சவால்கள் நிறைந்த இவ்வுலகில் சக்தி வாய்ந்த பெண்களாக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்த ஐவரைப் பற்றிய சிறு தொகுப்பு இது .
லீனா நாயர்: பிரெஞ்சு ஃபேஷன் ஹவுஸ் சேனல் (French Fashion House Channel) என்கிற நிறுவனத்தின் சிஇஓ-வாக லீனா நாயர் பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன் கடந்த 30 ஆண்டுகளாக யூனிலீவர் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை தலைமை அதிகாரியாகவும், நிர்வாக குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அழுத்தங்கள் அதிகம் நிறைந்த இத்துறையில் லீனா நாயர் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவரது எளிய புன்னகை அணுகுமுறையால், எல்லாவற்றையும் சிறப்பாக சமாளித்து வந்திருக்கிறார். இதுவே, கடந்த ஆண்டுகளில் மிக சிறந்த பெண்மணியாக தேர்வானதற்கு முக்கிய காரணம் என்கின்றனர்.
பல்குனி நாயர்: நைகா (Nykaa) ஃபேஷன் நிறுவனத்தை துவங்கி பால்கனி நாயர் மாபெரும் வெற்றி கண்டுள்ளார். தற்போது இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இதனால் இந்தியாவின் சுயமாக முன்னேறிய மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். மேலும், நைகா நிறுவனத்துக்குச் சொந்தமான FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் சுமார் 53 சதவீத பங்குகளையும் பல்குனி நாயர் வசம். இதன் ஒரு பங்கின் ஆரம்ப விலை ₹2 ஆயிரத்திலிருந்து உயர்ந்து, தற்போது ஒரு பங்கின் சர்வதேச மதிப்பு $6.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.
கீதா கோபிநாத்: சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக சமீபத்தில் கீதா கோபிநாத் பொறுப்பு வகித்து வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத், அடுத்த ஆண்டு ஜெஃப்ரி ஒகமோட்டோ நிறுவனத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார். மேலும் இவர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் பொருளாதாரப் பேராசிரியராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திவ்யா கோகுல்நாத்: பைஜுஸ் (Byju's) நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் திவ்யா கோகுலத்தில் பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 4.05 பில்லியன் டாலர் மதிப்புடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ருச்சி கல்ரா: ஆஃப் பிசினஸ் (OfBusiness) என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனராக ருச்சி கல்ரா இருந்து வருகிறார். இவரது கணவரின் ஸ்டார்ட்-அப் யுனிகார்ன் போஸ்ட் சாஃப்ட் பேங்க், ருச்சி கல்ரா தலைமையில் $160 மில்லியன் நிதியாக மாறியுள்ளது. ஆஃப் பிசினஸ் நிறுவனமானது, உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் கவனம் செலுத்தி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மூலப்பொருள் கொள்முதல் மற்றும் கடன் வசதிகளை வழங்கும் தொழில்நுட்பம் சார்ந்த இணையதளதளம்.
பெண்மை வெல்க ,மகளிர் தின வாழ்த்துக்கள் !
Leave a comment
Upload