தொடர்கள்
அரசியல்
மிஸ்டர் ரீல்

20230204073049961.jpg

பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலினை பார்க்கப் போன போது திருமதி ஸ்டாலின் டிவியில் இந்தி படம் பார்த்துக் கொண்டிருந்தார். கையில் 30 நாளில் ஹிந்தி புத்தகம் வைத்திருந்தார். மிஸ்டர் ரீலை பார்த்ததும் "வாங்க வாங்க பிரைம் மினிஸ்டர் முதலமைச்சர் உள்ளே ராகுல் காந்தி கிட்ட செல்பேசியில் பேசிகிட்டு இருக்காரு. பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் வாழ்த்து சொல்லிக்கிட்டு இருக்கார்" என்று திருமதி ஸ்டாலின் சொன்னபோது மிஸ்டர் ரீல் "அப்போ அவர் தேசிய அரசியலில் இறங்குவது என்று தீர்மானம் பண்ணி விட்டாரா "என்று கேட்க அதற்கு துர்கா ஸ்டாலின் தேசிய அரசியல் என்ன திருவாரூர் கோயில் குளமா இறங்க தளபதி தான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருக்காரே அடிக்கடி பாரதிய ஜனதாவை திட்டி பேசறாரு இல்ல ஆளுநரை கண்டிக்கிறார் இல்ல இதெல்லாம் தேசிய அரசியல் தானே அப்புறம் என்ன " என்று சொல்ல என் பதில் சொல்ல அப்போது பிரதமர் வேட்பாளர் முதலமைச்சர் உள்ளே வந்தார்.

முதல்வர் ஸ்டாலின் திருமதி ஸ்டாலினைப் பார்த்து "அமைச்சர் உதயநிதி வந்திருக்கிறார் போய் பாரு" என்று அனுப்ப அப்போது மிஸ்டர் ரீல் "நீங்கள் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டீர்களா "என்று கேட்கதே ஜஸ்வி யாதவ் பீகாரில் நான் முதல்வர் நிதீஷ் குமார் துணை பிரதமர் நீங்கள் பிரதமர் அவ்வளவு தான் முடிவு பண்ணியாச்சு என்கிறார். அகிலேஷ் யாதவ் நீங்க தான் தைரியமா பாரதிய ஜனதாவை எதிர்த்து பேசுறீங்க நடுவுல நடுவுல பிரதமர் வாழ்த்தவும் செய்றீங்க உங்க மகன் அனுப்பி பிரதமர் கிட்ட பேச்சுவார்த்தை நடத்துறீங்க டெல்லி அரசியலுக்கு நீங்க தான் சரியான தேர்வு என்று வற்புறுத்துகிறார். பருக் அப்துல்லா அவர் பக்கத்து வீட்டுல இருக்குற காஷ்மீர் பண்டிட் ஜோசியம் எல்லாம் பார்ப்பாராம் அடுத்த பிரதமர் வெளிநாட்டு தலைவர் பெயரைக் கொண்ட ஒருவர் தான் என்று சொல்லி விட்டாராம் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எல்லாக் கட்சிதலைவர்கள் பெயர்களை பட்டியல் போட்டு பார்த்ததில் வெளிநாட்டு தலைவர் பெயர் வைத்திருக்கிற ஒரே ஒருவர் நீங்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் இந்த ஸ்டாலினை எதிர்ப்பது கம்யூனிசத்தை எதிர்ப்பது போல் என்று பேசிமடக்கி விடலாம் என்றெல்லாம் பேசி என்னை சம்மதிக்க வைத்து விட்டனர். எனக்கு ஜோசியத்தில் தான் நம்பிக்கை இல்லை. ஆனாலும், சிறுபான்மை வகுப்பை சேர்ந்த ஒருவர் சொல்லும் போது மதசார்பற்ற தலைவர் நான் அதை ஏற்றுக்கொள்ள தானே வேண்டும் " என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லும் போது அங்கு வந்த துர்கா ஸ்டாலின் "பிரதமர் அலுவலகம் அருகே ஒரு பிள்ளையார் கோயில் கூட இல்லையாமே நம்ப ராசா கிட்ட சொன்னேன் பிள்ளையார் கோயில் நான் கட்டி கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொல்லிட்டாரு. ஆனா கரோல் பார்க்கில் அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்காம்" என்று சொல்ல அப்போது திருமதி ஸ்டாலினிடம் "இவருக்கு எல்லா கட்சித் தலைவர்களும் பழக்கம் இவர்கிட்ட நம்ம சொன்னாதான் இவர் எல்லார் கிட்டயும் போய் நம்மள போட்டு கொடுப்பாரு அப்பதான் பிரதமராக சுலபமா முடியும் அதனால இவர் கூட என்ன கொஞ்சம் பேச விடுங்க" என்று மிஸ்டர் ரீல் பற்றி பெருமையாக சொல்ல உடனே திருமதி ஸ்டாலின் அப்ப சரி நல்லா பேசுங்க பேசுங்க என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.

அப்போது மிஸ்டர் ரீல் "நீங்கள் பிரதமர் வேட்பாளர் என்பதை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டு விட்டாரா "என்று கேட்க" அவர் டபுள் ஓகே சொல்லி விட்டார். அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டுதல் குழுத் தலைவராக அண்ணன் நியமித்தால் போதும் என்று சொல்லி விட்டார்" என்று முதல்வர் சொல்ல "அதாவது அவங்க அம்மா பதவியை அவர் கேட்கிறார் அப்படித்தானே "என்று மிஸ்டர் ரீல் சொல்ல முதல்வர் அதே அதே என்றார்.

