காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை தட்டி வந்திருக்கிறது.
இதில் பல அதிசய நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ஒன்று " தடை தாண்டு ஓட்டம்" Steeple chase " தெரியுமா, தடை தாண்டும் ஓட்டம் மாதிரியேதான்,ஆனா,அதை விட அதிக உயரம் கொண்ட தடைகளும்,3000 மீட்டர் தூரமும் ஒடனும்.
இந்தியர்கள் என்னைக்குமே பெருசா இந்த டிராக் & ஃபீல்டு பகுதில ஜெயிக்கறது இல்லை, குறிப்பா ஓட்ட பந்தயங்கள். பி டி உஷாவுக்குப் பின் யாரும் பெரிய அளவில் பெயர் பெறவில்லை.
அதுவும் இது மாதிரி தூரம் அதிகமாக இருக்கும் ஓட்ட பந்தய போட்டிகளில்,கென்யா, எத்தியோப்பியா வீரர்கள்கிட்ட வழக்கமாக ஓட்ட பந்தயங்களில் தூள் கிளப்பும் அமெரிக்கா, கனடா, ஜமைக்கா மாதிரி நாட்டுகாரங்க கூட நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போறது உண்டு.
சென்ற வாரம் நடந்த காமன்வெல்த் ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் மொத்தம் 9 பேர்,3 கென்யா நாட்டுகாரங்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இந்தியான்னு. இதுல போட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கென்யாக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம். 4வதுல இருந்து 9வது எடத்துக்குதான் போட்டின்னு கமெண்டரி சொல்றாங்க.
ஏன்னா, கென்யா நாட்டுக்காரங்க பண்ணி வச்சு இருக்கற ரெக்கார்டு அந்த மாதிரி,கடந்த 30 வருஷமா கென்யா தவிர வேற எந்த நாடும் ஸ்டீப்பில் சேஸ்ல மெடல் வாங்கவே முடியல, தங்கம், வெள்ளி,வெண்கலம்ல கென்யான்னு பேர் அடிச்சிட்டுதான் போட்டியே ஆரம்பிச்சு இருக்காங்க,அந்த அளவுக்கு இந்த ஓட்டப்பந்தயத்தில கில்லி கென்யா.
சென்ற வாரம் அதே கதிதான், இவங்கள ஜெயிக்க யாரும் இல்லைன்னு சொல்லி போட்டி ஆரம்பிக்க, 2வது நிமிஷத்துல 3 கென்யா வீரர்கள் பட்டைய கிளப்பிட்டு ஓட ஆரம்பிக்க, மத்த நாட்டு வீரர்கள் எல்லாம் கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு எங்கேயும் இல்லை. ஆனா, ஒரே ஒருத்தர் மட்டும் விடாம 4வது எடத்துல கென்யா வீரர்கள் பின்னாடியே ஓடிட்டு இருந்தார் அவர்தான் இந்தியாவோட "அவினாஷ் சாப்லே"
கமெண்ட்டரில.."பரவாயில்லை இந்தியாக்கு மெடல் அடிக்க வாய்ப்பு இல்லேன்னாலும், அவங்க நேஷனல் பெஸ்ட் இன்னிக்கு கெடைக்கும், இந்தியா வீரர் இப்படியே தாக்கு புடிக்க முடிஞ்சா 4வது இடம் உறுதி, இந்தியர்களும் எப்போவுமே இந்த நெடுந்தூரம் ஓடும் பந்தையத்தில் ஜெயிச்சது இல்லை, 30 வருஷத்துக்கும் மேல கோல்ட், சில்வர், பிரான்ஸ் பதக்கங்களை கென்யாகாரனை தவிர யாருமே தொட்டது இல்லைன்னு சொல்லிட்டு சிரிச்சிட்டே ...இந்தியா வீரருக்கு மெடல் கெடைக்கணும்னா முன்னாடி ஓடிட்டு இருக்கற கென்யா வீரர்கள் யாருக்காவது ஏதாவது ஆனாதான்" பேசிகிட்டே போக.....
அவினாஷ் சாப்லே மட்டும் விடாம 4வது எடத்துல ஓடிகிட்டே இருந்தார். கென்யா வீரர்கள நெருங்க கூட முடியல, எட்டி படிக்க முடியாத தூரத்துல முதல் கென்யாகாரன் பறந்துட்டு இருக்க, விடாம ஓடிட்டு இருந்தார் சாப்லே....
கடைசி சில நூறு மீட்டர்தான் இருக்கு,இன்னுமும் 3 கென்யா வீரர்கள் முன்னாடி,ஒரு தடை மேல ஏறி எல்லோரும் குதிக்க அவங்க கூடவே அவினாஷ் காலும் இறங்கிச்சி, தமிழ் சினிமா ஹீரோ கடைசில எல்லோரையும் தாண்டி ஒடற மாதிரி, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல,அவினாஷ் ஒவ்வொரு கென்யாகாரனா தாண்ட ஆரம்பிக்க, முன்னாடி தங்க பதக்கத்துக்கு ஓடிட்டு இருந்த கென்யாகாரன் யார்ரா நீ, எங்க இருந்துடா வந்தேன்னு ஒரு நிமிஷம் திரும்பி பாத்து ஓட, தங்கத்துக்கு குறி வச்சு ஓட ஆரம்பிச்சார் அவினாஷ்,கடும் போட்டி,கடைசி தடை தாண்டி ஓடும்போது இந்தியாவா? கென்யாவா? யாருக்கு கோல்டுன்னு மொத்த ஸ்டேடியமும் பத்திகிச்சு.
கமெண்டரி சொல்லிட்டு இருந்தவங்க வாயடச்சு போக...
கடைசியில் வெறும் 0.05 நொடிகள் வித்தியாசத்தில் கென்யா கோல்ட் அடிக்க, அவினாஷ் சாப்லே சில்வர்.
30 வருஷமா எந்த நாட்டுக்காரனும் சாதிக்க முடியாத,உடைக்க முடியாத இரும்பு கோட்டைய ஒடச்சது ஒரு இந்திய ராணுவ வீரர் அவினாஷ் சாப்லே. விகடகவி குடும்பத்தின் சல்யூட் & வாழ்த்துகள் !
அந்த வெள்ளி நொடிகள்..இங்கே.........நெகிழ வைக்கும்....
Leave a comment
Upload