வடிவேலுவின் தங்கச்சி பாசம்
நடிகர் வடிவேலுக்கு ஆறு வயது குழந்தைகள் முதல் 60 வயது மூத்த குடிமகன் வரை எல்லோரும் அவரது ரசிகர்கள் தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நடிகர் வடிவேலு. தற்சமயம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் சந்திரமுகி பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பண்ணாரி அம்மன் கோயில் சாமி தரிசனம் செய்த போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அங்கிருந்த தூய்மைப் பணியாளர் பெண்மணி ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்ப வடிவேலு நீ தாம்மா என் தங்கச்சி என்று பாசத்தோடு அழைத்து அரவணைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்போது அந்த புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது.
தெலுங்கு பட வசூல்அள்ளுகிறது
இப்போதெல்லாம் தெலுங்கு படம் தான் வசூலை அள்ளுகிறது. ஏற்கனவே பாகுபலி, புஷ்பா, ரா ரா ரா என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் பூஜை போது தமிழ், இந்தி, மலையாளம் என்று பிளான் பண்ணி விடுகிறார்கள். இப்போது சீதாராமம் என்ற படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மூன்று நாளில் 25 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. இந்தப் படத்தில் நாயகன் துல்கர் சல்மான் இது தவிர இந்தி நடிகை மிருணாள் தாகூர் கௌதம் மேனன் பிரகாஷ்ராஜ் போதாதற்கு முக்கிய வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம் ஒரு காதல் கதை இப்போதைக்கு தமிழ் சினிமாவில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் தெலுங்கு சினிமா தான்.
ஐயோ பாவம் சூரி
விருமன் படவிழாவில் பேசும் போது நடிகர் சூரி ஆயிரம் கோயில் கட்டுவதை விட அன்னசத்திரம் கட்டுவதை விட ஒரு மாணவனின் கல்விக்கு செலவிடுவது சிறந்தது என்று பேச உடனே இந்து அமைப்புகள் ஏன் கோயில் என்று சொல்கிறீர்கள் மசூதி என்று சொல்லுங்கள் சர்ச்சு என்று சொல்லுங்கள். 700 ரூபா செலவு பண்ணி சினிமா பார்ப்பதை விட ஒரு மாணவனுக்கு செலவு செய்வது சிறந்தது என்று பேசுங்கள் என்று ஏகத்துக்கு கலாய்க்க சூரி கொஞ்சம் பயந்து போய் அடுத்த பட விழாவில் நான் அப்படி சொல்லவில்லை நானே சாமி கும்பிடுவேன் கோயிலுக்குப் போவேன் எனக்கு படிப்பறிவு கிடையாது இப்பவும் சொல்றேன் எல்லோருக்கும் கல்வி அவசியம் மதுரை மீனாட்சி எல்லோருக்கும் கல்வி தரட்டும் என்று ஒரு மாதிரி சமாளித்து விட்டார்.
ஊதிய உயர்வு
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ஒரு கோடியிலிருந்து 4 கோடிக்கு உயர்த்தி விட்டார். நடிகர் விஜயின் வாரிசு படத்திலும் இவர் தான் ஜோடி அங்கும் அதே சம்பளம் தான்.
மாளவிகா மோகனன் பிறந்தநாள்
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன் நடிகை சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதில் கில்லாடி. ஆகஸ்ட் 6ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் சேதுபதி அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து சொன்னார். அப்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து கவர்ச்சி உடையில் மாளவிகா எடுத்துக் கொண்ட படங்கள் இப்போது பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்திக்கு ஆதரவு
லால் சிங் சத்தா என்ற அமீர்கான் நடித்த இந்தி படம் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. வழக்கப்படி உதயநிதி ஸ்டாலின் தான் இந்தப் படத்தையும் திரையரங்கு உரிமை வாங்கி இருக்கிறார். இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் குறிப்பிடும் போது வீடியோ காலில் அமீர்கான் வந்து என்னை இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார் . இந்தியை விட்டு வைப்போம் என்று நினைத்தேன் ஆனால் நான் அமீர்கான் ரசிகர் எனவே ஓகே சொன்னேன் என்றார். அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் இந்திப் படத்தை வெளியிடலாமா என கேட்டபோது நாங்கள் இந்தித் திணிப்புக்கு தான் எதிரி இந்திக்கு அல்ல என்று சமாளித்தார் உதயநிதி ஸ்டாலின்.
Leave a comment
Upload