உலர்ந்து போகாத
குளுமை மூலம்
தனக்கும்
ஏதோ ஒரு
நதிக்குமான
நெடுங்கால உறவை
எடுப்பவர் கரங்களிலெல்லாம்
உணர்த்திக் கொண்டே
இருந்தது
அலமாரியில் வீற்றிருக்கும்
கருங்கூழாங்கல்.
Leave a comment
Upload