தொடர்கள்
பொது
டபுள் டக்கர் மெட்ரோ - மாலா ஶ்ரீ

20221110080346848.jpg

மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டம், வர்தா சாலையின் ஒற்றை நெடுவரிசையில் நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் ரயில் பாதையுடன் கூடிய 3.14 கிமீ நீளமுள்ள இரட்டை அடுக்கு வைடக்ட் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கி, கடந்த 6-ம் தேதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரிஜேஷ் தீட்சித் பேசுகையில், "வார்தா சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவது பெரும் சவாலாக இருந்தது. இது, மூன்று அடுக்கு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலே மெட்ரோ ரயில், நடுவில் நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் தரைமட்டத்தில் இருக்கும் பிரதான சாலை ஆகியவை அடங்கும்!" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாக்பூரில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த NHAI மற்றும் மகா மெட்ரோ ரயில் திட்ட குழுவினருக்கு, அன்றைய தினமே தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

20221110080658478.jpg

மகா மெட்ரோ ஏற்கெனவே ஆசியா மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுகளில் மிக நீளமான டபுள் டெக்கர் வையாடக்ட் மட்டுமின்றி, டபுள் டெக்கர் வையாடக்டில் கட்டப்பட்ட அதிகபட்ச மெட்ரோ ரயில் நிலையங்களுக்காகவும் சான்றிதழ் பெற்றுள்ளன எனக் குறிப்பிடத்தக்கது.

(இந்தி தெரியாது போடா என்று சொல்லாமல் காணொளியைப் பார்க்கலாம். டபுள் டக்கர் மெட்ரோ உண்மையில் டபுளோ டபுள் டக்கர் தான்)