தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 16 -ரமேஷ்எத்திராஜன்

20221109175248289.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

பாமர மக்களுக்கு எளிதில் புரியும் படி
தான் கூற வந்த கருத்தை
மனதில் காட்சியாய்க்
கண் காட்சியாய் எளிய நடையில்
கவிச்சக்கரவர்த்தி பாடிய
பால காண்டத்தின் கையடைப்
படலப் பாடல்

எண் இலா அருந்தவத்தோன்
இயம்பிய சொல்
மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில்
கனல் நுழைந்தா
வெனச் செவியில் புகுதலோடும்
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த
ஆர் உயிர் நின்று ஊசலாட
கண் இலான் பெற்று இழந்தான்
என உழந்தான்
கடுந்துயரம் காலவேலான்


கரிய செம்மல், அதாவது ராமனை
என்னுடன் அனுப்புங்கள் என
விஸ்வாமித்திரர் உரைத்த சொல்லானது.

மார்பில் வேல் எறிந்ததால் உண்டான
புண்ணாகிய புழையில் கனன்று கொண்டிருக்கும் தீப்பிழம்பு நுழைந்தது போல தனதுகாதுகளில் புகுந்து, உயிர் ஊசலாட

பிறவிக்குருடன் இடையில் கண்
பெற்று மீண்டும் இழந்தால் எவ்வாறு
துன்பப் படுவானோ அது போல
பிள்ளை இல்லாத தயரதன் ராமனைப்
பெற்றுப் பிரிவதால் பெரும் துன்பம்
அடைந்தான் என்பதே இப் பாடலின்
பொருள்


இதில் தயரதன் பட்ட துன்பத்தை
மிக எளிமையாக எளிதாக நம்
மனக்கண்ணில் காட்சிப்படுத்திய
விதம் மிகவும் சிறப்பானது

தயரதன் சிரவணனை அம்பால்
கொன்று பெற்றோர் இட்ட
சாபத்தை உள் நிலாவிய துன்பம்
என்ற சொல்லால் நாட்டு மக்கள்
புரியும் படி கவி பாடிய
கவிச்சக்கரவர்த்தியைப் பாராட்டி
வாயார வாழ்த்தி மகிழ்வோம்

மீண்டும் சந்திப்போம்...