தேசிய அளவில் கவனம் பெறும் மதுரை தமிழக நிதி அமைச்சர்.
அப்ப வரி விதிப்பு கடுமையா இருக்கும்ன்னு சொல்லுங்க
ஹிந்தி மொழி கற்கலாம் தவறில்லை உதயநிதி ஸ்டாலின்.
ஆமா இந்திப் பட விநியோக உரிமையை நாங்க தான் இனிமேல்.
ஆளுநரிடம் நான் அரசியல் பேசினேன், ஆனால் அதை இப்போது உங்களிடம் சொல்ல மாட்டேன் ரஜினிகாந்த்.
நீங்க எங்க லிஸ்டிலேயே இல்லையே.
காலத்தின் தேவை கருதி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் டி.ராஜா
ஒன்னும் பிரச்சனை இல்ல தொகுதி எண்ணிக்கை குறைச்சுரு வாங்க வருமானமும் குறையும் பரவால்லியா
இலவச வேட்டி சேலை திட்டத்தை கைவிட திமுக அரசு திட்டம் அண்ணாமலை.
ஒன்றிய அரசின் பிரதமர் இலவசம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் ஒரு வேளை அதனால் இருக்குமோ
தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை தமிழகம் வரட்டும் கே.எஸ்.அழகிரி
அவங்க தான் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போறாங்களே என்கிறார் கார்த்திக் சிதம்பரம்
மத்திய மாநில அரசு ஒன்றுபட்டால் ஜி எஸ் டி வசூலை அதிகரிக்க முடியும் பிரதமர்
அதாவது ஒற்றுமை இருந்தால் இன்னும் அதிகமாக வரி போடலாம்னு சொல்றாரு
மின் கட்டண உயர்வு பொது மக்களின் கருத்து கேட்க முடிவு
மின் கட்டணத்தை குறைக்கலாம் என்று மக்கள் கருத்து சொன்னா? ?!!!!
ஓபிஎஸ் உடன் இணைவேன் டிடிவி தினகரன்
அதான் எங்களுக்கு தெரியுமே சசிகலா வீட்டுக்கு ஏன் போக மாட்டேங்கறீங்க அதை சொல்லுங்க
பீகார் ஆட்சிமாற்றம் ஒரு நல்ல ஆரம்பம் அகிலேஷ் யாதவ்
ஆனால் உத்தரபிரதேசத்தில் எதுவுமே மாற மாட்டேன் என்கிறது
பீகார் அரசு விரைவில் கவிழும் பாரதிய ஜனதா
அப்ப ரிசார்ட் ஏதோ ரெடி ஆகுதுன்னு சொல்லுங்க
முன்னணி நட்சத்திரங்கள் படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் திரையிட வேண்டும் திரையரங்கு உரிமையாளர் சங்கம்.
எட்டு வாரம் திரையரங்கில் படம் ஓடனுமே அந்த பிரச்சனை இருக்கே
அதிமுக பிரச்சனைக்கு திமுகதான் காரணம் சசிகலா.
அப்ப எடப்பாடி சொல்வது உண்மைதான்.
Leave a comment
Upload