தேசிய கட்சியாக ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட்ட எல்லா இடங்களிலும் டெபாசிட் பறிபோனது. இதையடுத்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது, ஆட்சியும் அமைத்துள்ளது. பாரம்பரிய கட்சியான அகாலி தல் மற்றும் சிரோன்மணி அகாலி தள் இரண்டு கட்சிகளையும் தோற்கடித்தது. இதுதவிர பாரதிய ஜனதா காங்கிரஸ் கட்சி இரண்டு கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்போம் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். இது நடந்தது பஞ்சாபில் கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து மாநில கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. இப்போது கேஜ்ரிவால் கவனம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் பக்கம் திரும்பியிருக்கிறது. குஜராத்தில் தேர்தல் நடக்க இன்னும் ஆறு மாதங்கள் இருந்தாலும் அவர் அங்கு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். குஜராத்தில் கேஜ்ரிவால் நடவடிக்கையை பாரதிய ஜனதா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏற்கனவே டெல்லி பஞ்சாப் கோவா ஆகிய 3 இடங்களில் தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்திருக்கிறது. இன்னும் ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றால் அது தேசிய கட்சி ஆகிவிடும். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு ஆம் ஆத்மி கட்சிக்கு பிரகாசமாக இருக்கிறது. இப்போதைக்கு ஆம் ஆத்மி கட்சி எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் வாக்கு வங்கி கபளீகரம் செய்கிறது. எதிர்காலத்தில் தேசிய அளவில் ஆம் ஆத்மி கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர வாய்ப்பிருக்கிறது.
அப்பாவிகள் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் பலர் அப்பாவிகள் காவல்துறை வேண்டுமென்றே கைது நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் காவல்துறை டிஜிபி இடம் புகார் மனு தரப்பட்டிருக்கிறது. வழக்குகளில் சம்பந்தமில்லாத அவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக திருமாவளவன் அறிவித்திருக்கிறார்.
சேலம் டவுன் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரியும் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் பள்ளி வளாகத்தை ஒட்டிய குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பட்டதாரியான அந்த இருவரும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 4 தேர்வு எழுத கள்ளக்குறிச்சி ஐ ஏ எஸ் அகாடமியில் மாதிரி தேர்வில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது வழிமறித்த காவல்துறை அவர்களது ஹால்டிக்கெட்டை கிழித்துப் போட்டுவிட்டு அவர்கள் செல்பேசிகளை பறித்துக்கொண்டு கைது செய்தது, இதனால் அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை தற்போதைய துப்புரவுத் தொழிலாளி தம்பதிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு தந்திருக்கிறார்கள் அவரும் விசாரித்து தக்க நடவடிக்கை கூடவே கலவரம் நடந்தபோது கள்ளக்குறிச்சி ஐ ஏ எஸ் அகாடமியில் அவர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருந்த காணொளி காட்சியையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.
இதன் நடுவே பள்ளி நிர்வாகிகள் சிறையிலிருக்கும் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது கணவர் புகார் மனு தந்திருப்பது தனிக்கதை அதேபோல் பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சான்றிதழ்களை எரிக்கும் ஒரு வீடியோ வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம் பெண்ணுரிமை என்பதெல்லாம் பேச்சோடு சரி என்பது உண்மைதான். தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் கணவர் அல்லது உறவினர்கள் தான் ஆட்சி அதிகாரம் செய்கிறார்கள் என்பதை ஊடகங்கள் பலமுறை ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறது சில பெண் மேயர்கள் கூட அலங்காரப் பதவியாக வந்து போகிறார்கள் தவிர அதிகாரம் எல்லாம் அவர்கள் கணவர் தான்.
இப்போது அடுத்த கட்டத்திற்கு போய் மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் சார்பாக அவர்களது கணவர் சகோதரர் தந்தை ஆகியோர் பதவி பிரமாணம் எடுத்த காட்சிகள் இப்போது வெளியாகி இருக்கிறது இதைத்தொடர்ந்து அந்த உள்ளாட்சிகளில் பணியாற்றும் செயலாளர் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ஆனால் பதவியேற்பு பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களின் உறவினர்கள் இதெல்லாம் ஒரு விஷயமா எங்கள் வீட்டுப் பெண்கள் வெளியே வரமாட்டார்கள் அவர்களுக்கு இது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது அரசு பெண்களுக்கு என்று ஒதுக்கிய வார்டுகளில் எங்களுக்கு பதில் அவர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள் அவ்வளவுதான் என்கிறார்கள்.
தமிழ் வழி கல்வி
சி எஸ் ஐ ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குனராக மூத்த விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி பதவி ஏற்றிருக்கிறார். திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கலைச்செல்வி அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்விதான். தமிழ்மொழியில் படித்ததால் தான் என்னால் அறிவியல் கருத்துக்களை புரிந்து கொள்வது எளிதாக இருந்தது என்று கருத்து தெரிவிக்கிறார். கலைச்செல்வி 125 ஆய்வுக் கட்டுரைகள் ஆறு காப்புரிமைகளையும் தன் வசம் வைத்திருக்கிறார்.
ஐயோ பாவம்
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அப்படியிருந்தும் பிடிவாதமாக எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்க்கெட் ஆல்வா துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸ் இந்த தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் புறக்கணிப்பதாக அறிவித்தது. துணை ஜனாதிபதி தேர்தலில் ஜெகதீப் தன் கர் பாரதிய ஜனதா வேட்பாளர் 528 வாக்குகளும் மார்கரெட் ஆல்வா 182 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் மார்க்கெட் ஆல்வா தனது ட்விட்டர் பக்கத்தில் சில கூட்டணிக் கட்சிகள் கொள்கைகளை சிதைக்கும் வகையில் நேரடியாக அது மறைமுகமாக பாரதிய ஜனதாவை ஆதரித்தது. அந்தக் கட்சிகளும் அதன் தலைமையும் இதன்மூலம் நம்பகத் தன்மையைக் கெடுத்துக் கொண்டு விட்டார்கள் குறிப்பிட்டிருக்கிறார் மார்க்கெட் ஆல்வா.
Leave a comment
Upload