தொடர்கள்
அரசியல்
ஹெலிகாப்டர் கோர விபத்து - முப்படை தளபதியை இழந்து முதல் வருடம் - ஸ்வேதா அப்புதாஸ்

20221110151127600.jpeg

கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி பகல் நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி இடையே உள்ள நஞ்சப்பன் சத்திரம் கிராமத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கருகி போனது .

அந்த ஹெலிகாப்டர் கோவை சூலூர் விமான தளத்தில் இருந்து முப்படை தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி மதுலிகா மற்றும் உடன் பயணித்த 14 அதிகாரிகள் உடல் கருகி இறந்த சோகத்தில் இருந்து அந்த கிராமம் இன்னும் மீளவில்லை .

20221110151158451.jpeg
இந்த விபத்து குறித்து விமான படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் மோசமான வானிலை தான் முக்கிய காரணம் என்றும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் எந்த வித தொழில்நுட்ப கோளாறும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது .

மேலும் இது குறித்து எந்த விளக்கமும் ராணுவ ரகசியமாகி போய்யுள்ளது .

கடந்த 5 ஆம் தேதி திங்கட்கிழமை காட்டேரி நஞ்சப்பன் சாத்திரத்தை கடந்து ஒரு ஹெலிகாப்டர் பறந்து வர குன்னூர் வாசிகள் சற்று பயத்துடன் வானத்தை அண்ணாந்து பார்த்தனர் .
முப்படை தளபதி ஜெனரல் .அனில் சவ்க்ஹான் வெல்லிங்டனில் உள்ள முப்படை பயிற்ச்சி ராணுவ கல்லூரிக்கு ஆய்வு செய்து பயிற்ச்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார் .

20221110151443720.jpeg
கடந்த வருடம் நடந்த கோரா விபத்து நடந்த நஞ்சப்பன் சத்திரத்திற்கு முப்படை தளபதி விஜயம் செய்வார் என்று எதிர் பார்த்தனர் ஆனால் அவர் டெல்லி சென்று விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியான ஒன்று . முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி மற்றும் 14 உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்க படும் என்று எதிர்பார்ப்பு கனவாகி போனது .

2022111015150879.jpeg
அதே சமயம் விபத்து நடந்த குன்னூர் நஞ்சப்பன் சத்திர கிராமத்திற்கு முப்படை தளபதி மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் , தமிழக அமைச்சர்கள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்பதும் கனவாகி போனது .
8 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ராணுவ கல்லூரி முதல்வர் லெப்டெனன்ட் ஜெனரல் .வீரேந்திர வாட்ஸ் ,இராணுவ அதிகாரிகள் சிலர் , நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் இறந்தவர்களின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்து விட்டு அந்த கிராமத்து மக்களுக்கு நல திட்ட உதவிகள் செய்து விட்டு விடைபெற்றனர் .
கடந்த ஒரு வருடமாக விபத்து நடந்த கிராமத்து மக்களுக்கு மாதந்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது தான் எதற்கு என்று இது வரை தெரிய வில்லை என்கின்றனர் .

20221110151357273.jpeg
இந்த கிராமத்து கவுன்சிலர் ரமேஷ் கூறும் போது , " எங்க கிராமத்தில் கடந்த வருடம் இதே நாளில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து அதில் பயணித்த 14 பேர் முக்கியமாக முப்படை தளபதி பிபின் ராவத் அவரின் மனைவி பரிதாபமாக இறந்த நிகழ்வு இன்னும் எங்க கண்முன்னே இருக்கிறது .மருத்துவ முகாம் நடத்தி மருந்து கொடுத்தார்கள் .அதே சமயம் நாங்கள் கேட்ட எதுவும் நடக்கவில்லை .
காட்டேரி பூங்காவுக்கு பிபின் ராவத் மதுலிகா பூங்கா என்று பெயரிட வேண்டும் . நஞ்சப்பன் சத்திர கிராமத்திற்கும் அவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் ஜனாதிபதி வரை கடிதம் எழுதி இது வரை எந்த பதிலும் இல்லை .பிபின் ராவத் அவர்களின் திருஉருவ சிலையை இந்த கிராமத்தில் அமைக்க வேண்டும் என்ற குரலுக்கும் எந்த பதிலும் இதுவரை இல்லை . இந்த கிராமத்தை விரைவில் ராணுவம் மறந்து போனாலும் ஆச்சிரிய படுவதற்கு இல்லை " என்று கூறினார் .

20221110151530967.jpeg
குன்னூர் மார்க்கெட் வியாபாரி முபாரக் நம்மிடம் பேசினார் , " விபத்து நடந்த அன்று நானும் எங்க நண்பர்கள் இணைந்து ஸ்பார்ட்டிற்கு விரைந்து சென்று எல்லா உடல்களையும் மீட்டு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றோம் .எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம் .இந்த விபத்தில் பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் இறந்த தளபதியின் உருவ படம் தாங்கிய சான்றிதழ் கேட்டோம் இதுவரை எந்த பதிலும் இல்லை .இந்த முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு கூட எங்களை அழைக்க வில்லை என்பது வருத்தமான விஷயம் .நாங்கள் குன்னூர் மார்க்கெட்டில் சிறப்பு அஞ்சலி நிகழ்வை நடத்தி முடித்தோம் . ஒரு விஷயம் விரைவில் ராணுவம் நஞ்சப்பன் சத்திர கிராமத்தை மறந்து விடுவார்கள் என்பது உண்மை .எங்களால் அந்த மோசமான விபத்தை மறக்க முடியாது ." என்று வருத்தமுடன் கூறினார் .

20221110151607395.jpeg
முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் அவர் மனைவி மற்றும் இறந்த அதிகாரிகளின் உருவ படங்கள் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி கிராம மக்கள் கண்ணீர் சிந்தினர் .

20221110151642146.jpeg
நஞ்சப்பன் சத்திரம் மற்றும் நீலகிரி மக்களின் நினைவில் என்றும் இவர்கள் இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று .