அப்போது மிஸ்டர் ரீல் "மம்தா பானர்ஜி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி எல்லாம் கிடையாது தனித்துப் போட்டி என்று சொல்லி இருக்கிறாரே "என்று கேட்க "அதெல்லாம் பழைய செய்தி நான் பிரதமர் வேட்பாளர் என்று கேள்விப்பட்டதும் அவர் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு விட்டார். மத்திய அமைச்சரவையில் அவருக்கு அமலாக்கத்துறை மட்டும் வேண்டுமாம் அதை வைத்து சில பாரதிய ஜனதா தலைவர்களை பாடாய்படுத்தனும் அதுதான் என் தேர்தல் அஜண்டா" என்று சொல்லிவிட்டார். இதேபோல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர் மகளுக்கு வருமானவரித்துறை இலாகா கேட்டிருக்கிறார். வருமானவரித் துறையில் பெரிய அளவு வருமானம் எல்லாம் இல்லை அதற்கும் நான் ஓகே சொல்லிவிட்டேன் "என்றார் பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்.

அப்ப கம்யூனிஸ்ட் கட்சி என்று மிஸ்டர் ரீல் கேட்க" கேரள முதல்வர் பினாய் ராய் விஜயன் கூட்டணி தொகுதி ஒரு உடன்பாடு எல்லாம் சம்மதம். ஆனால், என்னை பாரதிய ஜனதா ஆளும் மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க வேண்டும் இன்று நிபந்தனை விதித்தார். அதற்கும் ஓகே சொல்லிவிட்டேன்" என்றார் முதல்வர் ஸ்டாலின்

அப்போது மிஸ்டர் ரீல் "அந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு முடிந்து விட்டதா" என்று கேட்க அதற்கு குஷியாக மிஸ்டர் ஸ்டாலின் "கிட்டத்தட்ட முடிந்து விட்டது அதெல்லாம் பிரச்சனை இல்லை தமிழக கூட்டணிதான் ஒரே குழப்பம் பாமக இருந்தால் நான் இருக்க மாட்டேன் என்றார் திருமாவளவன். அப்போது நான் சரி உங்கள் இஷ்டம் என்று சொன்னேன் உடனே சனாதன சக்தியை எதிர்க்க இந்த கூட்டணியில் இருக்க எனக்கு சம்மதம். ஆனால், எனக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் பாமக பிரச்சாரம் செய்ய கூடாது எனது பக்கத்து தொகுதியை பாமகவுக்கு ஒதுக்க கூடாது என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டேன் வைகோ தனது மகனுக்கு சீட் ஆட்சியில் பாராளுமன்ற சபாநாயகர் பதவி தனது மகனுக்கு வேண்டும் என்று கேட்டார் குறிப்பாக பாராளுமன்றம் சபாநாயகர் பதவி ஏன் என்று கேட்டேன். சபாநாயகர் என்றால் ஊழல் குற்றச்சாட்டு வராது சம்பாதித்தாலும் தெரியாது அமலாக்கத்துறை வருமான வரித்துறை சோதனை எல்லாம் இருக்காது என்று உண்மையில் எனக்கு இதெல்லாம் புது தகவலாக இருந்தது இருந்தாலும் ஓகே சொல்லிவிட்டேன்" என்றார் முதல்வர்.

அப்போது மிஸ்டர் ரீல் "முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தானே "என்று கேட்க வேற யாரும் முதல்வர் பதவிக்கு ஓகே வேற யாரும் இல்லையே என்றபடி உள்ளே நுழைந்த திருமதி ஸ்டாலின் இன்னொரு வீட்டு தகவல் சொல்றேன் கனிமொழி அக்கா மகாராஷ்டிரா ஆளுநர் மாப்பிள்ளை வருங்கால ஜனாதிபதி இப்போதைக்கு பிரதமர் ஆலோசகர் என்று சொல்லிவிட்டு நான் சகஸ்ர நாமம் சொல்லணும் டைம் ஆயிடுச்சு "என்று சொல்லி நகர்ந்து விட்டார்

அப்போது முதல்வருக்கு செல் பேசி ஒலிக்க எதிர்முனையில் இருந்தவர் நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து பேசுகிறேன் ரெண்டு நாளா காலை டிபன் வரல மத்தியான பிரியாணி வரல ராத்திரி பரோட்டா வரல இப்படி இருந்தா நாங்க எப்படி ஓட்டு போடுவது என்று கேட்க அதற்கு முதல்வர் ஸ்டாலின் அன்பு வாக்காளரே தேர்தல் முடிஞ்சி ஓட்டெல்லாம் எண்ணி முடிச்சாச்சு மறுபடியும். 2024 பாராளுமன்ற தேர்தலில் தான் நீங்க எங்களுக்கு தேவை அதுவரை நீங்க உழைத்து தான் சாப்பிடணும் என்று சொல்ல மிஸ்டர் ரீல் பிரதமர் வேட்பாளர் தேர்வு சரிதான் போலிருக்கு என்றபடி எழுந்தார்.