-
வேலையை ராஜினாமா செய்து விடலாமா? சட்டையை கிழித்துக் கொண்டு எதாவது ஒரு கோவில் வாசலில் பிச்சை எடுக்கலாமா?
ஒரு மணி நேரம் கரைந்தது.
பிரதான தலைமை அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வந்திருந்தது. அதில்-
நியூட்டன் சாப்ட்வேர் ஊழியர்களுக்கு வணக்கம்.


‘ஒரு நிறுவனத்தில் பல்வேறு அதிகார நிலைகளில் ஊழியர்கள் இருப்பர்.
‘ஹெச்’ சுக்கு ‘ஜி’ மேலதிகாரி. ‘எப்’ புக்கு ‘ஈ’ மேலதிகாரி. ‘டி’ க்கு ‘சி’ மேலதிகாரி.
‘பி’க்கு ‘ஏ’ மேலதிகாரி. மேலதிகாரிகள் தனக்கு கீழ் பணிபுரிபவர்களை கசக்கி பிழிவர்-
நாகரிகமாகவோ காட்டுமிராண்டிதனமாகவோ மேலதிகாரி ஏற்படுத்திய ஆறாத
ரணங்கள் உங்கள் இதயத்தில். உங்கள் ரணங்கள் ஆற நாங்கள் ஒரு ஏற்பாடு
செய்திருக்கிறோம். நம் அலுவலகத்தில் ‘கோபஅறை’ உருவாக்கி இருக்கிறோம். அந்த
அறைக்குள் போய் உங்கள் மேலதிகாரியை கழுவிகழுவி ஊற்றலாம். இது அலுவலக
நடைமுறைக்கு வராது. அலுவலக மேலதிகாரிகளின் புகைப்படங்கள் கோபஅறை
மேஜையில் காத்திருக்கும். நீங்கள் அதனை சுவற்றில் ஒட்டி காரி துப்பலாம் அம்பு
எடுத்து குத்தலாம். ஒருமணி நேரம் உங்கள் மேலதிகாரியை கிழிகிழியென கிழித்து
நீங்கள் அமைதி பெறலாம். இந்த வடிகால் உங்களின் மனஉளைச்சலை
மனஅழுத்தத்தை போக்கும். கோபஅறைக்குள் நீங்கள் செய்வது முழுக்க
சிதம்பரரகசியமாக பேணப்படும். வாழ்த்துகள்!’
மாலை 5,30மணி.
இடமும் வலமும் பார்த்தபடி கோபஅறைக்குள் புகுந்தான் ராகவன்.
அறைக்குள் மெல்லிய இசை வழிந்து கொண்டிருந்தது.
தமன்னா, அனுஷ்கா, ராகுல் ப்ரீத் சிங், பிரியங்கா மோகன், கனிகா,
வாணிபோஜன் ப்ளோஅப்கள் தொங்கின.
மேஜையிலிருந்த மேனேஜர் சந்திரமௌலியின் புகைப்படத்தை எடுத்து
சுவற்றில் பதித்தான் ராகவன். “டேய் தடிமாடு… புண்ணாக்கு… மேனேஜன்னா நீ பெரிய கொம்பாடா… பருப்பு… பாடு… பேமானி… உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வைக்க உன் பொண்ட்டாட்டியை உன் வீட்டு தோட்டக்காரன் இழுத்துக்கிட்டு ஓட. விநாயகர்
சதுர்த்தி அன்னைக்கி கடைவீதில உலாவிடாத பிள்ளையார்னு கடல்ல
கரைச்சிடுவாங்க. கொரோனால புது வகை ம்யூடன்ட் தாக்கி நீ சாக. குரங்கா. யானை சாணி. குடிகாரபிச்சைக்காரனின் வாந்தி. திருநங்கைகளின் மார்புகச்சை நீ சாக்கடையில் கிடக்கும் எலி கடித்த ஆப்பிள் நீ. தொடர்ந்து ஒருமாதம் இல்லத்தரசி
செய்த பழைய உப்புமா நீ. இரண்டு வாரம் துவைக்காத கால்சாக்ஸ் நீ. பழைய
நோக்கியா பட்டன் போன் நீ. அல்சேஷனின் தம்பி நீ. ராஜபாளையம் நாயின்
அண்ணன் நீ. ராணி பத்திரிகைல வந்த குரங்கு குசாலாவின் பேரன் நீ”
திட்டியபடியே சந்திரமௌலியின் புகைப்படத்தில் அம்புகளை குத்தி கிழித்தான்.
இங்க்கை கொட்டினான்.
ஒரு மணிநேரம் வெறியாட்டம் ஆடியபின் வீட்டுக்கு புறப்பட்டான் ராகவன்,
-தலைமை நிறுவனத்தின் தலைவரும் ராகவனின் மேனேஜர் சந்திரமௌலியும்
நின்றிருந்தனர். அவர்களின் முன்னிருந்த திரையில் ராகவனின் கோபஅறை விடியோ திரையிடப்பட்டது. ராகவனின் தினுசுதினுசான வசவுகளை கண்டு முகம் சுளித்தார் தலைவர்.
“நீங்க சொன்னப்ப நான் நம்பல. ராகவன் இஸ் வயலன்ட் அண்ட் மோஸ்ட்
அரகன்ட். கோபஅறை பதிவுகளை நாம பாத்துட்டதை காட்டிக்க வேண்டாம். இன்னும் ஒரு மாதத்தில் வெவ்வேறு காரணங்களை சொல்லி அவனை நம்
நிறுவனத்திலிருந்து வெளியே துப்புங்க. வெளில எவனும் அவனுக்கு வேலை
கொடுக்காதபடிக்கு எல்லா வழிகளையும் சீல் பண்ணுங்க…”
தன்னை சுற்றி சதிவலை பின்னப்படுவது அறியாமல் ராகவன் வீட்டில்
மனைவியுடன் ராக் அண்ட் ரோல் நடனமாடினான்.