தொடர்கள்
வரலாறு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - ஒரு மறுக்கமுடியாத அவதாரம் 6

20230203210412755.jpg

1930-ல் அவர் கல்கட்டா வின் மேயராக இருந்தபோதே உள்நாட்டில் வரவேற்கத்தக்க பல சீர்திருத்தங்கள் செய்திருந்தார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்து முசோலின் உள்ளிட்டோரை சந்தித்து இந்திய சுதந்திரத்திற்காக உதவி கேட்டார்.

இவ்வாறு பல சம்பவங்கள் மூலம் போஸ் மிகவும் புகழ்பெற்ற தலைவரானார். அவரது புகழ் கண்டு வியந்த மற்ற தலைவர்கள் அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக நிமிக்க பரிந்துரைத்தனர்.

1939 ல் நேதாஜியே மீண்டும் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டது காந்திஜி விரும்பவில்லை. அவருடைய தரப்பினர் ஒத்துழைக்க மறுத்ததால் நேதாஜி பதவியை உதறியதோடு, கட்சியைவிட்டு வெளியேறினார்.

1940-ல் ‘பார்வர்டு பிளாக் என்று ஒரு புதிய கட்சியைத் துவக்கினார். தம்முடைய தீவிரப் போக்கின் காரணமாய் நேதாஜி மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது. சிறையில் இருந்தபோது அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தார்.

அது வெளிநாடுகளின் ஆதரவோடு ஆங்கிலேயரை விரட்டியடிப்பது என்ற தீர்மானம். ஐந்து மாத சிறை வாசத்துக்குப்பின் வீடு திரும்பினார். அவருடைய வீட்டைச் சுற்றிலும் காவல் படையின் ரகசியக் கண்காணிப்பு இருந்தது.

அன்று 1941 ஜனவரி 14. நேதாஜி ஒரு முஸ்லீம் சந்நியாசி போல் வேடமிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். பீகார் சென்று அங்கிருந்து, பெஷாவர், காபூல், மாஸ்கோ, இத்தாலி என்று பயணித்து ஜெர்மனியை அடைந்தார்.

பல இடையூறுகளைக் கடந்து 73 நாட்கள் பயணித்திருந்தார் அவர். ஹிட்லருடன் நடந்த சந்திப்பு பலனளிப்பதாயிருந்தது. ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அப்போது பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியப் படைவீரர்கள் ஜெர்மனியிடம் தோற்று, ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாயிருந்தனர்.

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

பின் பிரபல நாளிதழில் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார். அப்போது பல நாடுகள் நமக்கு ஆதரவு அளித்தது ஆகையால் வெளிநாட்டு மக்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்தார்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கெனத் தனிப் பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார்.

நேதாஜி இராணுவ துருப்புகளை ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் குடியேறியிருந்த இந்தியர்களின் பெரும் ஆதரவையும் பெற்றார்.

மேலும், இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார்.


ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக பர்மா தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக மணிப்பூர் இம்ப்பால் நகரில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

ஆனால் ஆங்கிலேயப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது ஆங்கிலேயரது படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல; ஜப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:

சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், ஜெர்மனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய விடுதலைக்கான போர், ஐரோப்பாவில் ஹிட்லராலும், ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் இங்கிலாதிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த ஆங்கிலேயரின், 'வெளியேறுவது' என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் 'இந்தியாவை விட்டு வெளியேறுவது' என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

அசாத் ஹிந்த் படைக்கு நேதாஜி தலைமை தாங்கியதால், இந்தியாவை நோக்கி அந்த படை முன்னேறியது. அதில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் தவிர மற்ற இரண்டு தீவுகள் ஸ்வராஜ் மற்றும் ஷாஹீத் என்று பெயரிடப்பட்டு முகாமாக மாற்றப்பட்டது, அங்கு சுதந்திர இந்தியாவின் அடையாளமாக இந்திய தேசீய கொடியை பறக்கவிட்டார்.

எனினும் பின்னாளில் இந்திய விடுதலைக்கு முக்கிய காரணம் நேதாஜியின் அணுகுமுறையே எனத் தெரிந்தது.

அதாவது, இந்தியப் படையில் இருந்த இந்திய வீரர்களை இந்திய சுதந்திரத்திற்கு உந்துதல் செய்தது தான்.

அடுத்த வாரம், ஹிட்லரிடமே தன் கெத் காட்டிய நேதாஜியைப் பார்ப்போம்.