தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230203184415370.jpeg

ஜனநாயகம் தான் நமது அடையாளம் தொல்.திருமாவளவன்.

ஈரோடு கிழக்குத் தேர்தலில் பணநாயகம் தான்னு மாத்திட்டாங்க தலைவரே

மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்க மக்கள் நீதி மையம் முடிவு.

பூத் கமிட்டி அமைக்கிற அளவுக்கு நமக்கு தொண்டர்கள் வேண்டுமே தலைவரே

பிரதமர் நரேந்திர மோடி உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.

போகும்போது அந்த மதுரை எய்ம்ஸ் செங்கல்லை எடுத்துட்டு போனார் தானே

அதானி விவகாரத்தை மக்களவையில் ஆயிரம் முறை எழுப்புவோம் ராகுல் காந்தி.

அப்ப ஆயிரம் முறை பாராளுமன்றத்துக்கு நீங்க போயே ஆக வேண்டும் தலைவரே பார்த்து பேசுங்க.

ஹவாய் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் பிரதமர் மோடி.

ஹவாய் செருப்புக்கு ஜிஎஸ்டி இருக்கா இல்லையா அமைச்சரே

நாங்கள் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 98.5% நிறைவேற்றி விட்டோம் ஆந்திர முதல்வர்.

ஆந்திர முதல்வர் கூட முரசொலி படிப்பார் போல தெரியுது.

இன்னும் எனக்கு சொந்த வீடு இல்லை ராகுல் காந்தி.

இந்தியாவில் இல்லை என்று சொல்லுங்க தலைவரே

தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஒன்று சேர வேண்டும் முதல்வர் ஸ்டாலின்.

இதாங்க மேட்டர் வேற ஒன்னும் இல்ல மக்கள் பிரச்சனை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்.

தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத சிலர் ஆவலாக உள்ளனர் கமலஹாசன்.

இப்ப எல்லோரும் சரித்திரம் பற்றிய பேசுறாங்க படிக்கும் போது யாரும் சரித்திரத்தை படிச்சது இல்ல போல தெரியுது.

பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏன் இருக்கக்கூடாது, ஃபரூக் அப்துல்லா

எதிர்க்கட்சி வேட்பாளர் பட்டியலில் கூடுதலாக இன்று இன்னொருவர் சேர்ப்பு

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் பீட்டர் அல்போன்ஸ்

அண்ணே அந்த அளவுக்கு பட்ஜெட் கட்டுபடி ஆகாது அண்ணே

மூன்று மாநில தேர்தலிலும் பணம் செலவு செய்துதான் இந்த வெற்றியை பாஜக கைப்பற்றி இருக்கிறது பீட்டர் அல்போன்ஸ்.

திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாதிரியே அண்ணன் பேசறார்.

ஜேபி நட்டாவுக்கு நீங்கள் தரும் மரியாதையை விட மல்லிகாஜூன கார்கேவுக்கு நாங்கள் தரும் மரியாதை கூடுதலாகவும் கூடுதல் உரிமையும் வழங்கப்படுகிறது.- கார்த்தி சிதம்பரம்

ஆக தலைவருக்கான அதிகாரம் அவருக்கு இன்னும் தரல அதான் மேட்டர்

இந்த வெற்றிக்கு திமுக அமைச்சர்கள் கனிமொழி கமல் ஆகியோர் பங்கு முக்கியம் இ வி கே எஸ் இளங்கோவன்.

அதாவது காங்கிரஸ் பங்கு எதுவும் இல்லை என்று சொல்கிறார்.

கூட்டணிக்கு யார் தலைமை என்பது இப்போதைய கேள்வி அல்ல மல்லிகார்ஜுன கார்கே

ராகுல் காந்தி தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம் என்கிறாரே மம்தா பானர்ஜி

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்வு

இதெல்லாம் ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும் வழக்கமா நடக்கிற நடைமுறை தானே இது என்ன புதுசா

தமிழைத் தேடி எனது பயணம் தொடரும் டாக்டர் ராமதாஸ்.

தேடிப் பாருங்க கிடைச்சா தகவல் சொல்லுங்க.